வல்லமையுள்ள ஜெயவீரர்
THE MIGHTY CONQUEROR
Jeffersonville Indiana U.S.A.
56-04-01M

1. ஞானஸ்நான ஆராதனை.....அவர்கள் குளத்தை நிரப்பி இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இராப்போஜனமும் கால்கள் கழுவுதலும். இங்கிருப்பவர்களில் எத்தனைப் பேர் கால் கழுவுதலில் எல்லா நேரங்களிலும் இருந்திருக்கிறீர்கள்-? உங்கள் கரங்களை நாங்கள் காணட்டும். ஓ, என்னே-! இக்காலையில் இங்கு இருக்கின்ற அந்த - அந்த பாப்டிஸ்டு சபையோரைப் பாருங்கள்.
2. "பாதம் கழுவும் பாப்டிஸ்டு சபையோர்” என்று அவர்கள் கூறுவார்கள் என்று அறிவீர்கள். காரியம் என்னவென்றால் பாதம் கழுவும் பாப்டிஸ்டு சபைக்கு நான் வழக்கமாக சென்று இருந்தாலும், அவர்கள் ஒரு காலை மாத்திரம் கழுவுகின்றனர். ஒரே காலை மாத்திரம், மேலும் இங்கு நாம் இரு கால்களையும் கழுவுகிறோம். ஆகையால் நமக்கு ஒரு இரட்டத்தனையான ஆசீர்வாதம் இருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களா-? ஆகையால் அதில் ஒன்றைவிட இரண்டு ஆசீர்வாதங்கள் இருக்கிறது. ஒரு காலைக் கழுவுவதே ஆசீர்வாதமாக இருக்குமானால், நீங்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முயற்சி செய்யவேண்டும். அந்த பாதம் கழுவும் பாப்டிஸ்டு சபையோர்....
3. (ஒரு சகோதரன், சகோ.பிரன்ஹாமிடம் பேசுகிறார் - ஆசி) நல்லது, இந்தக் காலையில் எந்த விதமான ஆராதனை நமக்கு இருக்கிறது என்பதை அது சார்ந்திருக்கிறது. அது சரி. இன்றிரவு என்ன இருக்கப் போகிறது என்று நமக்குத் தெரியாது. ஏனென்றால் நாம்... இந்த காலையில் ஆராதனை எப்படி இருக்கிறது.
4. எனக்கு ஒருவிதமான சோர்வு. நாங்கள் இப்போது தான் மெக்சிகோவிலிருந்து வருகிறோம். இது வரை எங்களுக்கு இருந்த கூட்டங்களிலேயே மிகவும் ஆச்சர்யமான கூட்டமாக அங்கே எனக்கிருந்தது. அதைப்பற்றி கேட்பதற்கு உங்களில் அனேகர் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எனவே நான்... நல்லது, நாங்கள் அங்கே, கீழே மூன்று இரவுகள் இருந்தோம், மூன்று இரவு ஆராதனைகள் எங்களுக்கு இருந்தது. மேலும் அந்த நம்முடைய ஸ்தோத்தரிக்கப் பட்ட மீட்பர் நிச்சயமாக, அங்கே கீழே, மிகவும் அதிகமானதைச் செய்தார். கடந்த இரவன்று எந்த விதத்திலும் கிறிஸ்துவினிடம் ஒரு போதும் வந்திராத 20,000 ஜனங்களை ஒரே நேரத்தில் நாம் கொண்டிருந்தோம்.
5. மைதானத்தில் நின்றுக்கொண்டிருக்கையில், தன் தாயின் கரங்களில் மரித்துப்போன ஒரு சிறிய குழந்தை உயிரோடு எழுந்தது. அது மரிக்கப் போகிறது என்று மருத்துவர் ஒரு நாளுக்கு முன்பே கூறியிருந்தார். அவள் அதை ஜெபிப்பதற்காக கூட்டத்திற்குக் கொண்டு வந்திருந்தாள். ஜனங்கள் இங்கே சுற்றிலும் இருப்பதைப் போலவே அங்கும் நின்று கொண்டு இருந்தார்கள்.
6. இப்பொழுது, அமெரிக்கர்களாகிய நாம் ஒரு மணி நேரம் நிற்க வேண்டும் என்றும், அது இங்கு சற்று மோசமாக இருக்கும் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் சில சமயங்களில் அவர்கள் காலையில் ஆறு மணிக்கே வந்து, அன்று இரவு பதினொரு மணிவரை நிற்கின்றனர். அது அதிகமாக ஒருவரோடு ஒருவர் நெருக்கி அடைத்து வைத்தது போன்றும், நிற்கக்கூடியவர் களுக்காக, நமக்கு எவ்வளவு இடம் தேவை என்றும் அவர்கள் இன்னும் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். இவ்விதமாக ஒவ்வொரு சதுர அடிக்கும் ஆறு பேர் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்துகொண்டும் இருந்தனர்.
7. அது எனக்கு ஆடுகளை நினைவுபடுத்தியது என்று கூறினேன். பகலில் உஷ்ணமாக இருக்கும் போது ஆடுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கூடி அவைகள் ஒன்றுக்கு எதிராக மற்றொன்று நின்று அவைகள் ஒன்றுக்கொன்று நிழலை உருவாக்கி அவைகள் ஒன்றுக்கு ஓன்று ஒத்தாசையாக இருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். எனவே, அவ்விதமாகத் தான் தேவனுடைய ஆடுகள் செய்யும். அப்படிப்பட்ட இடங்களில் நம்முடைய விசுவாசத்துடன் ஒருவருக்கு ஓருவர் ஒத்தாசையாகவும் பட்சமாகவும் ஒன்று கூடி நிற்பது.
8. இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த வழியில் ஜெபித்துக் கொண்டு... நீங்கள் உங்கள் சபையில் எவ்விதமாக ஜெபம் செய்வீர்களோ, நீங்கள் இந்தக் காலையிலும் ஜெபம் செய்யுங்கள். மேலும், நாம் கர்த்தருடைய வார்த்தைகள் சிலவற்றை வாசிக்கப் போகிறோம்.
9. நின்று கொண்டிருப்பவர்களின் காரணமாக, நாம் முன்பாக வருகையில், இவ்வாறு அந்த ஜனங்களை திருப்பி, திருப்பி விட்டு விடுகின்றனர். சற்று நீண்ட நேரம் வரை திரும்பியே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
10. ஆகையால் இப்பொழுது, உண்மையிலேயே நாம் தாமதம் செய்யாமல் வார்த்தையின் பேரில் பேசப் போகிறோம். எனவே விசுவாசத்திற்கான ஒரு ஆதாரம் உங்களுக்கு உண்டாகி இருக்கும். பின்பு அதற்குப் பிறகு, பின்பு கர்த்தருக்கு சித்தமான அந்த வழியிலே வியாதியஸ்தருக்காக நாம் ஜெபிக்கப் போகிறோம்.
11. இப்பொழுது காண்பிக்கப்பட்ட தரிசனத்தின்படி ஜனங்களை எடுத்துச் சென்று நமது முதல் துவக்க ஆராதனையை உடையவனாக இருக்க நான் குறையுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் நான் அதைச் செய்வதற்கு அல்லது செய்ய இயலாததற்கு எனக்குத் திராணி இருக்கப் போகிறதா என்று எனக்குத் தெரியாது. அவர்களை பொதுமக்கள் இடமிருந்து தனியே கொண்டு வருவதற்கு அங்கே அறைகளில் கூட்ட நெரிசலாக இருக்கிறது.
12. (ஒலி நாடாவில் காலியிடம் -ஆசி) அதை நீங்கள் இவ்வாறு சிறிது நேரம் பற்றிக்கொள்ள முயற்சித்து ஜெபம் செய்வீர்கள் என நம்புகிறேன்.
13. இப்பொழுது முதல் காரியம், உபதேசங்கள் அனைத்தும் தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையிலிருந்து தான் வரவேண்டும் என நான் விசுவாசிக்கிறேன். விசுவாசமானது மனிதனுடைய வேத சாஸ்திரமாகிய நகரும் மணலின் மேல் இளைப்பாற முடியாது. அது தேவனுடைய அசைக்க முடியாத கல்லின் மேல் தான் அஸ்திபாரமிடப்பட்டிருக்க வேண்டும். ஆகையால், தேவன் அதைக் கூறியிருப்பாரானால், தேவன் கூறியதை அவர் நிறைவேற்றுவார் எனவே ஒரு நபர் அதில் நிச்சயமாய் இளைப்பாற முடியும்.
14. இந்தக் காலை வேளையின் செய்தியிலே, தேவன் எப்படி ஒரு வேளை உலகம் உண்டாவதற்கு முன் 10,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே இயேசுகிறிஸ்து அடிக்கப்பட்டார் என்பதைக் குறித்து நாம் பேசிக் கொண்டு இருந்தோம். தேவன் அதை உரைத்தார். அது அதை முற்றுப்பெற வைத்து. தேவன் அதைப் பேசுகிறவரையிலும் அதை சரியாக்குகிறது. தேவனுடைய சிந்தையில் அவர் வார்த்தையை பேசும் போது, அது ஏற்கனவே பரலோகத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த விதமாகத்தான் அது அங்கே மேலே பரிபூரணமாக இருக்கிறது. எனவே நாம் எவ்வளவாக அழிந்துப் போகக் கூடியவர்களாக இருந்தாலும் அவருடைய வார்த்தையை நம்ப நாம் அவருடைய கிருபையினால் மீட்கப்பட்டோம். அவருடைய வார்த்தை அவ்வாறே கூறுமானால் அது அதை முடிவடையச் செய்கிறது.
15. இப்பொழுது முதலாவதாக வார்த்தை, "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது” என்று வேதம் கூறுகிறது. இப்போது, அது வார்த்தையாக இருப்பதற்கு முன்பு அது சிந்தையாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் வார்த்தை என்பது வெளிப்படுத்தப்பட்ட சிந்தை. 
தேவன், இப்பிரபஞ்சம் கொண்டிருந்த சத்துருவைப் பார்த்த போது - அவன் என்ன செய்தானோ அதையே செய்யப்போகிறான். இந்த மகத்துவமான மீட்பின் திட்டத்தை எவ்வாறு அனுப்புவது என அவர் சிந்தித்தார். அவ்வாறு அவர் சிந்தித்த போது, பின்பு அதை உரைத்தார். அது நல்லதாகவும் பூரணமடையக்கூடிய சரியானதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பிறகு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வந்து பாவங்களுக்காக மரித்தும், சில 1900-வருடங்களுக்கு முன்பு மறுபடியும் உயிர்த்தெழுந்துமிருக்கிறார். இந்தக் காலையில் நமது நீதிமானாகுதலுக்காகவும், நம்முடைய அறிக்கை யின் மீது பரிந்து பேசிக்கொண்டும், பிரதான ஆசாரியராக அவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தும் இருக்கிறார்.
16. பாருங்கள், அது ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. வேதத்திலிருந்து வெளிவருகின்ற எந்த வார்த்தையாக இருந்தாலும் அதின் மேல் உங்கள் ஆத்துமாவை நீங்கள் இளைப்பாறச் செய்யலாம். பாருங்கள்-? அதன் காரணமாகத்தான் கீழே உள்ள மெக்சிகோவில் இருக்கும் அனேக ஜனங்கள் அங்கே கத்தோலிக்கர்களாக உள்ளனர். கத்தோலிக்க மனிதரால் நேர்காணல் நடந்த போது, சகோ.பிரன்ஹாம் "எங்களுடைய பரிசுத்தவான்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கின்றறீர்களா-?” என அவர் கேட்டார்.
“அவர்கள் மரிக்காமல் உயிரோடு இருந்தால்” என்று நான் கூறினேன்.
17. "நல்லது”, என்று அவர் கூறினார். "நல்லது", என்று அவர் கூறினார், நீங்கள்... "நான்..." நான் கூறினேன். "நீங்கள் எந்த சபையுடன் இருக்கிறீர்கள்" என்று அவர் கூறினார். "கர்த்தராகிய இயேசுவின் சபை" என்று நான் கூறினேன். அது எந்த ஸ்தாபனமாக இருக்கிறது-?" என்று அவர் கூறினார்.
18. அது ஒரு ஸ்தாபனம் அல்ல. அது கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது, என்று நான் கூறினேன். விசுவாசிக்கும்படி ஒரே ஆவியினாலே நாம் அனைவரும் ஒருமிக்க கூடிவருகிறோம், அதில் மனிதன் என்ன நினைக்கிறான் என்பது காரியமே இல்லை, அது கிறிஸ்துவில் அவனுடைய தனிப்பட்ட விசுவாசமாக இருக்கிறது.
19. சரி தான், வேதாகமானது கத்தோலிக்க சபையின் பழங்கால சரித்திரமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
20. குற்றத்தின் முழு நிரூபணம் இல்லாத நிலையில் ஒரு கருத்து ஏதோ ஒரு நிலையில் உள்ளது என்ற எண்ணத்தின் அறியாமையை நான் உங்களுக்குத் தரப்போகிறேன் என்று நான் கூறினேன். நான் நான் அனேக சரித்திரங்களை நான் வாசிக்கிறேன், கடைசி அப்போஸ்தலனுடைய மரணத்திற்குப் பிறகு ஏறக்குறைய 300 வருடங்களில் அங்கே கத்தோலிக்க சபையானது எப்பொழுது உள்ளே வந்தது என என்னால் பார்க்க இயலவில்லை; ஆனால் எப்படியாகிலும் குற்றத்தின் முழு நிரூபணம் இல்லாத நிலையில் ஒரு கருத்து ஏதோ ஒரு நிலையில் உள்ளது என்ற எண்ணத்தின் அறியாமையை நான் - நான் உங்களுக்குத் தருகிறேன். மேலும் அது இருந்தது எனக் கூறுகிறேன். பிறகு நீங்கள் என்னை ஒரு பழைய மாதிரி கத்தோலிக்கன் என்றே அழைக்கலாம், ஏனென்றால் நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன்" அது சரியே. எல்லாம் சரி.
21. தேவன் ஒரு விசை பேசியிருப்பாரானால், அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒரு போதும் மாற முடியாததாக இருக்கிறது. அது என்றென்றும் சத்தியமாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்-? பாருங்கள் -? நீங்களும் நானும் அதிகமான ஞானத்தைத் தொடர்ந்து கற்று வருகிறோம். சில வருடங்களுக்கு முன் இருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது நீங்கள் அதிகமாக அறிந்திருக்கிறீர்கள்.
22. ஒரு சிறு பெண் இங்கு அமர்ந்திருக்கிறாள். இப்பொழுது அவள் ஒரு குழந்தை அவ்வளவு தான். அவளுடைய பெற்றோர்கள் அவளை வழி நடத்த வேண்டும். பிறகு அவள் வளர்ந்து அனேகமாக அவளுடைய நாட்களில் அவள் முன்னேற்றமடைந்து, இப்பொழுது அவள் அவளது தாயைக் காட்டிலும் புத்திசாலியாக இருக்கிறாள். (பார்த்தீர்களா-?) ஏனென்றால் அவள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறாள்.
23. ஆனால் தேவனோ எல்லையற்றவராக இருக்கிறார். அவரால் மாற முடியாது. அவர் இருந்தாக... பரிபூரணத்தோடு தான் அவர் - அவர் அவருடைய ஆரம்பம் இருந்தது. முடிவிலும் அவர் அதே விதமாகத்தான் இருப்பார். அவரால் - அவரால் மாறவே முடியாது. எனவே, வேதத்தில் எதை நோக்கியாவது அல்லது எதைக் குறித்தாவது அவருடைய சுபாவமானது என்னவாக இருந்தாலும் அது இப்பொழுதும் மாறாததாகவே இருக்கவேண்டும், அல்லது அவர் கிரியை நடப்பித்த விதத்தில் அவர் தவறிழைத்திருக்கிறார். பாருங்கள்-? எனவே அவர் ஒரு போதும் மாறாதவராகவே இருக்க வேண்டும்.
24. எனவே அவருடைய வார்த்தையை நாம் திறப்பதற்கு முன் நாம் நமது தலையை வணங்கிய நிலையில், அதை எழுதிய கர்த்தராகிய இயேசுவிடம் பேசுவோமாக.
25. எங்கள் பரமபிதாவே, கிறிஸ்தவ நாட்காட்டியின் சரித்திரத்தில் மகத்தான நாட்களில் ஒன்றாக இந்த நாளானது இருக்கிறது. இது உயிர்த்தெழுதலின் நாளாக இருக்கிறது. இன்றைக்கு ஜீவிக்கின்றவரே, என்றென்றைக்கும் ஜீவிக்கிறவரே, வியாதியுள்ளவர்களாகவும், இன்றைக்குத் தேவை உள்ளவர்களாகவும் இருக்கின்ற ஏழை மக்களுக்காக பேசவும், ஜெபிக்கவும் அடுத்த சில மணிவேளைகளில் எங்களுடன் விஜயம் செய்யுமாறு பரமபிதாவே, நாங்கள் ஜெபிக்கின்றோம்.
26. எங்களுடைய சகல பாவங்களையும் மீறுதல்களையும் நீர் எங்களுக்கு மன்னிக்குமாறு நான் தாழ்மையோடு கேட்கிறேன். நாங்கள் தவறு செய்கிறோம். ஏனென்றால் தவறான நோக்கங்கள், தவறான ஆவிகள் தவறான உணர்வுகளோடு இருக்கும் தவறான உலகத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதை நாங்கள் உணருகின்றோம். ஆனாலும், பிதாவே, இவைகள் அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். எனவே நாங்கள் தவறாக இருக்கிறோம் என்ற எங்கள் அறிக்கையின் மீது பரிந்து பேசும் இயேசுவானவர் மகத்துவமான வலது பாரிசத்தில் உட்கார்ந்திருப்பதற்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். எங்களை மன்னிப்பதற்கு அவர் வாக்கு உரைத்திருக்கிறார். நாங்கள் அதை விசுவாசித்து அவரை நம்புகிறோம்.
27. இன்று இந்த ஆராதனையிலிருந்து மகிமையை ஏற்றுக் கொள்ளும். வார்த்தையைக் கேட்கிற ஒவ்வொரு இருதயத்தையும் அதைப் பேசுகிறவருடைய உதடுகளையும் விருத்த சேதனம் செய்யும். இதை நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமென்.
28. எபேசியருடைய புத்தகத்திலிருந்து இந்த வார்த்தைகளை வாசிக்க விரும்புகிறேன். கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பதை நான் நேசிக்கிறேன்.) 
29. ஆனபடியினாலே.... (புஸ்தகத்தில் முதலாவது அதிகாரம், 2 அதிகாரத்தில் 15-ஆம் வசனம் ஆரம்ப முதல்) 
ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார் மேலுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, 
இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம் பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, 
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும், 
தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; 
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக் கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறேன். 
எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர் பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, 
அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, 
எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். 
அதன்பிறகு சுவிசேஷங்களில், பரிசுத்த மாற்கு அல்லது லூக்காவில் 25-ஆம் வசனத்திலிருந்து, (லூக்கா 24: 25-31-ஆசி) 
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே. 
கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டிய தில்லையா என்று சொல்லி. 
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். 
அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். 
அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். 
அவர்களோடே அவர் பந்தி இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். 
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர். அவர்களுக்கு மறைந்து போனார்.
கர்த்தர் தாமே அவருடைய வார்த்தையோடு ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக.
30. இந்தப் பாடப்பகுதியின் பொருளில், அதின் பாதி வழிக்கு செல்வதற்கே கூட, மாதங்களும் மற்றும் வாரங்களும் நமக்கு எடுத்துக் கொள்ளும் வரை போதுமான வேத வசனங்கள் வாசிக்கப்பட்டாயிற்று. ஆனால் இந்தக் காலையில் என்னுடைய பொருள் அல்லது பாடப் பகுதியானது. "வல்லமையுள்ள ஜெயவீரர்" என்பதாகும். மேலும் இப்பொழுது, உயிர்த்து எழுதலானது, அவர் என்னவாக இருந்தார் என அங்கே அது நிரூபித்தது, என்று நாம் விட்டுவிட்ட அந்த இடத்திலிருந்து நாம் தொடங்கலாம்.
31. அங்கே அனேக மனிதர்கள், அறிக்கையை உண்டாக்க முடியும். அங்கே அனேக தத்துவஞானிகள் இவ்வுலகில் இருந்துள்ளனர். புத்தர், முகமது, கன்பியுசியஸ், மற்றும் அனேக மகத்தான தத்துவஞானிகள். அவர்கள் மகத்தான மனிதர்கள் என்று அவர்கள் அனைவரும் பிரகடனம் செய்துள்ளார்கள், ஆனால் மரணமோ அந்தக் கேள்வியை அவர்களோடு கூடவே என்றென்றுமாக முற்றுப்பெற வைத்து விட்டது. ஆனால், என் ஜீவனைக் கொடுக்கவும் அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு” என்று கூறி அதை நிரூபிக்கவும் முடிந்த கிறிஸ்துவுக்குப் பிறகு ஒரு போதும் அங்கே ஒரு மனிதனும் இருந்ததே இல்லை.
32. இன்றும் கூட அது தான் கிறிஸ்துவத்தின் ஓர் அழகான சிந்தையாக இருக்கிறது. அதாவது சுவிஷேசத்தை நாம் பேசும் போது ஒரு கேள்விப்பட்ட செய்தி என்றோ அல்லது அதைக்குறித்து ஒரு சரித்திர ரீதியான காரியம் என்றோ நாம் எடுத்துக்கொள்வதில்லை, ஏனென்றால் அந்த இயேசு கிறிஸ்து ஜீவிக்கின்றார் என்றும் ஆளுகை செய்கிறார் என்றும், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் என்றென்றுமாய் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்றும், அதை இந்தக் காலையில் சரியாக இங்கே நிரூபிக்க முடியும். இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்பு, அவர் அப்படியே பிரசன்னராகி அவர் கலிலேயாவிலே தம்முடைய சீஷரோடு கூட நடந்து போன போது செய்தது போன்றே அதே காரியங்களை செய்து கொண்டும், அதே அற்புதங்களை நிறைவேற்றிக் கொண்டும், அதே இரக்கத்தைக் காண்பித்துக் கொண்டும், அதே சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்து கொண்டும் இருக்கிறார். அவர் மரிக்கவில்லை. ஆனால் என்றென்றுமாய் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்.
33. அது நாம் விளங்கிக்கொள்ளும் சில ஆர்வமூட்டும் தத்துவம் அல்ல, ஆனால் அது கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையாக இருக்கிறது என்று, இன்றைக்கு அறிந்து கொள்வது, என்ன ஒரு சந்தோஷமான இருதயங்களை கிறிஸ்தவர்களுக்கு அது உருவாக்கி இருக்க வேண்டும்.
34. சீஷர்களின் மத்தியில், கல்வியறிவு உடையவனாக இருந்த ஒரே ஒருவனும், மகத்தான பரிசுத்த பவுலும், அவனுடைய நாட்களில் கூறியிருக்கிறபடி, "உங்கள் விசுவாசமானது அப்படிப்பட்ட காரியங்களில் நம்பிக்கை கொள்ள சாதுர்யமான வார்த்தையுடனோ அல்லது மனுஷ பேச்சுடனோ நான் உங்களிடத்திற்கு வரவில்லை” என்று கூறியிருக்கின்றான். ஆனால், உங்கள் விசுவாசமானது தேவனில் இளைப்பாறும்படி, வல்லமையோடும், பரிசுத்த ஆவியின் பெலத்தோடும் நான் உங்களிடத்திற்கு வந்தேன்” என்று ஏதோவொரு அந்த ஒழுங்கில் கூறியுள்ளான். கிறிஸ்துவானவர் உயிர்த்தெழுந்த பின் நாட்களில் அதே காரியத்தை பவுல் பிரசங்கித்தான். இன்றும் அப்படியே அதே தான். இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று தவறாத ஆதாரங்களில், இப்பொழுதும் இங்கே சரியாக நிரூபிக்க முடியும். இதை அறிந்து, நாம் எவ்வளவாய் அதை நேசிக்கின்றோம்.
35. கிலேயோப்பாவுக்கும் அவனது நண்பனுக்கும் என்ன ஓர் அதிசயமான நாளாக அது இருந்திருக்க வேண்டும் அந்த முதல் ஈஸ்டர் காலையானது, அது ஒரு அழகான ஈஸ்டர் காலையாக இருந்தது. உடைந்த உள்ளத்தோடு அவர்கள் வழியில் நடந்து சென்றபோது...
36. அவருடைய அப்போஸ்தலர்கள், அவர்கள் அருமையானவர்களும் கல்வியறிவு இல்லாதவர்களுமாக இருந்தனர் என்று வேதம் கூறுகிறது. அவர்கள் தாவரவியியலைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கணிதத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, அல்லது அல்லது அல்ஜீப்ரா, அல்லது ஏதோ அந்த வகையான நமது நவீன கல்வி. அவர்கள் அவைகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை, ஆனால் அவர்கள் அவரை அறிந்து இருந்தனர். அது தான் முக்கியமான காரியமாக இருக்கிறது.
37. அவரை அறிவதே ஜீவன். கிறிஸ்தவ நண்பனே, பாவியான நண்பனே, இதை நினைவில் வையுங்கள். கிறிஸ்துவை அறிவதே ஜீவன். அனேக ஜனங்கள் சென்று, அவர்கள் ஒரு ஞான உபதேசத்தைக் கற்றுக் கொள்கின்றனர். அதுதான் ஜீவன் என்று அவர்கள் நினைக்கின்றனர். அனேக ஜனங்கள் வேதாகமத்தைப் பெற்று கற்கின்றனர். அது தான் ஜீவன் என்று அவர்கள் நினைக்கின்றனர். அனேக ஜனங்கள் அவர்களது சபையின் உபதேசத்தை அறிந்து இருக்கின்றனர். அதுதான் ஜீவன் என்று அவர்கள் நினைக்கின்றனர். அவைகள் அனைத்தும் நல்லவைகள் தான், ஆனால் அவரை உங்களுடைய சொந்த தனிப்பட்ட இரட்சகராக, தனிப்பட்ட விதத்தில் அவரை அறிவது; அவரை அறிவது, அது மாத்திரமே ஜீவனாக இருக்கிறது.
38. உங்களது ஞான உபதேசத்தை அறிவது அது நல்லது. உங்களுடைய புஸ்தகங்களை அறிவது அது நல்லது. உங்களுடைய சபை உபதேசத்தை அறிவது அது நல்லது. ஆனால் அவைகள் அனைத்துமே ஒரு பக்க - பாதையாக இருக்கிறது. ஆனால் அவரை அறிந்து கொள்வது ஜீவனை அறிந்து கொள்வதாக இருக்கிறது. ஜீவனை அடைவதற்கு அவரை அறிந்து கொள்ள வேண்டும். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்”. இயேசு அந்த அறிக்கையை செய்த பிறகு, சந்திரனும் நட்சத்திரங்களும் இல்லாமல் போன பிறகு சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள். அவைகள் இன்னும்... அவ்வார்த்தைகள் இன்னும் பயனளிக்க கூடியதும் அவர் அவைகளை பேசிய நாட்களில் இருந்ததைப் போலவே அப்படியே வல்லமை நிறைந்தவைகளாக இருக்கின்றன. அவருடைய வார்த்தை தோல்வியடைய முடியாது.
39. இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால்... இந்த ஈஸ்டர் காலை ஒன்றில் அவர்கள் நெடுகிலும், உடைந்த உள்ளத்தோடு சென்றனர். அவர்கள் நம்பிக்கை வைத்திருந்த அந்த மனிதர், இஸ்ரவேலின் இரட்சகராக இருக்கப்போகிறவர் என்று அவர்கள் நினைத்த ஒருவர் வரப்போகிறதான ராஜா என்று அவர்கள் நம்பிக்கை வைத்த ஒருவர், பரிதபிக்கப்பட்ட விதத்தில் கொடுமை படுத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு விட்டார். வீரம் செறிந்த ரோம பாதுகாப்புப் படை வீரர்களால் அவருடைய கல்லறையின் மேல் கல்லை வைத்து அதை தொடக்கூடாதபடி முத்திரை போடப்பட்டும் இருந்தது. இல்லையென்றால் ரோமருடைய சகல தண்டனைகளும் அதில் இருக்கும். மேலும் எந்த மனிதனாவது அம்முத்திரையை உடைப்பானேயானால், அவர்கள் உடனடியாக மரணத்தில் போடப்படுவார்கள். மரியாள், அவருடைய பிரியமான தாய், அவள் நின்று அவரைப் பார்த்த போதிலும், உடை உறியப்பட்டு ஜனங்களுக்கு முன்பாக நிர்வாணமாக, அடித்து உருக்குலைந்த ஒரு சரீரம், அவரது கரங்களில் உள்ள எலும்புகள் கொடிய ரோம ஆணிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த எல்லாக் காரியங்களும் அவமதிப்பும் அவர் மரிக்கும் போது இரக்கத்திற்காக அவர் கதறினார். நினைக்கையில் மெய்யாகவே எந்த ஒரு சிறந்த மனிதனும் இந்த அளவுக்கு எப்பொழுதுமே இப்படிப்பட்ட மரணத்தினால் சாகவில்லை.
40. ஆனால் தேவனோ சகலவற்றையும் நன்மைக்கேதுவாகவே கிரியை நடப்பித்தார். அதற்காகவே அவர் அவரை அங்கு கொண்டு வரவேண்டும். இந்தக் காலையில் நான் கூறினபடி, உங்களுடைய பிரியமானவர்கள் எப்பொழுதாவது மரித்தோரிலிருந்து எழும்புகையில் நீங்கள் எப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருப்பீர்கள். நமக்கு மறுரூபமாக்கப்பட்ட ஏனோக்கும், பரலோகத்திற்கு இரதத்தில் சென்ற எலியாவும் மாத்திரமே இருப்பார்களானால், அவர்கள் மாத்திரமே நமக்கு இருப்பார்களேயானால், நாம் பரிதபிக்கக் கூடியவர்களாய் இருப்போம். ஆனால் இந்த மனிதனோ மரித்தார். அவர் மரித்துவிட்டார் என்று சூரியன் அறியும் வரை அவர் மரித்தார். அவர் மரித்துவிட்டார் என்று சந்திரனும் நட்சந்திரங்களும் அறியும் வரை அவர் மரித்தார், அவர் மரித்து விட்டார் என்று பூமியிலும் வானத்திலும் உள்ள அனைத்தும் அறியும் வரை அவர் மரித்தார், அழியும் ஒவ்வொன்றும் என்றென்றுமாய் ஜீவிப்பதற்கு அவர் அந்த மரணத்தில் மரிக்க வேண்டும். ஏனென்றால் அவர் மரித்தார். ஏனென்றால் நாம் ஜீவனோடு இருக்க, அவர் மரித்தார். அவர் கொடுமை படுத்தப்பட்டார். எளிய கட்டடத்தின் வழியாக அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவர் உலகத்திற்கு வந்த போது அவருடைய தலையை சாய்க்க இடமே இல்லை.
41. ஜனங்களால் அவர் மிகவும் புறக்கணிக்கப்பட்டார். மரிப்பதற்கு அவருக்கு ஒரு இடமும் இல்லை. இந்த பூமி அவரை நிராகரித்தது, பரலோகம் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை ஏனென்றால் அவர் ஒரு பாவியாக வந்தார். சொந்த பாவத்தோடு அல்ல, ஆனால் நம்முடைய பாவம் அவர் மேல் இருந்தது. உலகத்தின் பாவங்களை அவர் தன் மீது சுமந்து கொண்டிருந்தார் எனவே அவர் பரலோகத்தில் புறக்கணிக்கப்பட்டார். மேலும் இந்த பூமி அவரை விரும்பவில்லை, மேலும் அவர்கள் அவரை பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையில் உயர்த்த வேண்டியதாய் இருந்தது. பரலோகத்திற்கு வெளியிலும் - வெளியிலும், பூமிக்கு தூரத்திலும் அவர் மரிக்கட்டும். என்னே -! ஓர் இரட்சகர்.
42. ஜனத்தின் நபர்களுக்காக நியாயத்தீர்ப்பின் நாளில் அவருடைய சமூகத்தில் நீ நின்று, உன் ஜீவனுக்கான ஒரு கணக்கைக் கொடுக்க வேண்டும் என்று நீ அறிந்திருக்கும் போது அந்த நவீன வேத சாஸ்திரத்துக்காக அப்படிப்பட்ட நபரை நீ எப்படி தள்ளிப்போட முடியும்-?
43. நீ ஒரு பாவியாக இருப்பதால் தேவன் உன்னை பொறுப்பாளியாக நிறுத்துவது இல்லை. அந்த வெளியே வரும் வழியை நிராகரிப்பதற்காக அவர் உன்னை பொறுப்பாளியாக நிறுத்துவார். பாவியாக இருந்து கொண்டு நீ உதவ முடியாது. நீ பிறந்த பொழுது.. உன் சுபாவத்திலேயே நீ ஒரு பாவியாக இருக்கிறாய். ஆனால் நீ அதற்கு உதவ முடியும். இயேசு உனக்காக வழியை உண்டாக்கியுள்ளார்.
44. மேலும் அங்கே அவர் இருந்தார். இவையனைத்தையும் பார்த்த பிறகு, மரியாள் "நிச்சயமாக எப்படி ஒரு நபர்”, “அதாவது ஒரு மனிதனையும் அறியாமல், நான் ஒரு நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் பொழுது, அந்த பரிசுத்த ஆவியானவர் ஒரு பெரிய வெளிச்சத்தில் இருந்து என்னிடம் பேசினார். பிறகு, உன்னிடம் பிறக்கப்போகிற அந்த பரிசுத்த காரியமானது தேவனுடைய குமாரன் என்றழைக்கப்படும் என்று கூறினார். தம்முடைய சொந்தப் பிள்ளை அங்கே தொங்கிக் கொண்டும் துன்பப்பட்டுக் கொண்டும் இரத்தம் படிந்து கொண்டும், முறுக்கிக் கொண்டும், மரித்துக் கொண்டும் இருப்பதை தேவன் எப்படி அனுமதிக்க முடியும்-? இது எப்படி முடியும்-? எந்த நேரத்திலும் அவர் சிலுவையில் இருந்து திரும்பி தமது கரங்களை இழுத்துத் தளர்த்தி சத்துருக்கள் மீது ஜெயம் எடுப்பார் என்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் அப்படி செய்திருப்பாரானால் இந்தக் காலையில் நாம் பாவிகளாக விடப்பட்டிருப்போம் என அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை, பின்பு இந்தக் காலையில் பாவிகளாக விடப்படுவோம். அவர் அதைச் செய்தே ஆகவேண்டும்.
45. அவர்கள் அவருக்கு மாபெரும் புகழுரையைச் செலுத்தினார்கள். அந்தப் பரிசேயர்கள் அவரை சிலுவையில் அறைந்து அதைச் செய்தார்கள். “அவன் மற்றவர்களை இரட்சித்தான் ஆனால் தன்னை இரட்சிக்க அவனால் முடியவில்லை" என்று அவர்கள் சொன்ன போது, அவருக்கு இதுவரை செலுத்தப்பட்டவைகளிலேயே மிகப்பெரிய புகழுரையை அவர்கள் அவருக்குச் செலுத்தினார்கள். அவர் தன்னைத் தானே இரட்சித்திருப்பாரானால், அவர் மற்றவர்களை இரட்சித்திருக்க முடியாது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. மற்றவர்களை இரட்சிப்பதற்காக அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுக்க வேண்டும். அது அவருக்கு ஒரு புகழுரையாக இருந்தது, அவர்கள் அதை அறியாதிருந்தனர்.
46. அவரை மரணத்திற்குத் தள்ளியதால் அவர்கள் குற்றவாளிகளானார்கள், ஆனால் ஈஸ்டர் காலையில் ஒரு சந்தேகத்தின் நிழலுக்கும் மேலாக தேவன் அதை நிரூபித்த போது, தத்துவ ஞானியைப் பார்க்கிலும் அதிகமான ஏதோ ஒன்று மரித்ததாய் இருந்தது. ஒரு தீர்க்கதரிசி மரித்ததைப் பார்க்கிலும் ஏதோ ஒன்று மரித்ததாய் அது இருந்தது. நவீன வேத சாஸ்திரத்தில் உள்ள இன்றைய மனிதன் அவரை ஒரு சமூதாய சுவிஷேசத்தைப் பிரசங்கிக்கிற, ஒரு தத்துவஞானி அல்லது ஒரு நல்ல மனிதன் அல்லது சிறந்த கல்விமான், அல்லது ஒரு போதகரைப் போல ஆக்க முயற்சிக்கிறான். அவரோ அதைவிட மேலானவராகவே இருந்தார். அவரோ தேவனாய் இருந்து தம்மைத் தாமே நம்மத்தியில் மாம்சமாக்கி கொண்டார். அவர் தெய்வீகமானவராக இருந்தார். அவருடைய இரத்தம் எந்த அழியக்கூடிய மனிதனிடமிருந்து வராமல், அது அவரது பிதா, யேகோவா தேவனுடைய சிருஷ்டிக்கும் வல்லமையிலிருந்து வந்தது. அவர் தெய்வீகமானவர், அவர் மரணத்தின் முத்திரைகளை உடைத்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து அதை நிரூபித்தார்.
47. இங்கே அனேக சீஷர்கள் அதைரியப்பட்டு இருந்தனர். வாழ்க்கையில் அனேக காரியங்கள் நமக்கு வருவது போலவே அப்படியே எழும்பியது. இந்த யாத்திரையோடே அவர்கள், அவர்கள் உடைய வீட்டு வழியில் இருந்தனர். கிலோயோப்பாவும் அவனது கூட்டாளியும் எம்மாவுக்கு வழிநெடுக நடந்து சென்று கொண்டிருந்தனர். மேலும் இயேசுகிறிஸ்து இந்த அழகான முதல் ஈஸ்டர் ஞாயிறு காலையில் உயிருடன் ஜனங்கள் மத்தியில் இருந்தார் என்பதை அவர்கள் அவ்வளவு சிறிதளவும் அறிந்து கொள்ளவில்லை. அவர் மரித்து விட்டார் என்று அவர்கள் நினைத்தனர்.
48. அன்று அவர்கள் செய்தது போன்றே இப்பொழுதும் அது இருக்கிறது. இயேசுவை மெய்யாகவே நேசிக்கும் அனேக மக்கள் அவர் சரியாக நம்மோடு, இங்கே உயிர்த்தெழுந்து நமது மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறவராக இருப்பதை விளங்கிக் கொள்ளத் தவறுகின்றனர். அது ஒரு சரித்திரம் என்றும் ஏதோ ஒன்றின் சரித்திர விவகாரம் என்றும் அவர்கள் போதிக்கின்றனர். வேதாகமமானது சரித்திரமாக மாத்திரமல்லாமல் அது ஒரு தீர்க்கதரிசியுமாகக் கூட இருக்கிறது. அவர் மரித்தவர் மாத்திரமல்லாமல், அவர் மறுபடியும் உயிர்த்தெழுந்தும் இருக்கிறார். உண்மையிலேயே அவர் மரித்தார். ஆனால் அவர் மறுபடியும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார்.
49. அங்கே அனேக அருமையான கிறிஸ்தவ மக்கள் அருமையான சபையைச் சேர்ந்தவர்கள் இந்தக் காலையிலும், இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்றும் அவர் இங்கே பூமியின் மேல் இருந்த போது அவர் செய்த அந்த அதே வல்லமைகள் அந்த அதே, அதே அடிப்படை விதிகளில், அந்த அதே கிரியைகளோடு இன்றும் உயிரோடு நம்மத்தியில் ஜீவிக்கிறார் என்பதையும் அவர்கள் உணரவில்லை. சிறிதளவு ஜனங்களே அதை அறிந்திருந்தனர்.
50. அவர்கள் ஒரு ஓய்வு நாள் பயண தூரத்திற்கு, அவர்கள் கீழே எம்மாவூருக்கு வழிநெடுக பயணிக்கையில், ஏறக்குறைய ஒரு இரண்டு மைல்கள், என நான் நினைக்கிறேன். அவர்கள் உடைய வழியின் கீழ், வழியோரமாக அவருடைய மரணத்தைக் குறித்துப் பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.
51. நீங்கள் கவனிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். “ஓ ஏன் இது இவ்வாறு சம்பவித்தது-? எப்படி அது இவ்வாறாக நமக்கு சம்பவிக்க நேர்ந்தது-? நாங்கள் எங்களுடைய சபையை விட்டு விலகி இப்போது இந்த மனிதனை பின்பற்றினோமே, நாங்கள் நிச்சயமாக நினைத்தோம். இவரே வரப்போகும்... லாசருவை, அவன் மரித்து 4 நாட்களுக்குப் பிறகு கல்லறையிலிருந்து அவர் உயிரோடு எழுப்பியதை நாங்கள் பார்த்தோமே மேலும் மரித்த மனிதனை கல்லறையிலிருந்து எழுப்பிய ஒரு மனிதன் எப்படி மரிக்க முடியும்-?" இப்படியாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேவனோ தம்முடைய சொந்த வழியிலேயே கிரியை செய்தார். அவர் இவ்விதமாக.... இவ்வாறாக ஒரு விதையானது நிலத்திற்குள்ளாகச் சென்று மரித்து மறுபடியும் பலன் கொடுப்பதைப் போலவும்..." கோதுமை மணியானது நிலத்தில் விழாவிட்டால் அது தனித்திருக்கும் என்றும் வேதம் கூறுகிறது.
52. எனவே அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அவர் அவர்களுக்குத் தரிசனமானார். வழக்கமாக அவர் அந்த விதமாகத்தான் நம்மிடத்தில் வருகிறார். மனைவிகளாகிய நீங்கள் வழக்கமாக நீங்கள் உங்களுடைய மிகப்பெரிய ஆசீர்வாதத்தைத் தேடும் போது, பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்குச் சென்ற பிறகு நீங்கள் வெளியில் தட்டுகள் அல்லது ஏதோ ஒன்றை கழுவிக் கொண்டு இருக்கும் போது, தரையையோ அல்லது ஏதோ ஒன்றை பெருக்கிக் கொண்டிருக்கும் போது... புருஷர்கள் நீங்கள் அமர்ந்து உங்களுடைய மதிய உணவை உட்கொள்ளும்போது, ஒரு வேளை நீங்களே, நீங்கள் எங்கோ வீட்டிற்குப் போகும் போது வேதாகமத்தை அந்த வாகனத்திற்குள் ஓரத்தில் அங்கே படித்துக்கொண்டும் அதை தியானித்துக் கொண்டும்... நாம் நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நம்முடைய சிந்தையின் தியானத்தையும் நாம் அவர் மேல் வைப்போமானால் அவர் நமக்கு அடிக்கடி தரிசனமாவார். ஆனால் தொல்லையானது, அடுத்த பணத்தை நாம் எங்கே சம்பாதிக்கப் போகிறோம் என்பதைக் குறித்தே, மேலும் நாம் இங்கு என்ன செய்யப் போகிறோம், மேலும் இது எப்படி இருக்கப் போகிறது என்று நாம் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால், "முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தைத் தேடுங்கள், இந்த எல்லாக் காரியங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என்று இயேசு கூறியிருக்கின்றார்.
53. ஆனால் அந்தக் காலையில் அவர்கள் சாலையின் நெடுகிலும் சென்று கொண்டு இருக்கையில், நான் அவர்களைப் பார்க்க முடிகிறது.... ஓ என்னே-! இது வரை சம்பவித்தவை களிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அவர்களுக்கு இங்கே அவர்கள் சாலையின் மேல் இருந்தனர். அவர்கள் தங்கள் சபையை விட்டு அவரைப் பின்பற்றியதற்காக தள்ளி வைக்கப்பட்டு இருந்தனர். கல்லறையினிடத்தில் அவர் ஏதோ வெற்றியை நிகழ்த்துவார் என நினைத்தனர். பின்பு அவர்கள் தங்கள் சபையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இனி ஒரு போதும் சபைக்குத் திரும்ப முடியாது. அவர்கள் அடையாளமிடப்பட்டும், பரிகசிக்கப் பட்டும், நகைக்கப்பட்டும், வேடிக்கையாக்கப்பட்டும் இருந்தனர்.
54. அந்த விதமாகத்தான் கிறிஸ்துவுக்காக ஒரு மனிதன் தன்னை மெய்யாகவே கிரயத்திற்குக் கொடுக்கும் பொழுது செய்கிறான். அவன் கிறிஸ்துவுடன் தனித்து, அவரோடு மட்டுமே நடக்க அவன் ஒவ்வொரு ஆற்றின் கரையையும் கடந்து செல்ல வேண்டியவனாய் இருக்கிறான்.
55. இவ்வுலகத்தின் புருஷனோ ஸ்திரீயோ அவர்கள் எப்பொழுதாவது எதற்காகிலும் விலையைக் கொடுக்க வேண்டும் என்றால் புருஷனோ ஸ்திரீயோ அவர்கள் கிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சகராகவும் மிக உயர்வாகவும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய முடிவில் தனித்து நிற்கையில், இங்கே இந்தக் காலையில் ஒவ்வொரு மனிதனுடனும் ஒவ்வொரு ஸ்திரீயுடனும் பையனுடனும் அல்லது பெண்ணுடனும் அது அதே விதமாகத்தான் இருக்கும். நீங்கள் எப்பொழுதாவது எதற்காகவாவது விலை கொடுக்க விரும்புவீர்களானால், தேவனோடு முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் சபையை நம்ப வேண்டாம். உங்களுடைய பிரசங்கியாரை, உங்களுடைய ரபியை, உங்களுடைய ஆசாரியனை நம்ப வேண்டாம். ஆனால் கிறிஸ்து இயேசுவில் தனித்தே நில்லுங்கள். அது தான் நீங்கள் செய்ய முடிந்த ஒரே வழியாய் இருக்கிறது. வேண்டாம்....
56. இந்தக் காலையில் சுகமாவதற்காக ஜெபிக்கும்படியாக நீங்கள் இங்கே இருப்பீர்களானால், "ஓ, என்னால் அடைய முடியுமானால் அங்கே மேலே ஜெபிப்பதற்காக என்று கூற வேண்டாம். சகோதரன் பிரன்ஹாமால் எனக்கு ஜெபிக்க முடியும். வேறு சிலர் இதை அதை அல்லது மற்றதைச் செய்யலாம்”. உங்கள் நம்பிக்கையை அவர் மேல் மாத்திரம் வைத்தப் பிறகு, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், தவறாத வாக்குத்தத்தத்தைச் செய்து இருக்கிறார் என்றும், அது ஒருபோதும் தவறாத கர்த்தருடைய வார்த்தையே என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அதைப் பார்த்தீர்களா-?
57. கவனியுங்கள், அப்படியாக அவர்கள் நினைத்துக்கொண்டு நெடுகிலும் செல்லுகையில், அவர் அவர்களுக்குத் தரிசனமாகி அவர்களோடு நடந்தார். அவர்களோ அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
58. ஏன், அங்கே அனேக முறை தேவன் சரியாக உன்னோடு நடந்திருக்கிறார் நீயோ அவரை அறிந்து கொள்ளவில்லை. முன்பு ஒரு நாள் அந்த அழிவிலிருந்து உன்னைக் காத்துக்கொண்டது யார்-? இதைச் செய்தது யார்-? "நல்லது, அங்கே உடனடியாக நான் எதுவும் செய்யமுடியாது, இனி மேல் நான் செய்வதற்கும் எதுவுமில்லை" என அங்கே வெளியே மருத்துவமனையில் மருத்துவர் கூறின போது அது யாராக - யாராக இருந்தது. நீ சுகமடைந்தாயே யார் அதைச் செய்தது-? அது எங்கிருந்து வந்தது-? நீயோ அதை அறியவில்லை, ஆனால் அதுவோ அவருடைய கிருபையே. உனக்காக இந்தக் காரியத்தைச் செய்தது அவரே.
59. ஒரு சிறிய பெண்மணி, ஒரு வேளை இப்போது இங்கிருக்கலாம்; நான் அறியேன். அவள் சற்றுத் தெருவைக் கடந்து அங்கே வசிக்கின்றாள் (அவளால் உள்ளே வந்திருக்க முடிந்தால், அவள் இங்கிருக்க வேண்டும். இல்லையென்றால் அவளுடைய இடத்தை சில வெளியாளுக்கு அவள் கொடுத்திருப்பாள்) ஒரு திருமதி ரீஸ் என் பக்கத்து வாசலில் அல்லது வீட்டில் திரு .ஆண்ட்ரூஸ் வசித்துக் கொண்டிருந்த போது என நான் நினைக்கின்றேன் நான் அங்கே கீழே அந்த முனைக்குச் சென்ற அந்த தருணத்தின் போது, அந்தத் தெருவை கடந்து... சரியாகத் தெருவைக் கடந்து இங்கே அந்த முனையில் அவள் அங்கு படுத்துக்கொண்டிருந்த போது நான் அந்த இரவில் அங்கே சென்ற போது அந்த முனையில் அந்த மனிதன் என்னைப் பார்த்து சிரித்தார். வியாதியாய் இருந்த போது அங்கு தான் அவள் வசித்தாள். அவள் அங்கிருந்து மேலே, இங்கே சில்வர் கிரஸ்ட்டுக்கு மரிக்கும்படியாக காசநோயோடு எடுத்துக் கொண்டு வரப் பட்டாள். அவளுடைய நுரையீரலானது சுவாசிக்க முடியாமல் முழுவதுமாக சளியினால் நிரம்பிக் கிடந்தது. இங்கிருந்து சரியாக இரண்டாவது வாசல், சபைக்கு மேலே முதல் வாசலில் சரியாக அதே நேரத்தில் தான், திருமதி கிரேஸ் வெபர் காசநோயில் சுகமானாள்.
60. புற்று நோயுடன் இருந்த ஒரு சகோதரி இங்கு அமர்ந்திருப்பதை நான் பார்க்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். மருத்துவர் அவளைக் கீழே அனுப்பிய போது ஒரு எலும்புக்கூட்டைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஒரு திருமதி... உங்கள் மீது ஒரு ஊதா மலருடன் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள், என்ன வீவர் அது சரி தானே-? ஆம். சில ஆண்டுகளுக்கு முன் புற்று நோயானது முழுவதுமாக அவளுக்குள் சென்று, அவளைத் தின்று கொண்டிருந்தது. புற்று நோயில் இருந்து சுகமடைந்திருந்தாள். ஏனென்றால் கீழே அவளுடைய வீட்டில் கர்த்தர் ஒரு தரிசனத்தைக் காண்பித்து "கர்த்தர் உரைக்கிறதாவது நீ மரிக்கப் போவதில்லை " என்று கூறியிருந்தார்.
61. நான் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு குளத்தின் தண்ணீரில் நான் அவளைப் பிடித்துக் கொள்ள இருந்த போது, அவளது முழங்கைகள் அது அதிகமாக, பெரிதானதாக இருக்கவில்லை அது பல வருஷங்களுக்கு முன்பு, இங்கே அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள். இன்னும் எத்தனை அதிகமாக இங்கு நான் கூற முடியும். செவிடர், ஊமையர், குருடர் புற்றுநோயினால் தின்னப்பட்டவர் இன்னும் அவ்விதமானவர்களை, தேவன் வாக்குரைத்தபடியால் தேவன் சுகமாக்கினார்.
62. அந்த இரவில் அந்த மூலையில் இருந்த அந்தப் பெண்ணுக்காக ஜெபித்துக் கொண்டு இருக்கையில் பரிசுத்த ஆவியானவர் கீழே இறங்கினார். அவளது சிறு பிள்ளைகள் அவளைச் சுற்றிலும் இருந்தனர். அவளது கணவரும் அங்கு அமர்ந்திருந்தார். பரிசுத்த ஆவியானவர் “கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் சுகமடையப் போகிறாள்” எனக் கூறினார்.
63. அதற்கு அடுத்த காலையில் திரு.ஆண்ட்ரூஸ் அந்த முழு நாத்திகன் அந்த முனையில் என்னைச் சந்தித்து என்னை வெட்கப்படுத்தி "பிரசங்கியே உன்னை நீயே வெட்கப்படுத்திக் கொள்ளவில்லையா என்று கூறினார்-?”. நான் பழைய கிழிந்த ஜோடு உடுப்புக்கு மேல் அணியப்படும் ஆடைகளை அணிந்து கொண்டு பண்டக சாலையிலிருந்து காலை சிற்றுண்டிக்காக சில ரொட்டிகளை வாங்குவதற்கு வந்து கொண்டிருந்தேன். அவர் அங்கு சென்று கொண்டிருந்தார். அவர் "உனக்கு வெட்கம் உண்டாகட்டும். அந்த சிறிய ஏழைத் தாயார் மரித்துக் கொண்டு இருக்கும் தன் பிள்ளைகளோடு அங்கே கிடத்தப்பட்டிருந்தாள். நீ ஒரு பொய்யின் கீழ் அவள் உயிரோடு இருக்கப்போகிறாள் என்று அவளிடம் கூறி இது போன்று அந்த குடும்பத்தை வஞ்சிக்கலாமா” என்று கூறினான்.
64. "ஐயா ஒரு போதும் நான் அதை அவளிடம் சொல்லவில்லை என்றேன். தேவன் அதைக் கூறி இருந்தார். அவருடைய வார்த்தைகள் உண்மையாய் இருக்கிறது” என்றேன்.
65. ஓ, "உனக்கு வெட்கம் உண்டாகட்டும், என்று அவர் கூறியதோடு, அங்கே தேவன் என்பதான அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை. உம்முடைய மனத்திற்குரிய கிளர்ச்சியும், மன எழுச்சியும் மட்டுமே”. ஓ, என்னே -!
66. ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவருடைய மனைவி, பாதிக்கப்பட்டவளாய் இங்குள்ள மருத்துவமனையில் இருந்தாள். உங்களில் அனேகருக்கு, அந்தக் கதை தெரியும். மிகவும் பிரபல கிறிஸ்தவப் பெண்ணாகிய, அவளுக்காக ஜெபிக்கும்படியாக, அவர் என்னிடம் வர வேண்டியதாய் இருந்தது. சகோதரியே...” என்று நான் கூறினேன். அவள் கிடத்தப்பட்டு இருந்தாள்.... இந்தக் காலையில் இந்தக் கட்டிடத்தில் எனது மனைவி இவ்வாறாக இங்கு எங்காகிலும் இருப்பாளேயானால், நாங்கள் அவளைப் பார்க்கச் சென்றிருந்தோம். ஒன்றையும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அங்கே அவள் வீக்கம் அடைந்திருந்தாள். ஒரு பெரிய இரத்தக்கட்டியானது அவளுடைய இருதயத்திற்குள்ளாக சென்று அவள் எந்த நிமிடத்திலும் உடனடியாக மரித்துவிடுவாள் என்று லூயிவில்லிலுள்ள மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
67. அவர் தன் தொப்பியைக் கழற்றியபடி அழுதுகொண்டு வந்தார். "பிரசங்கியாரே நான் ஒரு அவிசுவாசியாக இருந்து வந்திருக்கிறேன். ஆனால் தேவன் என் மனைவிக்கு உதவ முடியுமானால்...” நீங்கள் கூறின அந்தப் பெண் மேலே இருக்கிறாள்.. தனது வீட்டு வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றாள்”
68. "நிச்சயமாக" என்றேன். அவள் இன்னும் இன்றும் வாழ்கிறாள். அது எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது. அவள் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கிறாள்.
69. அந்த ஸ்திரீ கூறினாள். அவர் அப்படியே பொதுவான வழியிலே அழுது கொண்டு கடந்து வருகையில், அவளுக்காக நீங்கள் ஜெபிப்பீர்களா-?” என்று கேட்டார்.
70. "ஆம், ஐயா” என்று நான் கூறினேன்.
71. ஆனால் முதலாவதாக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று நான் கூறினேன். அவர் பார்க்கட்டும். நாங்கள் மருத்துவமனைக்குக் செல்ல வெளியே சென்றோம், அங்கே அவள் கிடத்தப்பட்டு அங்கே மரித்துக் கொண்டு எல்லாம் உப்பிப் போய் அவளது உள்ளிருந்து உதடுகள் வெளியே தள்ளிக் கொண்டு இவ்விதமாக இருந்தது.
72. என் மனைவி அவளை நேசித்தாள். நாங்கள் முழங்கால் படியிட்டோம். வர்ஜீனியாவில் உள்ள கிறிஸ்தவ சபையில் அவள் ஒரு கிறிஸ்தவ அங்கத்தினராய் இருந்தாள். நாங்கள் சென்று முழங்கால்ப டியிட்டு அவளுக்காக ஜெபித்தோம்; நாங்கள் ஜெபித்த போது ஒரு தரிசனமானது அவள் மேல் வந்தது. கட்டிடத்தின் கூரையிட்ட நுழைவாயிலில் சரியாக அங்கே நான் பின்பாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு சுவையூட்டப்பட்டு பதனிடப்பட்ட கலனில் வைக்கப்பட்ட ஒரு பெரிய ஆப்பிளை அவ்விதமாக எனது வலது கையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவள் ஒரு புகழ்பெற்ற சமையல்காரியாக இருந்தாள். நான் எழுந்து நின்று, "அன்பே, கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் உயிர் வாழப்போகிறாள்”.
73. அவளுக்கு அது சம்பவித்த போது.... அதிலிருந்து இரண்டு மணி நேரத்தில் அவர்கள் லூயிஸ்வில்லிருந்து சிறப்பு மருத்துவரை அழைக்க வேண்டியதாயிற்று; எல்லாத் தண்ணீர்களும் மற்றும் சகலமும் அவளிலிருந்து போய் விட்டது. சிறப்பு மருத்துவர் "மருத்துவரைத் தவிர்த்து யாரோ ஒருவர் இங்கே இருந்திருக்கிறார்” என்றார். அது என்னவாக இருக்கிறது-? கிறிஸ்து ஜீவிக்கிறார். இரண்டு வாரங்கள் சென்று அதே முனையில் நான் ஒரு மனிதனைக் கடந்து சென்றேன். நான் இப்பொழுது நான் சரியாக அந்த மரத்தைப் பார்க்கிறேன் அவர் என்னை நிறுத்தினார். திரு.ஆண்டரூஸ், இங்கே இதற்கு முன் நாம் சந்தித்திருக்கிறோம் என்று நான் அவரிடம் கூறினேன்.
74. ஆம், நாம் சந்தித்திருக்கிறோம் பிரசங்கியாரே என்று அவர் கூறினார். அவர் ஒரு விஞ்ஞானியாகவும் தாவரவியலாளராகவும் இருந்தார்.
75. "அதைப்பற்றி இப்பொழுது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்-?" என்று நான் கேட்டேன். நான் பார்த்துக் கொண்டிருந்த அதே பெரிய மரத்தை அவரும் பார்த்தார். "பிரசங்கியாரே எனக்கு ஒரு மரத்தை உருவாக்குங்கள்” என்றார் அவர். ஓ, அது செய்யமுடியாது, ஏனென்றால் தேவன், கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்து எழுந்தார். அதுதான் அது. அவர் நம்மோடு இருக்கிறார்.
76. திருமதி ரீவ்ஸ், அவள் இங்கிருப்பாளானால், அவள் இங்கே என்னிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள். சமீபத்தில் அவளும் அவளது மகளும் ஆற்றிற்க்கு அப்புறம் இருக்கையில், இந்த ஏழை வயதான பெண் அந்த முனையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். திரும்பிச் செல்வதற்கு அவளிடத்தில் ஒரு பக்கத்தில் பத்து நாணயமே இருந்தது. எனவே அவள் கடந்து போனாள். பரிசுத்த ஆவியானவரோ "பின்னால் சென்று பத்தில் ஒரு பங்கு நாணயத்தை அந்த ஏழை வயதான பெண்ணிடம் கொடு” என்று கூறினார். “ஏன்", "ஆற்றைக் கடப்பதற்காக என்னிடம் உள்ளதெல்லாம் அதுதான்" என்றாள் அவள். "நான் கர்த்தர்" என்று அவர் கூறினார். ஆமென்.
77. அவள் திரும்பிச் சென்று சகோதரியே என்னை மன்னியுங்கள்' என்று கூறி அவளது கரங்களை தன் மீது போட்டு, இந்தப் பத்தில் ஒரு பங்கு நாணயத்தை உனக்குக் கொடு என்று கர்த்தர் என்னிடம் கூறினார் என்றாள். "அம்மா நாம் எப்படி வீட்டை சென்றடையப் போகிறோம்-?" என்று அவளுடைய அம்மா கேட்டாள்.
78. அது தேவனைப் பொறுத்தது. அனேகமாக நாம் பாலத்தில் நடந்துப் போகமுடியும்” என்று அவள் கூறினாள்.
79. அவள் திரும்பி, அங்கிருந்து நகரத்தின் ஒரு உயர்ந்த கட்டிடத்திற்கு ஏறக்குறைய பாதி தூரம் நடந்து, அவர்கள் புறப்பட வேண்டிய இடமாகிய நிலையத்திற்கு சற்று முன்பு அவர்கள் வந்த போது "இங்கே பாருங்கள், அம்மா இங்கே தெருவின் மேல் அந்தப் பத்தில் ஒரு பங்கு நாணயம் கிடக்கிறது” என்று அவளுடைய மகள் கூறினாள்.
80. அது என்னவாக இருந்தது-? அது கிறிஸ்து. அனேக தருணங்களில் அவர் உங்களோடு இருந்திருக்கிறார். நீங்களோ அதை அறியாமல் இருந்திருக்ககிறீர்கள். அது அவரே தான். அவர் நடத்தும் விதமாக அப்படியே அவரைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். அவர் என்னை எங்கு நடத்துகிறாரோ, நான் அவரைப் பின் தொடர்வேன். வழிகள் அனைத்திலும் நான் அவருடன் செல்லுவேன். இருண்ட பள்ளத்தாக்குகளினூடாகவோ மற்றும் நிழலைப்போன்று ஒத்திருக்கும் ஒன்றினூடாகவோ இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அவர் என்னோடிருப்பார்.
81. அது சரியே. அவர் கீழே இறங்கி வந்த போது, கிலோயோப்பாவும் மற்றவர்களும்... கவனியுங்கள். கிறிஸ்து பேச ஆரம்பித்த போது அவர் ஒரு போதும் சிலவிதமான வெறித் தனமான எழுச்சியோடே செயல்படவில்லை. அவர் ஒருபோதும் சிலவிதமான வேத சாஸ்திரத்துக்கு ஏற்றபடி செல்லவில்லை. அவர் வேதவாக்கியங்களைத் திறந்தார். அவர் அதே வழியில் தான் இன்றும் செய்கிறார். அவர் “ஓ புத்தியில்லாத மந்த இருதயத்தை உடையவர்களே" என்று கூறி எதைப்பற்றி நீங்கள் மிகவும் துக்கமாக இருக்கிறீர்கள்” என்றார்.
82. அவர்கள், "ஐயா, நீர் அப்படியே ஒரு அன்னியரோ-?” என்று கேட்டனர். எல்லா மனுஷரைப் போன்று அவர் காணப்பட்டார்; அவர் ஒரு ரபியைப் போன்றோ அல்லது ஒரு ஆசாரியனைப் போன்றோ உடுத்தியிருக்கவில்லை. அவர் சாதாரண மனிதனைப் போன்றே உடுத்தி இருந்தார். எனவே அவர்...
83. அவர் அவர்கள் மத்தியில் நடந்து வந்தார். அவர்கள் அவரோடு கூட மூன்றரை வருடங்கள் இருந்திருக்கக்கூடும், அவர்களோ இன்னும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. "நல்லது”, நீங்கள் ஏன் மிகவும் மந்த இருதயமுடையவர்களாக இருக்கிறீர்கள்-?” என்று அவர் கேட்டார்.
84. "நல்லது நீர் ஓர் அன்னியரோ” என்றனர். நசரேயனாகிய இயேசு, ராஜாவாக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த அவர் கொல்லப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டு இது மூன்றாம் நாளாய் இருக்கிறது என்பதை நீர் அறிந்திருக்கவில்லையா” என்றனர். இப்பொழுதும் இந்தக் காலையில் எங்கள் ஸ்திரீகள் சிலரும் கூட எங்களிடம் வந்து ஒரு தரிசனத்தில் சில தூதர்களை அவர்கள் பார்த்ததாகக் கூறினார்கள். நாங்களோ அதை எண்ணிப் பார்க்கவே இல்லை என்று அவன் கூறினான். இந்தக் காரியங்கள் எல்லாம் எருசலேமைச் சுற்றிலும் அப்படி இருப்பது போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றான்.
85. "நீங்கள், ஏன் மிகவும் மந்த இருதயமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்-? நீங்கள் ஏன் மிகவும் புத்தியீனமாக இருக்கின்றீர்கள்-? தீர்க்கதரிசிகளை நீங்கள் விசுவாசிப்பதில்லையா-? ஓ, என்னே என்று கேட்டார். "வார்த்தையை உங்களால் விசுவாசிக்க முடியவில்லையா-?" என்றார். முதலாவதாக கிறிஸ்து பாடுபடவும் பிறகு அவருடைய மகிமையில் பிரவேசிக்க வேண்டியதை யும் எல்லாத் தீர்க்கதரிசிகளாலும் கூறியிருப்பதையும் நீங்கள் அறியவில்லையா-?” என்றார். அவர் மோசேயிலிருந்து ஆரம்பித்து (அது ஆதியாகமமாக இருக்கிறது) வழி நெடுகிலும் அவர் நடந்து பழைய ஏற்பாட்டின் சகல கட்டளைகளையும், என்ன நடக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு விளக்கினார்.
86. அந்தக் காலையில் அங்கே அவர்களோடு நீங்களும் இருப்பதை விரும்பவில்லையா-? ஆனால் இந்தக் காலையில் நீங்கள் இருக்கிறீர்கள். அவர் அப்பொழுது இருந்ததைப் போலவே அவர் அந்த விதமாகவே இன்றும் உயிருள்ளவராய் இருக்கிறார். மரித்தும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமாகிய நானே அவர்”. "நான் உயிரோடிருக்கிறபடியால் நீங்களும் உயிரோடிருப்பீர்கள்” என்று அவர் கூறினார்.
87. நீங்கள்... இங்கே அவர் மாத்திரம் ஜீவனோடு இருக்கிறவராக அல்ல, நீங்களும் அவரோடு கூட ஜீவிக்கிறவர்களாகயிருக்கிறீர்கள். உங்கள் இருதயத்துக்குள்ளாக கொண்டுள்ள இந்த மகத்துவான நம்பிக்கையே உங்களை ஜீவனோடு இருக்கச் செய்கிறது. நல்லது, கிறிஸ்து இயேசுவிலே அக்கரையினூடே இளைப்பாறுகிற ஒவ்வொரு விசுவாசியினுடைய அருமையான நம்பிக்கையை மரணம்கூட அதன் மேல் நிழல் இடத்தக்கதாக ஒன்றுமில்லை. அவன் மரித்தாலும் உயிரோடிருப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் மரியாமலுமிருப்பான்.
88. ஓ, அவர் லாசருவின் கல்லறைக்குச் சென்றபோது இந்த வார்த்தைகள் பரி.யோவான் 11-ல் பேசப்பட்டவைகள்.
89. இப்பொழுது, அவர் நெடுக நடந்து சிறிது நேரத்திற்குப் பின்பு, செல்கையில், அந்தச் சிறிய இடத்திற்கு அப்புறமாகக் கடந்து போவதைப் போலக் காண்பித்தார். சில நேரங்களில் அவர் அதைச் செய்கிறார் என நீங்கள் அறிவீர்கள். அம்மா நீங்கள் சக்கர நாற்காலியில் இருக்கையில் அது பார்ப்பதற்கு அவர் அப்படியே உங்களைக் கடந்து போகிறவர் போல அது இருந்ததா-? என்பதை எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா-? சகோதரனே, சகோதரியே மக்களாகிய நீங்கள் இன்றைக்குப் புற்றுநோயினால் கைவிடப்பட்டிருப்பதையும் அந்த மருத்துவர் உங்களை, உங்களுக்கு ஒன்றும் செய்ய இயலாமல் உங்களைக் கைவிட்டதையும் நீங்கள் எப்பொழுதாவது நினைத்திருக்கின்றீர்களா-?
90. அதைக் கூறும் நீங்கள், "நல்லது, அங்கே அமர்ந்திருக்கும் ஸ்திரீயானாவள் ஒரு நிழலாக மட்டுமே இருப்பாளேயானாள், சிறந்த மருத்துவர்கள் கர்ப்பப்பையில் முதலில் புற்றுநோய் இருந்தது என்றனர். சகோதரி, அது அப்படியாக இல்லையா-? தண்டு வடத்திற்கு மேலும் சென்று அவளுடைய குடல் சம்பந்தமான பகுதி மற்றும் காரியங்கள் மூலமாக தின்னப் பட்டிருந்தது. அவளால் எப்படி வாழமுடியும்-?" அதைத் தான் மருத்துவர் என்னிடம் கூறினார். “அவளால் எப்படி வாழ முடியும்-?”.
91. "அவர் ஜீவிக்கின்றபடியால்” அதனால் தான் என்று நான் கூறினேன். கேள்வி கேட்பது அது எனக்கானது அல்ல. அதை விசுவாசிப்பது தான் எனக்கானதாய் இருக்கிறது. அது சரியாய் இருக்கிறது.
92. "கர்த்தர் உரைக்கிறதாவது, சகோதரி நான் ஒரு போதும் உங்கள் இடத்தில் இருந்ததில்லை. ஆனால் அங்கே ஒரு சிறிய கோழிப் பண்ணை பின்பாக இருக்கிறது. நாட்களில் நீ அதைச் சென்று மூன்றே நாளில் பார்ப்பாய்” என்றார். அவளும் செய்தாள். அது சரியாய் இருக்கிறது. அவள் இன்னும் இந்தக் காலையில் இங்கிருக்கிறாள். ஏனென்றால் அவர் ஜீவிக்கின்றார். அவள் மரித்துப் போகும்படி அவர் விட்டுவிட்டதைப் போல அவர் செய்தார்.
93. நான் அவள் வீட்டிற்கு வந்த போது, "பிரசங்கியே, ஒரு ஊழியக்காரர் என் வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியானவள் இல்லை" என்று அவள் கூறினாள், நான் ஒரு பாவியாய் இருக்கிறேன் என்றாள்.
94. பாவிகளாகிய உங்களுக்காகத் தான் இயேசு மரித்தார். பாவிகள் எங்கு இருக்கின்றார்களோ அங்கே அவர் நற்பெயர் ஏற்படுத்தினார். அது சரியாய் இருக்கிறது. அவருடைய நற்பெயர் பாவிகளைப் புண்படுத்தவில்லை. அது பாவிகளால் ஏற்படுத்தப் பட்டது. நீங்கள் உங்களை அவரிடம் தாழ்த்தவில்லையென்றால் அவர் எங்கே புண்படுத்தப் படுகின்றாரோ, அங்கே அது சுயநீதியாய் இருக்கிறது. அது சரியாய் இருக்கிறது.
95. கவனியுங்கள், அவர் அப்புறம் போகிறவர் போல அவர் காண்பித்தார். அப்பா நீங்கள் இருதயத் தொந்தரவுடனும், அம்மா நீங்கள் புற்றுநோயுடனும் மரிக்கப் போகின்றீர்களா. நீங்கள் மரிக்க வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். இருக்கலாம்... "சகோதரன் பிரன்ஹாம், என் வாழ்க்கை முழுவதுமே ஒரு கிறிஸ்தவனாக இருந்துள்ளேனே, இது ஏன் சம்பவிக்கிறது-? நான் அவரைக் கேட்டேன்” என்று நீங்கள் கூறலாம். ஆனால் ஒருவேளை அவர் அப்புறம் போகிறவர் போல அவர் காண்பிக்கலாம்.
96. அதைத்தான் கிலோயாப்பாவுக்கும் மற்றவர்களுக்கும் அவர் செய்தார். அவர் கூறினார்... அவ்விதமாகக் காண்பித்தார். எல்லா நேரங்களிலும் அவர் உட்பிரவேசிக்கிறவர் என்பதை அவன் அறிந்திருந்தான். எல்லா நேரங்களிலும் அவர் அவர்களோடு போகிறவர் என்பதை அவன் அறிந்து இருந்தான். எனவே அவர் சொன்னார். அவர் அப்புறம் போகிறவராக காணப்பட்டார் அவர்களோ அவரை வற்புறுத்தினர், அதைப்போல நடந்து கொண்டனர். "உள்ளே வாரும், நாங்கள் உம்மை நேசிக்கிறோம்”. அது தான் வழி. "உள்ளே வாரும் எங்களோடு தங்கி இரும்”.
97. இன்று நீங்கள் அதைச் செய்யமுடியுமா-? மெத்தோடிஸ்ட்கள் அதைச் செய்யமுடியுமா-? பாப்டிஸ்டு-? அந்த பிரஸ்பிடேரியன்கள்-? அந்த நசரேயர்கள்-? அந்த பரிசுத்த யாத்திரீகர்கள்-? அந்த கத்தோலிக்கர்கள் அந்த லூத்தர்கள்-? நீங்கள் அதைச் செய்ய முடியுமா-?
98. "உள்ளே வாரும் எங்களோடு வாசம் பண்ணும்" என்று எந்த சபை சொல்லுகிறது என்பது அக்கறையே இல்லை. உயிர்த்தெழுந்த காலையில் அப்படியே கேளுங்கள்... உள்ளே வாரும் எங்களோடு வாசம் பண்ணும்”. நீங்கள் பெற்றுக்கொள்ள வில்லை என்றால் அப்படி அவர் ஒரு போதும் அவர் கேட்கமாட்டார்.
99. "கேளுங்கள் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும், தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டு அடைகிறான், தட்டுகிறவன் எவனோ அவனுக்கு அது திறக்கப்படுகிறது. அது சரியே. கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்” என்று அவர் கூறினார். ஒரு வேளை உங்களால் இயலுமானால் அல்ல, நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
100. எங்களோடு உள்ளே வாரும்" என்று அவர்கள் அவரைக் கேட்டனர். அவர் திரும்பி, அந்தச் சிறிய குடிசைக்குள்ளாக திரும்ப வந்தார். அது சரியே. தேசத்தில் அதிகமாக அவர்களுக்கு இருக்கும். ஈர களிமண்ணும் வைக்கோலும் கலந்து சூரிய வெளிச்சத்தில் காயவைத்து உருவாக்கப்பட்ட செங்கல்லும் கொம்புகளும் கொண்டு கட்டப்பட்ட எளிய சிறிய மண் கட்டிடமாக அது வழி அருகே இருந்திருக்கக் கூடும்.
101. மகிமையின் இராஜாவானர் அது போன்ற ஒரு இடத்திற்குள்ளாக குனிந்து முன்புறமாக வைத்து ஏன் வரவேண்டும்-? ஆனால் மிக மிகச் சிறிய ஒரு இடமாகப்பட்டது அங்கே ஒரு போதும் இருந்ததில்லை, ஒரு மிகச் சிறிய சபையாக அங்கே ஒருபோதும் அது இருந்ததில்லை. உலகத்தினால் மிகவும் நிராகரிக்கப்பட்ட ஒரு நபராக அங்கே ஒரு போதும் எவரும் இருந்ததில்லை. மிகவும் வீழ்ச்சியுற்ற ஒரு ஸ்திரீ அங்கே ஒரு போதும் இருந்ததில்லை. மிகவும் குடித்த ஒரு மனிதன் ஒரு போதும் அங்கே இருந்ததில்லை. ஆனால் அவரைக் கேட்கும் போது, அவர் வருவார். நிச்சயமாக. அவரைக் கேட்டு கண்டுபிடியுங்கள்.
102. நான் இதைக் கூறலாமா, இதைக் கடைசியாக விட்டுவிடட்டுமா-? மிகவும் வியாதி அடைந்து ஒருவர், ஒரு நபர் அங்கே ஒரு போதும் இருக்கவில்லை, மிகவும் தூரமாக கொண்டு போகப்பட்ட ஒருவர், ஒரு நபர் இருந்ததில்லை. ஆனால் கேளுங்கள் அப்பொழுது பெற்றுக் கொள்வீர்கள். "நான் உள்ளே வருவதற்காக என்னுடைய வசிப்பிடத்தை உங்களுடன் உண்டாக்குங்கள். நான் உங்களிடம் ஒரு சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன்”. அவர்கள் அவரை அழைத்திருந்தனர். அவர் உள்ளே வந்தார், அவர் ஒருமுறை உட்பிரவேசிப்பாரே ஆனால் உலகத்தின் கதவுகள் அடைபட்டு விடும், இயேசுவோடு தனிமையில்... அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள்.
103. அவர் மாத்திரம் உங்களை ஒருவிசை பெற்றுக் கொண்டு, உங்களைக் கூட்டத்திலிருந்து, சிற்றின்பத்தைத் தேடிக்கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து அவர் உங்களை வெளியே கொண்டு வரக்கூடுமானால்; அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று கூறும் சந்தேகப்படுவர்களிலிருந்து அவர் உங்களை வெளியே கொண்டு வரக் கூடுமானால்; "மத சம்பந்தமான உணர்வுகள் இனி அங்கே இல்லை என்று கூறும் ஜனங்களில் இருந்து எப்பொழுதாகிலும் அவர் உங்களை வெளியே கொண்டு வரக்கூடுமானால் இருதயப் பூர்வமான நம்முடைய பிதாக்களுடைய உணர்வுடைய மதத்திற்காக யுத்தகளத்தில் இரத்தம் சிந்தி, அங்கே அதற்கு ஒன்றுமே இல்லாதிருந்தது. அவர் உங்களை ஒருமுறை தனியே கொண்டு வர அவரால் மாத்திரம் எப்பொழுதாகிலும் கூடுமானால், உங்களுடைய, உங்களுடைய அனைத்து யோசனைகளும் வெளியில் மூடப்பட்டுவிடும்.
அவர் எப்பொழுதாவது அப்படிப்பட்டதான ஜனக்கூட்டத்தை சேர்ந்தாற்போல் பெற முடியுமானால், அங்கே மறுபடியும் ஒரு பெந்தேகொஸ்தே உண்டாயிருக்கும். அவர் எப்பொழுதாவது அப்படிப்பட்ட ஒரு சபையைப் பெற முடியுமானால், அங்கே தேசத்தையே துடைத்துப் போடக் கூடிய ஒரு எழுப்புதல் உண்டாகலாம். அவரோடு தனித்திருங்கள்.
104. உலகம் அவர் தனித்திருக்கையில் வெளிப்புற கதவுகள் மூடப்படும். அவர் சில ரொட்டியை எடுத்து அவர் அதைப்பிட்டு அப்படியே அந்தவிதமாக அதைச் செய்த போது, அது அவராகத் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் கண்கள் திறக்கப் பட்டன. நாள் முழுவதும் அவருடன் உரையாடினார்கள். அவர்கள் ஐக்கியம் கொண்டனர். அந்த நாளின் உஷ்ணத்தில், வழி நெடுகிலும் அவர்கள் பயணத்தினூடாக அவர் பிரசங்கித்ததை அவர்கள் கேட்டனர். ஆனால் ஒரு விசை தனித்திருக்கையில் அவர் தம்மை அவர்கள் அறியும்படி செய்தார். அவர்கள் கண்கள் திறந்தன.
105. ஓ, அவர் மாத்திரம் இந்த ஜனக்குழுவை இந்த மணிவேளையில் பெற்றுக் கொள்வார் ஆனால், நீ அறிந்திராத தனித்த ஒரு இடத்தில் அவருக்கு மாத்திரம் நீ கிடைப்பாயானால்... இந்தக் காலையில் ஒரு மெத்தோடிஸ்டாக நான் அமர்ந்திருக்கிறேன், நான் ஒரு பாப்டிஸ்டாக இருக்கிறேன் என்று கூறி, பாருங்கள். நீங்கள் அதைச் செய்யவே கூடாது. நீங்கள் இந்த உலகத்தை அப்பால் அடைத்துவிட வேண்டும். மற்ற ஜனங்களையும் புறம்பாக விட்டு மூடிவிடு. கிறிஸ்துவுடன் தனித்து நடக்க வேண்டும். எப்பொழுதாகிலும் நீங்கள் அவருக்கு தனிமையில் கிடைத்தால், பின்பு உங்கள் கண்கள் திறந்துவிடும்; "ஏன், எல்லா நேரத்திலும் அது அவராக மாத்திரமே இருக்கிறார்” என்று கூறுவீர்கள். இன்று காலையில் அவர் அதைச் செய்த விதமாக பிறகு அவர் சிலவற்றை இங்கு இந்தக் காலையில் அவர் வழக்கமாக செய்கிற விதத்தில் செய்வார். அவர் அப்போது செய்த அதே காரியத்தை, அதே கொள்கைகளின் கிரியையின்படி இன்றைக்கும் செய்ய வேண்டியவராயிருக்கிறார். கிறிஸ்து அங்கே இருப்பார் ஆனால் அல்லவென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிறிஸ்துவல்ல. அவர் அங்கே செய்த கிரியை தவறானதாய் இருக்கும்.
106. இங்கே அது இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள். கிறிஸ்துவானவர் முதலாம் உயிர்த்து எழுதலில் தாம் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததை அவர்களுக்கு நிரூபிப்பதற்கும், தம்மை அறிந்து கொள்வதற்கும் இந்த அப்போஸ்தலர்களுக்கு சிலவற்றை, அவர் பூமியில் இருந்த போது செய்ததையே செய்தார். அது அவரே, இக்கூடாரத்தில் இந்தக் காலையில் அசைவாடுவதற்கு அவர் கடமையுள்ளவராய் இருக்கிறார். இங்கே இந்தச் சபையில் இந்தக் காலையிலும் அவர் பூமியில் இருந்த போது செயத வண்ணமாகவே அவர் செய்தார். அதே சிக்கல்கள் எழும்பும் போது அதே விதமாக அவர் கிரியை செய்ய அவர் கடமைப்பட்டுள்ளார்.
107. இப்பொழுது, அடுத்த சில மணிவேளைகளுக்காக, நான்.... நீங்கள் அதில் இருப்பீர்களானால் எனது மற்ற வேதவசனத்திற்கு வாருங்கள் - என நான் - நான் கூற விரும்புகிறேன். வேகமாக . அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்தின் உன்னதமானவர் பூமியின் மிகவும் சிறியவரானார். அந்த பட்டணத்தில் இருந்த மிகச் சிறிய மனிதன் கீழ் நோக்கி அவரைக் காணும்படியாக அவர் உலகிலேயே தாழ்ந்த நகரமான எரிகோ என்ற ஒரு பட்டணத்தின் ஊடாக அவர் கடந்து சென்றார். அது சரியே. எவ்வளவாகத் தாழ்த்தி அவர் வந்தார்-? அதைப் பற்றி நீங்கள் எப்பொழுதாகிலும் நினைத்த துண்டா -?
108. கிருபையின் மூலம் நான் அவரைப்போல ஆகும்படியாக அவர் என்னைப்போல ஆனார். பாவத்தை அறியாத அவர் பாவமானார், பாவியாகிய நானோ தேவனுடைய பார்வையில் நீதிமானானேன். அதைத் தான் அவர் உனக்காகச் செய்தார். பாவியாகிய நண்பனே-! இந்தக் காலையில் அதைத்தான் அவர் உனக்காக செய்தார். நீ எவ்வாறு அவரை தள்ளிப் போட முடியும்-?
109. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது அது அவருடைய... அவருடைய பூமிக்குரிய கிரியை முடிந்து விட்டது. உயிர்த்தெழுதலில் அவர் கூறின சகலத்தையும் அவர் நிரூபித்தார்.
110. இப்பொழுது உலகமானது, சிறிதே அறிந்துள்ளதைப் பற்றியதான வேறொரு கிரியை அவருக்கு இருக்கிறது. அது சரியாய் இருக்கிறது. அவருடைய அடுத்த கிரியை பரமேறுதல், நாம் அதன் பேரில் சிறிது நேரம் பேசலாம்.
111. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, பின்பு, அவர் பூமியில் ஏற்கனவே இருப்பதை, அவர் இங்கே மாம்சத்தில் இருந்த போது செய்த அதே காரியங்களைச் செய்து, தவறிப் போகாத ஆதாரங்களைக் கொண்டு தம்மை நிரூபித்தார். மேலும் இங்கே அவர் நடந்து கொண்டிருக்கிறார். அப்பத்தை பிட்டுக்கொண்டு அவர்களுடன் புசித்துக் கொண்டிருக்கிறார். ஓ, அதே இயேசுவானவர், அவர் அதை நிரூபித்தார்.
112. இப்பொழுது பரமேறுதல் வருகிறது. இப்பொழுது நேரம் வருகிறது. அவர் எல்லா வானங்களுக்கும் மேலாக ஒவ்வொரு ஒவ்வொரு, ஒவ்வொரு, தூரமான எல்லாவற்றைக் காட்டிலும் உயரே ஏறினார் என வேதாகமம் கூறுவதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா-? இந்த பூமி பிசாசிற்கு சொந்தமானாது. வீழ்ச்சியின் மூலமாக இந்த பூமியானது பிசாசினிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பூமியில் உள்ள ஒவ்வொரு இராஜ்ஜியமும் பிசாசினால் ஆளப்படுகிறது. அதை நினைப்பதையே நாம் வெறுக்கிறோம். ஆனால் அது அப்படி இருப்பதாக வேதம் கூறுகிறது.
113. அதன் - அதன் காரணமாகத்தான் நம்மிடம் யுத்தங்கள் துப்பாக்கிச் சூடுகள், சண்டைகள், மேலும் சிக்கல் இவைகள் யாவும் இருக்கிறது. ஏனென்றால் இந்தப் பூமியின் இராஜ்ஜியங்கள் எல்லாம் பிசாசின் இராஜ்ஜியங்களாக இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. வரப்போகிற மகத்தான ஆயிரவருட அரசாட்சியில், சகல பரலோகங்களே நீங்களும், பரிசுத்த தீர்க்க தரிசிகளே நீங்களும் களிகூருங்கள். உலகத்தின் இராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தருடைய இராஜ்ஜியங்களாயின. அவர் - அவர் என்றென்றும் ஆட்சி செய்வார், ஆளுகை செய்வார். இப்பொழுது அவைகள் மாறும். பின்பு அவர் வரும் போது நமக்கு இனி யுத்தமிருக்காது, இனி வியாதியிருக்காது, இனி தொல்லையிருக்காது. இப்பொழுது கவனியுங்கள். அவர் மரித்த போது...
114. அங்கே இவ்வாறு பரமேறுதலைப் பற்றிய ஒரு சிறு பேச்சு மட்டுமே இருக்கும். இப்போதுள்ள அவர் மேலே பரமேறியபோது அது மகத்தான் நாட்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் உலக முழுவதும் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்த அந்த நாள் முதல் மனுக்குலத்திற்கு எல்லா வானங்களும் அடைக்கப்பட்டு இருந்தது.
115. சாத்தான் ஆகாயத்தின் அதிகாரப் பிரபுவாய் இருக்கிறான். அதுசரியே-! ஓ, அதிகாலையின் மகனாகிய நீ ஏன் வானத்திலிருந்து விழுந்தாய் எந்த மனிதனும் மகிமையை உள் நோக்கிப் பார்க்க முடியாது. எந்த மனிதனும் விளங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த வல்லமை நமக்கு மேலே அப்படியே இருக்கிறது. பரலோகம் என்பது "வாயுமண்டலத்திற்கு மேலாக என அர்த்தமாகும், பிறகு இந்த எல்லா வல்லமைகளும் பாவத்தின் காரணமாக மனுக் குலத்தில் இருந்து விலகி மூடப்படுகிறது.
116. ஆனால் அவர் மரித்த போதும், உயிருடன் எழுந்த போதும், மேலே வந்தபோதும், அவர்... ஆனால் முதலாவதாகக் கீழே வந்த அவரே அல்லாமல் மேலே பரமேறியவர் ஒருவரும் இல்லை என்று வேதம் கூறுகிறது.
117. அவர் பரலோகத்தில் இருந்த போது, ஆதியில் தேவனிடத்திலிருந்து வந்த லோகோஸாக அவர் இருந்தார், மேலும் அவர் கீழே உலகத்தில் வந்து தன்னை ஒரு தூதனாக்கிக் கொள்ள வில்லை. அவர் கீழே உலகத்தில் வந்து ஒரு தூதனாகாமல் ஒரு அடிமையின் ரூபம் எடுத்தார். மகத்துவ யெகோவாவின் மகிமையின் கீழ் வராமல், மனிதனை மீட்க ஒரு மனிதனாகக் கீழே வந்தார். மனிதனுக்காக மரிப்பதற்கு, மரிப்பதற்காக - ஒரு மனிதனாக வந்தார். அவர் ஒரு போதும் தேவனாக மரிக்கவில்லை. அவர் மனிதனாகவே மரித்தார். மனிதனின் பாவமானது மனுஷகுமாரன் மேல் இருந்தது. தண்டனையைச் செலுத்துவதற்காக அவர் மனிதனாக வேண்டியதாக இருந்தது.
118. அவர் என்ன செய்தார்-? அவர் பாவத்தை எடுத்து அகற்றவும், அழிக்கவும் உலகத்திலிருந்து வியாதியை எடுத்து அகற்றவும் மரணத்திற்காக அவர் தேவ தூதரிலும் சற்று சிறியவராக் கப்பட்டிருந்தும், அவர் உன்னதத்திலிருந்து, தேவனிடமிருந்து கீழே வந்த போது அவர் தூதர்களினூடாகக் கீழே வந்தார், ஒரு மனிதனாகிக் கீழே வந்தார், "நான் ஒரு மனிதன் கூட இல்லை நான் ஒரு புழு, மனிதனல்ல” என்று அவர் கூறினார். தேவனுடைய லோகோஸ் இடமிருந்து அவர் அசட்டை பண்ணப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்.
119. ஏனெனில் நாம் விரும்பத்தக்க அழகு அவருக்கு இல்லாதிருந்தது. எல்லா மனிதனுக்கும் மேலாக அவர் பழுதுபடுத்தப்பட்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு ராஜாவைப் போல இல்லாமல், அனேகமாக சிறிதளவு மெலிந்தும், இளைத்தத் தோற்றமுடைய நபராகவும் இருந்தார். பல நேரங்களில் மக்கள், அவர்கள் உடுத்தியிருக்கும் விதம் அல்லது உயரம் இவைகளைக் கொண்டு நிதானிக்கப்படுகின்றனர். மனிதன் எவ்வளவு பெரியவன் என்றும் அவனுடைய தசைகள் எவ்வளவு வலுவானவைகள் என்றும் நிதானிக்கப்படாமல், மனிதன் அவனுடைய சுபாவம், சுபாவத்தால் நிதானிக்கப்படவேண்டும். தங்களைப் பற்றிய ஒரு அவுன்சு கூட மனிதநேயமில்லாத இருநூறு பவுண்ட் எடையுள்ள மனிதனை, நான் பார்த்திருக்கிறேன். அவனுடைய இருதயத்தில் அவன் என்னவாக இருக்கிறான் என்ற சுபாவத்தைக் கொண்டே மனிதன் நிதானிக்கப்படுகிறான்.
120. மேலும் கிறிஸ்துவானவர் சரீர பலத்தைக் கொண்டு நிதானிக்கப்படாமல் அவருடைய சுபாவத்தைக் கொண்டே நிதானிக்கப்பட்டார். ஒரு மனிதன் கூட அவரைப்போல ஒருபோதும் வாழ்ந்ததே இல்லை. ஒரு மனிதன் கூட அவரைப்போல ஒருபோதும் மரித்ததில்லை, ஒரு மனிதன் கூட அவரைப்போல ஒருபோதும் உன்னதத்திற்கு ஏறிப்போனதில்லை, ஏனென்றால் அவர் தேவனாக இருந்தார். “நான் ஒரு மனிதன் அல்லவே”.
121. அவர் தமக்கு நற்பெயர் உண்டாக்கிக் கொள்ளவில்லை. நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா-? ஒரு செயற்கைக் கண்ணை உருவாக்கியவன், ஒரு கீர்த்தியை உண்டு பண்ணிக் கொண்டான். பொய்ப்பற்களை உருவாக்கியவன் ஒரு கீர்த்தி உண்டு பண்ணிக் கொண்டான். ஒரு மரக்கையை உருவாக்கின மனிதன் தனக்கு ஒரு கீர்த்தி உண்டு பண்ணிக் கொண்டான். ஆனால் உண்மையான கண்ணை உருவாக்கின மனிதன் உண்மையான கையை உருவாக்கின மனிதன் தனக்குக் கீர்த்தி உண்டு பண்ணிக் கொள்ளவில்லை. ஆனால் வேலைக்காரனாக, பாவிகளான மனிதர்களை அவர் திரும்பவும் வென்றெடுக்க அவர்களுக்கு ஒரு அடிமையானார்.
122. ஒரு சரியான சிந்தையில் இருக்கும் ஒரு மனிதன் எவ்வாறு, அதன் சுவிசேஷ சத்தியத்தை அறிந்து, மனிதனைப் புறக்கணிக்கவும், பாவ ஜீவியத்திலிருந்து அந்த மனிதனை இரட்சிக்க தேவன் அளித்துள்ள வெகுமானத்தை நிராகரிக்கவும் முடியும்-? அதை அவன் எப்படிச் செய்ய முடியும்-? எனக்குச் சற்றேனும் விளங்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் எவ்வாறு நிராகரிக்க முடியும், எதையாகிலும் செய்வதற்கு அவர் இங்கு இல்லாதிருக்கும் போது, அதை அவருக்காக நீங்கள் செய்யத் தான் வேண்டும். ஆனால் நீங்கள் செய்யப் போகிற காரியங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு வழி அப்படியே உங்களுக்கு ஏற்படும் போது மேலும் அது உங்களுடையதாகி விடுகிறது.
123. அவர் செய்த போது... அவர் கல்வாரியில் மரித்துக் கொண்டிருந்த போது சகலமும் அவரைப் புறகணித்தது. அவர்கள் அவர் மீது துப்பினார்கள். அவர்கள்... அவருடைய அவருடைய முகம் முழுவதுமாக பரிகாச எச்சில் உமிழ்தலாக இருந்தது. அவரது கண்களைச் சுற்றி ஒரு கந்தையைக் கட்டி, அவருடைய தலையில் அவரைக் குட்டி "நீ ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தால் உன்னை அடித்தது யார் என்று எங்களிடம் கூறு” என்றார்கள்.
124. ஒரு சிறு பெண் அவர்கள் மத்தியில் ஓடிச்சென்று, "உங்களுடையவர்களை சுகமாக்கினார், உங்களுடையவர்களை உயிரோடு எழுப்பினார், நன்மையே செய்தாரே தவிர அவர் வேறு என்ன செய்தார்” என்று கூறினாள்.
125. அவர்கள் அவளை வாயில் அடித்தது, “உன்னுடைய ஆசாரியனுக்கு பதிலாக, நீ அந்தப் பெண்ணுக்கு செவி கொடுத்தாயா-? அப்படிப்பட்ட ஒரு நபரை விட்டு விலகியிரு” என்றார்கள்.
126. அவர் கல்வாரியண்டைக்குச் சென்ற போது அவருடைய சொந்த பிரியமான தாய் அவளுடைய இருதயத்தின் அடித்தளத்தில் ஆச்சரியப்பட்டுக் கொண்டு அவருடைய இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளில் நடந்தாள். (தேவனே, நானும் அதே வழியில் நடப்பேனாக) அவள் தனது அன்பிற்குரிய பிள்ளை அங்கே மரிப்பதைப் பார்த்த போது, பார்ப்பதற்கோ ஜம்பது வயதைப் போன்றும் முப்பத்தி மூன்றே வயதான ஒரு மனிதன் என்றும் வேதம் கூறுகிறது, அவருடைய பிரயாசத்தால் அங்கே அனேகமாக அவருக்கு நரையாக மாறிக் கொண்டிருந்து, அது சரீர சம்பந்தப்பட்டதல்ல. பொறுக்க முடியாத துயரத்தால் அங்கே அவர் பாடுபட்டதால் பார்ப்பதற்கு முகத்தின் தோற்றம் கடுமையாக இருந்தது.
127. அவருடைய இரத்தமும் தண்ணீரும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்தது என்று வேதம் கூறுகிறது. இரத்தத்தின் வேதியில் தெரிந்த எந்த மருத்துவரோ அல்லது ஏதேனும் ஒன்றோ, துக்கம் மாத்திரமே அதைச் செய்தது எனக்கூறமுடியும். அவர் ரோம ஈட்டியினால் மரிக்கவில்லை; அவருடைய கையிலும் அல்லது பாதத்திலும் அடிக்கப்பட்ட ஆணியினாலும் அவர் மரிக்கவும் இல்லை. ஆனால் புறக்கனிக்கப்பட்டவராக உடைந்த உள்ளத்தோடு அவர் மரித்தார். அவருக்குச் சொந்தமானதில் அவர் வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை ”.
128. "சகோதரன் பிரன்ஹாமே, அங்கே கல்வாரியின் அந்த நாளில் நான் நின்றிருக்க எனக்கு விருப்பம் என்று கூறலாம். சகோதரனே இன்று நீங்கள் ஒரு சிறந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அவர் தம்மையே வெற்றி சிறக்கப்பண்ணி நிரூபித்தார். அந்த உயிர்த்து எழுந்த கர்த்தராகிய இயேசுவின் சமூகத்தில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள்.
129. அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறபடியே அவரைப் பாருங்கள்.
130. அவர் மரித்தோரிலிருந்து எழுந்த பின்பு இங்கே நாம் கவனிக்கிறோம். அப்படியே அவர் சென்று, பின்பு அவர் தமது சீஷர்களோடு பேசிய பிறகு, அவர் மேலே உன்னதத்திற்கு ஏறினார் என்று வேதம் கூறுகிறது. அவர் என்ன செய்கிறார்-? அவர் எடுத்தார். அவர் இங்கே லோகாஸாக, பரலோகத்தில் இருந்து இறங்கி வந்து, அவர் திரும்பச் சென்ற போது, அவர் அவரோடு எடுத்துச் சென்றார்... அந்தப் பிரதான ஆசாரியன், தமது சொந்த இரத்தத்தினாலாகிய தீப ஒளியினால் அபிஷேகிக்கப்பட்ட பிரதான ஆசாரியனரானார். அவர் அங்கே கீழே சென்ற போது, தேவனும் மனிதனும் ஐக்கியம் கொள்ளவிடாமல் இங்கே மேலே இருந்த அந்த குற்றம் சாட்டப்பட்ட இந்த வல்லமைகள், அது ஏதேன் தோட்டத்திலேயே முறிக்கப்பட்டது.
131. பாவமானது அந்தக் காரியத்தை செய்தது. சாத்தானுக்கு ஒன்று இருந்தது... இவ்வுலகத்தின் ஆளுகையானது சாத்தானுடையதாயிருந்தது. அது பிசாசிற்கு சொந்தமானதாயிருந்தது. ஆனால்.. அவர் அபிஷேகிக்கப்பட்ட பிரதான ஆசாரியராய் வந்த போது...
132. பிரதான ஆசாரியனாகிய ஆரோன் விலைமதிக்க முடியாத அபிஷேக எண்ணெயுடன் மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் திரைக்குப் பின்பாகப் போகும் போது, ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து செயல்படும், "பரிசுத்தர், கர்த்தருக்கு பரிசுத்தம்" என்றும் தனக்கு முன்பாக ஒரு ஆட்டுக்குட்டியின் இரத்தத்தோடு கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியைப் போல, அவன் உள்ளே நடக்கிறான், வேறு விதமாக அவன் போவானேயானால் அவன் மரித்துவிடுவான்...
133. கிறிஸ்துவோ தம்முடைய சொந்த இரத்தத்தோடு ஒரு பிரதான ஆசாரியராக தேவ வல்லமையினால் அபிஷேகிக்கப்பட்டு மரித்தோரிலிருந்து எழுந்து சாத்தானுடைய ஆளுகையை கிழித்துப் போட்டார். அந்த இராஜ்ஜியத்தை அவர் உடைக்கையில், அவர் வானங்களுக்கும், வானங்களுக்கு அப்பாலும் சென்றார். இப்பூமியின் மேல் மிகச்சிறியவராக வந்து - இருந்த அவர், பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் பரலோகத்தை கீழ் நோக்கிப் பார்க்கும் மட்டும், தேவன் அவரை சிகரத்தின் மேல் அமரச் செய்தார், ஆமென். இன்றைக்கும் தூரத்தில் அவர் வல்லமையுள்ள ஜெயவீரராக இராஜ்ஜியத்தில் அவர் என்றென்றுமாய் நின்று கொண்டு இருக்கிறார் என்பதில் வியப்பொன்று மில்லை.
134. ஏசாயா "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், அவர் நாமம் ஆலோசனை கர்த்தர்; சமாதான பிரபு; வல்லமையுள்ள தேவன்; நித்திய பிதா எனப்படும். அவருடைய இராஜ்ஜியம் முடிவடையாது என்றென்றுமாக இருக்கும்” என்றான். அவர் வானாதி வானத்தில் அமர்ந்து, ஒவ்வொரு தேவ தூதனுக்கும், பிரதான தூதனுக்கும் மேலாக தாவீதின் சிங்காசனத்தின் மேல் அவர் அரசாளுவார். எல்லா துரைத்தனத்தையும், வல்லமையையும் அவருடைய சிலுவையில் அறையப்படுதலிலும், உயிர்த்தெழுதலிலும் கிழித்துப் போட்டு அழித்தார். 
135. அவர் பாவத்தின் திரைக்குள் உட்புகுந்து அதைத் தாக்கினார். அவர் அதைத் தமது சொந்த சரீரமாகிய பிரதான ஆசாரியரின் இரத்தத்தில் தனியாகக் கிழித்தார். அவர் அடுத்ததற்கு வருகிறார்... 
136. அது என்னவாக இருக்கிறது. ஜனத்தின் மீது பற்றிக் கொண்ட வியாதியின் திரையாக அது இருந்தது. அவர் அதைத் தனியாகக் கிழித்தார். "நம்முடைய மீறுதல்களுக்காக அவர் காயப்பட்டார்; அவருடைய தழும்புகளால் நான் குணமானோம்”
137. வியாதிக்கு அப்பால் காணப்படும் மாபெரும் பாவத் திரையின் ஊடாக அவர் சென்றார். மாபெரும் கவலையின் திரையின் ஊடாக அவர் சென்றார். மாபெரும் பயத்தின் திரையின் ஊடாக அவர் சென்றார். அவர் அவைகள் ஒவ்வொன்றையும் கிழித்தெறிந்து மிக உன்னதத்திற்கு அவர் ஏறி பரலோகத்தில் இருக்கும் நாமத்திற்கு மேலாக அல்லது கீழே பூமியில் இருக்கும் அல்லது வரப்போகும் உலகத்தில் இருக்கும். எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைப் பெற்றுக்கொண்டார். பிறப்பதற்கு ஒரு இடமும் மரிப்பதற்கு ஒரு இடமும் கூட இல்லாத அவரை, தேவன் அந்த அன்பான ஒருவரை, கீழாக இறக்கி மிகவும் தாழ்த்தினார். தேவன் அவரை உன்னதத்திற்கு உயர்த்தித் தொலைவில் மகிமையின் கிரீடத்தை அவருக்குக் கொடுத்து, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைக் கொடுத்தார். ஒவ்வொரு திரையையும் அவர் இரண்டாகக் கிழித்ததால் இன்றைக்கு வல்லமையுள்ள ஜெயவீரராக அங்கே அவர் வீற்றிருக்கிறார்.
138. அந்தப் பாவத்தின் திரை இரண்டாகக் கிழிக்கப்பட்டது. அந்த வியாதியின் திரை இரண்டாகக் கிழிக்கப்பட்டது. தேவனிடமிருந்து மனிதனை தொலைவில் வைத்த எல்லாத் திரைகளையும் இரண்டாகக் கிழித்தார். “நானே வழியும், சத்தியமும், வெளிச்சமுமாய் இருக்கிறேன்” எல்லா வல்லமையையும் அவர் உடைத்தார். எல்லாப் பிசாசுகளையும் அவர் சிதறடித்தார். எல்லாத் திசைகளிலும் சுழன்று திரும்பக் கூடிய சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களை வீசும் விளக்கை அவர் மகிமையிலிருந்து உண்டுபண்ணினார்...-?..
139.  ஓ அந்த பழைய தீர்க்கதரிசியானவன் அவன் அங்கே கீழே, அந்த இரவில் கல் படுக்கையில், கல் தலையணையில் படுத்திருந்த போது தூதர்கள் ஏறுவதையும் இறங்குவதையும் அவன் பார்த்தான். கவனியுங்கள். 
140. முதலாவதாக அது ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. ஆனால், இந்த முறையோ, அவர் சகல வல்லமைகளையும் உடைத்து சகல இராஜ்ஜியத்தையும் யுத்தம் செய்து உன்னதத்தில் உள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்த போது, நாம் அழைக்கிற யாக்கோபின் ஏணியில் தேவனும் மனிதனும் ஏறுகிறதும் இறங்குகிறதுமாக அது இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக....
141. இந்த பரிசுத்த ஆவியின் அலைவரிசையானது இந்த இருண்ட உலகில் திறந்துகிடக்கிறது எவனொருவனுக்கு விருப்பமிருக்கிறதோ வந்து இந்த மாபெரும் அலைவரிசையாகிய அவருடைய ஆசீர்வாதங்கள் மற்றும் மீட்புக்குரிய ஆசீர்வாதங்களுக்குள்ளாக ஞானஸ்நானம் பெறட்டும். அவர் அதற்காகவே மரித்தார்.
142. அவருடைய மகத்துவத்தின் வஸ்திரமணிந்தவராக அவர் வீற்றிருக்கும்போது, அப்பேர்பட்ட ஒருவரைப் புருஷரும் ஸ்திரீகளுமாகிய நீங்கள் எவ்வாறு தள்ளிவிட முடியும்-? இந்தக் காலை வேளையில் அவர் தேவனுடைய மகிமையில் வீற்றிருக்கிறார், நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்-?
143. வீடில்லாத புருஷருக்கும் ஸ்திரீக்கும் ஒரு வழியை உண்டு பண்ணவும், வீடில்லாதவர்களுக்காகவே அவர் இங்கே இந்த உலகத்திற்கு வந்தார். நம்பிக்கை இல்லாத புருஷருக்காகவும், ஸ்திரீக்காகவுமே, செல்வதற்கு இடமே இல்லாத புருஷருக்காகவும் ஸ்திரீக்காகவுமே, இன்று கீழே தெருக்களில் இன்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு நடந்து கொண்டிருக்கும் வீடில்லாமல் அலைந்து கொண்டிருப்பவர்களுக்காகவுமே குதிரைப் பந்தைய ங்கள் சூதாட்டங்கள் இன்னும் இவை சார்ந்தவைகளில் ஒரு ஆறுதல் தேடி முயற்சிப் பவர்களுக்காகவுமே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவர் அவர்களுக்காக ஓர் இடத்தை உண்டு பண்ணி இருக்கிறார். ஒவ்வொரு மனுஷனுக்கும், அது அந்தத் தண்ணீர் ஓடுவதைப் போல இலவசமாயிருக்கிறது. விருப்பமுள்ளவன் எவனோ அவன் வரட்டும்.
144. இந்தத் திரைக்கு வெளிப்புறத்தில் உன்னால் நடக்கவே முடியாது. நீ இதைத் தேடிக் கொண்டு இங்கே வரவேண்டும். உனக்கும் தேவனுக்கும் இடையில் எங்கே ஒன்றும் இல்லாது இருக்கிறதோ நீ அங்கே வரவேண்டும். அங்கே தேவனுடைய தூதர்கள் ஏறவும் இறங்கவும், முன்னும் பின்னும் தேவனுடைய செய்திகளைத் தனிப்பட்டவர்களுக்கு முன்னும் பின்னும் கொண்டு வருகின்றனர்.
145. அங்கே எனது ஆத்துமாவிற்கும் இரட்சகருக்கும் இடையே ஒன்றுமே இல்லை என்று கவிஞன் கூறினான். அங்கே வல்லமையுள்ள ஜெயவீரராக அவர் வீற்றிருக்கிறார். அவர் எல்லாத் திரையையும் இரண்டாகக் கிழித்திருக்கிறார். நீ இரட்சிக்கப்படும் படியாக அவர் திரையைக் கிழித்திருக்கிறார். நீ விபச்சாரம் செய்திருப்பாயானால், நீ சபிக்கப்பட்டு இருப்பாயானால், நீ ஏதாகிலும் தவறிழைத்து இருப்பாயானால் அவர் அந்தத் திரையைக் கிழித்தார்; அவர் உனக்காக திரையைக் கிழித்திருக்கிறார். சாத்தான் பிடி உங்கள் மீது பற்றுவதை அது தடுக்கிறது. நீங்கள் மாத்திரம் அவரை ஏற்றுக் கொள்வீர்களானால் அவர் அதைக் கிழித்திருக்கிறார்.
146. இன்றைக்கு நீங்கள் வியாதியாய் இருந்து நீங்கள் சுகமடைய முடியாது என்று மருத்துவர்கள் கூறுவார்களேயானால், அவர் அந்தத் திரையை இரண்டாகக் கிழித்திருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தேவனுக்கு முன்பாக உடைத்திருக்கிறார். ஒவ்வொரு திரையையும் கிழித்தார். அவர் ஒவ்வொரு ராஜ்ஜியத்தையும் கிழித்தெறிந்து, அவர் ஒவ்வொரு திரையையும் இரண்டாக கிழித்தார். அவர் திரையை இரண்டாகக் கிழித்து அந்தப்பொழுதிலிருந்து அவர் அங்கே வல்லமையுள்ள ஜெயவீரராக வீற்றிருக்கிறார்.
என் நண்பனே, ஒரு நிமிடம் பார். கிலேயோப்பாவாகிய அவனும் அவன் நண்பனும் எம்மாவுக்குப் போகிறதான வழியில் மாத்திரம், அங்கே அவர் தரிசனமாகவில்லை. ஆனால் ஒரு நாள் சிறிய இரத்த சாட்சி, வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டின் முதல் இரத்த சாட்சி சிறிய ஸ்தேவான் மரிக்கும் போது, உறுதியாக அங்கு நின்றான். சகோதரனே, ஸ்தேவான் தேவனை அறிந்திருந்த அந்த அலை வரிசைக்குள்ளாக அங்கே கொண்டு வரப்பட்டிருந்தான். அவர்கள் அவனைக் குற்றம் சாட்டிய போது, அவன் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் இருந்தான் என்று வேதம் கூறுகிறது. சனகெரிம் சங்கம் அங்கே நின்று அவனைக் குற்றம் சுமத்தியது...
147. அவன் உறுதியுள்ளவனாக ஒரு தூதனுடைய முகத்தை உடையவனாக தான் எங்கு இருக்கிறோம் என்று அறிந்தவனாக அங்கே நின்று கொண்டிருந்தான். "இஸ்ரவேல் மனுஷர்களாகிய நீங்கள்” என்று அவன் பேசத்தொடங்கி, "தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாதிருந்தார்கள்” என்று அவன் கூறினான். "வணங்காக் கழுத்து உள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போலவே நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்போதும் எதிர்த்து நிற்கிறீர்கள்” என்று பின்னும் கூறினான். அங்கே நின்று கொண்டு எது சரி எது தவறு என்று அவர்களிடம் கூறிக் கொண்டிருந்த நீதிமானாகிய இரத்த சாட்சியின் இரத்தத்தை பழிவாங்குவதற்கு, அந்த இரத்தத்தை வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு, ஒரு ஆட்டுக் குட்டியை ஓநாய்கள் இழுத்து செல்வதைப் போல அவனை இழுத்துச் சென்றனர். அவர்கள் அவனைத் தரையிலே எறிந்த போது, பெரும் மண் பாறையைக் கொண்டு, தலையின் மேல் அதைப்போல ஒன்று கொண்டு அடிக்க ஆரம்பித்தனர். சிறிய ஸ்தேவானோ பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் உறுதியாக வானத்தை நோக்கிப் பார்த்தவாறு தனது கரத்தை உயர்த்தி வானங்கள் திறந்து இருக்கிறதை நான் காண்கிறேன், இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதை நான் காண்கிறேன்” என்று கூறினான் என்று வேதம் கூறுகிறது.
148. ஒரு பிரதான ஆசாரியன்... எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வேலைகளை முடிக்கும் போது, அவன் வெளியே வருகிறான். நான் பிரசங்கம் செய்து முடிக்கும் போது, நான் கீழே அமருகிறேன், ஆனால் பிரசங்கித்து முடிக்கும் வரை அப்படி அல்ல. நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, நீங்கள் கீழே அமரும் போது, உங்களுடைய வேலையானது முடிவடைந்து விடுகிறது. இயேசு மகிமையின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். 
149. ஆனால் தம்முடைய முதல் இரத்த சாட்சி கிறிஸ்துவுக்காக மரித்ததை அவர் பார்த்த போது, உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு வேகமாக வானங்களை பின்பாகத் தள்ளி, சிறிய ஸ்தேவானுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்து அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருவதற்கு அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்திருக்க வேண்டியதாய் இருந்தது.
150. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து அங்கே தான் அவர் இருக்கிறார். அவருடைய இராஜ்ஜியமானது நித்தியத்திலிருந்து நித்தியம் வரை எட்டுகிறது. ஒவ்வொரு தூதர்களுக்கும் ஒவ்வொரு துரைத்தனத்திற்கும் பரலோகத்தில் உள்ளவைகள் ஒவ்வொன்றிற்கும் மிகவும் மேலாக அவர் இருக்கிறார். ஏன், அவருடைய - வானங்கள் அவருடைய சிங்காசனம் வானாதி வானங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கிறது. தேவன் அவரை எழுப்பினார்.
151. பரிசுத்த பவுல், அவன் தர்சு சவுலாக இன்னும் இருக்கையில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அனைவரையும் மற்றும் சத்தம் அனைத்தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறவர்களையும் துன்புறுத்துவதற்காக கீழே தமஸ்குவுக்கு போகிறதான அவனுடைய வழியில் தனது சட்டைப் பையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு சென்றதான அந்த பகலில் தன்னுடைய சொந்தத் தொண்டையிலேயே ஒரு அச்சுறுத்தலோடு அவன், அவனுடைய குதிரையில் சவாரி செய்கிறான். அந்த பரிசுத்த உருளையர்கள் ஒவ்வொருவரையும் நான் சிறைபிடிப்பேன். தெய்வீக சுகமளித்தல் மற்றும் இங்கு நடந்து கொண்டிருக்கும் புத்தியீனமானவைகள் அனைத்திற்கும் நான் ஒரு முடிவை ஏற்படுத்துவேன் என்றான்.
152. ஆனால் தன்னுடைய வழியில் இவ்வாறு நினைத்துக் கொண்டு அவனுடைய குதிரையின் மேல் சவாரி செய்கையில், அவன் குதிரையிலிருந்து தரையில் விழுந்தான்; அவன் எழுந்து தொடர்ந்து போகையில் அங்கே, அவனது கண்களையும் குருடாக்கத்தக்க ஒரு பெரிய பிரகாசமான வெளிச்சம் அங்கே அவனுக்கு முன்பாக நின்று கொண்டு "சவுலே, சவுலே நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்” என்றது. ஆண்டவரே நீர் யார்-?” என்றான்.
153. "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று அவர் கூறினார். அவன் அவரை அவருடைய நித்திய முடிவில்லாத இராஜ்ஜியத்தில் கண்டான்.
154. வயது முதிர்ந்த தீர்க்கதரிசியும், பிரியமானவனுமாகிய யோவான் தூரத்தில் பத்மு தீவில் நின்று கொண்டு தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்துக் கொண்டும், வியாதியஸ்தரை சுகமாக்குவதற்காக, தெய்வீக சுகமளித்தலைப் பிரசங்கித்துக் கொண்டும், அவன் செய்யும் படியாக கிறிஸ்து அவனிடம் கூறியதை செய்து கொண்டும்... இருந்த போது அவர்கள் அவனை வெளியே எடுத்துக் கொண்டு போய் பத்மு தீவில் ஏஜியன் கடலில் உள்ள ஒரு சிறிய தீவில், பாறைகளால் நிறைந்தும், இப்பொழுதுள்ள அல்கேட்ராஸ் போன்று ஏறத்தாழ 15 மைல்கள் சுற்றளவு கொண்ட தீவு அது. பாம்புகளும் மற்றவைகளும் இருந்த அத்தீவில் அவர்கள் அவனை சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததன் காரணமாக நாடு கடத்தியிருந்தனர்.
155. அந்த வயது முதிர்ந்த பிரியமான பழைய தீர்க்கதரிசியானவர் தன்னுடைய 90-வது வயதில் ஒரு அழகான உயிர்த்தெழுந்த காலையில் அங்கே ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்த போது அவன் அவரைப் பார்த்த்தான். அவன் அவரைப் பார்த்தான். "நான் திரும்பி எனக்குப் பின்பாகப் பார்த்த போது ஒரு எக்காள சத்தத்தை நான் கேட்டேன். ஒரு மனுஷகுமாரனுக்கு ஒப்பானவரை நான் பார்த்தேன்" என்று அவன் கூறினான். அவர் பார்த்த விதத்தில்... அவருக்கு எந்த ஒன்றும் இல்லாதிருந்தது. அவருடைய கண்கள், அவைகள் கண்ணீரால் நிறைந்திருக்கவில்லை”. அவருடைய கண்கள் பகலில் மத்தியானத்தில் சூரியனைப் போன்று பிரகாசித்தது” அந்த மத்தியானத்தில் சீரியரின் சூரியன் அவருடைய கண்களை விட பிரகாசிக்க இயலவில்லை .
156. அவன் அவரைப் பார்த்து நோக்கியதில், அவருடைய கண்களில் கண்ணீரே இல்லை; அந்தக் காலையில் அவர் மகிமையடைந்திருந்தார். அவருடைய பாதங்கள் பார்ப்பதற்கு வெண்கலத் தூண்களைப் போன்று இருந்தது; இனி ஒரு போதும் அவைகளுக்குள் ஆணிகள் ஊடுருவவே முடியாது. இரத்தம் தோய்ந்த பூட்டு ஒரு போதும் இல்லை. ஆனால், அது பனியைப் போல வெண்மையாய் இருந்தது. அவர் மகிமை அடைந்திருந்தார். அவர் என்றென்றுமாக ஜீவிக்கிறவர். அவர் ஒரு வல்லமையான ஜெய வீரராய் இருக்கிறார். அவருடைய இராஜ்ஜியம் நித்திய நித்தியமாக இருக்கும். அவருடைய பிரதிநிதிகள், அவரை நேசிக்கிறவர்களும் அவருக்காக மரிக்க விரும்புகிறவர்களுமாய் இருப்பார்கள். இந்தக் காலையில் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவரும் நம் மத்தியில் ஜீவிக்கிறவருமாயும் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா-? நாம் ஜெபிப்போமா.
157. (ஒலிநாடாவில் வெற்றிடம் - ஆசி)-?.... பியானே இசைப்பவர், நீங்கள் பியானே அண்டை செல்வீர்களானால்.
அவருடைய மகிமையிலிருந்து இறங்கினார்.
என்றும் ஜீவிக்கும் கதை, என் தேவனும் என் இரட்சகரும் வந்தார்,
இயேசு என்பது அவர் நாமம்,
ஓர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார், அவருக்குச் சொந்தமானவர்களுக்கோ ஓர் அன்னியர்,
ஓர் துக்கமுடைய மனிதன், கண்ணீர்களும் பொறுக்க முடியா துன்பமும், ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்-! எவ்வளவாய் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்,
என் ஜீவன், என் சூரிய பிரகாசம், என் எல்லாவற்றிலும் எல்லாமானவர்,
அம்மாபெரும் சிருஷ்டிகர் என் இரட்சகரானார், தேவனுடைய நிறைவுகள் அனைத்தும் அவரில் வாசம் செய்தது.
158. எங்கள் பரமபிதாவே, பரிசுத்த நேரங்கள் மங்கி விழும்போது, மனித இராஜ்ஜியங்கள் சுருங்கி இல்லாமல் போகும்போது எல்லாமே....
கடலனைத்தையும் மையாக்கி, பூமியின் மரம் அனைத்தையும் இறகு எழுதுகோலாக்கி
முழு காகிதச் சுருள்கள் கொண்டு
வானம் முதல் வானம் வரை பரப்பி பரமதேவனின் அன்பை மாந்தர் அனைவருமே எழுதி இயற்றிய
போதிலும் சமூத்திரம் காய்ந்து விடும். 
159. இன்றைக்கு நாங்கள் மகிழ்ச்சியான ஒரு கூட்ட விசுவாசிகளாக இருக்கிறோம் பிதாவே. நாங்கள் உம்முடைய வேலைக்காரர்களாக இருக்கின்றோம் என அறிந்து கொள்வதற்கு நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். ஏழைகளாக இருப்பினும் இங்கே, ஒரு சிறிய எளிமையான சபையில் இன்னும் இருக்கிறோம். கிலேயோப்பாவும் மற்றவர்களும் எம்மாவுக்குச் செல்லும் வழியில் அவர்களுடன் நீர் செய்தது போல அப்படியே இங்கே உள்ளே வாரும் இந்த இடமானது மிகவும் தாழ்மையானதாகவும் நீர் வருவதற்கு மிகவும் சிறியதாகவும் இல்லாதிருக்கலாம், இன்னும் எல்லா வெற்றிடத்தையும் நேரத்தையும் நீர் நிரப்பிடும்.
160. நான் இன்று அதிசயிக்கிறேன், பரம தகப்பனே, நீர் மரித்தோரிலிருந்து எழுந்ததை அவர்கள் கேள்விப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களில் ஒரு சவால் உண்டாயிருக்கும் என்பதை அறிந்தார்கள்... பரமபிதாவே உம்மைத் தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் ஸ்திரீயோ, பையனோ அல்லது பெண்ணோ இன்று இங்கு இருப்பார்களே ஆனால், "கர்த்தாவே, நான் இப்பொழுதே என்னுடைய எல்லா உலகப் பெருமைகளை விட்டுவிடுகிறேன் என்று சொல்லி, அவர்கள் இப்பொழுது இதைச் செய்ய நான் ஜெபிக்கிறேன். நான் திரும்பி சகலத்தையும் ஒதுக்கிவிட்டு என்னை உமக்கே தருகின்றேன். என்னைத் தவிர என்னிடத்தில் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நீர் என்னைப் பயன்படுத்த முடியுமானால், ஓ, தேவனே இங்கே நான் இருக்கிறேன். என்னைப் பயன்படுத்தும். இந்த நாள் முதல் அந்த பரிசுத்த ஆவியானவர் என்னை நடத்துவாராக. என்னை வழிநடத்தும். என்னை ஒரு கிறிஸ்தவனாக்கும். ஓ, தேவனே, அதுதான் இன்று இங்கே அனேக மக்களுடைய ஜெபமாக இருக்கட்டும்.
161. நாங்கள் எங்கள் தலைகளை வணங்கியும், எங்கள் கண்கள் மூடியும் இருக்கும் வேளையில், அங்கே உள்ளேயோ அல்லது வெளியிலோ யாராவது உங்களுடைய கரத்தை கிறிஸ்துவினிடம் உயர்த்தி "இந்த மேலே உயர்த்தப்பட்ட கரத்தினால், நான் இப்பொழுது அந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கின்றேன். இப்பொழுது நான் அவரை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவீர்களானால் நான் அதிசயிக்கின்றேன். இன்று, இந்த நாள் முதற்கொண்டு எனது முழு இருதயத்தோடும் நான் அவருக்கு ஊழியம் செய்வேன், ஏனென்றால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்”. உள்ளே எவராவது எங்காவது நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலும் நீங்கள் சகோதரி, உங்களை, உங்களை, உங்களை அது அதிசயமாயிருக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
162. உங்கள் தீர்மானங்களை எடுக்கையில், அந்தப் பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கின்றார். தேவனுடைய வேலையைச் செய்கிறவர் அவர் ஒருவர்தான், மண்டபத்தினுள் வழியில் பின்பாக யாரோ ஒருவர், வெளிப்புறத்தில் உங்கள் கரத்தை உயர உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வழியில் பின்னால் நீங்கள் பாருங்கள். எனது சகோதரியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது-? எனது சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மண்டபத்தினுள் வழியின் பின்பாக, நான் உங்களை வெளியில் காண்கிறேன், வெளிப்புறம் நோக்கி, சில... தேவன் உங்களைக் காண்கிறார்; என்னால் முடியவில்லை என்றாலும் கூட அவர் உங்களைக் காண்கிறார்.
163. இயேசு அந்த அழகான ஒருவர், பதினாயிரங்களில் சிறந்தவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து பாவமானவராக மரித்து, மறுபடியும் உயிர்த்தெழுந்து மேலேறி இப்பொழுது மகிமை aடைந்தவராக மகத்துவ தேவனாக வீற்றிருக்கிறார்.
164. அந்தத் தேவதூதர்கள் இந்த மண்டபத்தினுள் தங்கள் ஸ்தானங்களில் இருந்து இன்றைக்கு ஜனங்களுடைய இருதயங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 25 அல்லது 30 பேர்கள் தங்கள் கரங்களை உயர்த்திய பிறகும், நீங்களும் இந்த நாளில் உங்களில் வேறு யாராகிலும் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? "தேவனே, இந்த நாளில் நான் முற்றிலுமாக உம்முடையவனாக இருப்பதற்காக நான் எனது கரத்தை உம்மிடத்தில் உயர்த்தினவனாக, எனது பாவங்களையும் எனது தப்பிதங்களையும் அறிக்கை செய்து, எனக்காக மரித்த உமக்காக வாழவிரும்புகிறேன்" என்று தேவனிடத்தில் சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனது சகோதரனே, வேறு யாராகிலும் இருக்கின்றீர்களா-? நீங்கள் ஜெபம் செய்து கொண்டு இருக்கும் போது, இதைப் பற்றிச் சிந்தியுங்கள்.
சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் இந்த பரிசுத்தாவியின் சுவிசேஷம் சொட்டுகிறது. அந்த முதலாமவன் இந்த பரிசுத்தாவியின் திட்டத்திற்காக மரித்தான், மனிதனைப் போல மரித்த அவன் யோவான் ஸ்நானகனாய் இருந்தான்; அதன் பின்பு கர்த்தர் இயேசு வந்தார், அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தனர், பாவத்திலிருந்து மனிதனை ஆவியானவர் இரட்சிப்பார் என அவர் பிரசங்கித்தார் அது இரத்தத்தோடு சொட்டிக் கொண்டு இருக்கிறது, அது இரத்தத்தோடு சொட்டிக்கொண்டிருக்கிறது (நீங்கள் இப்பொழுது அதன் இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா-?) இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தோடு சொட்டிக் கொண்டிருக்கின்றது, அந்த இரத்தம்..
165. வேறு யாராகிலும் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? "இந்தக் காலையில் ஸ்தான அடிப்படையில் நான் எனது இடத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்”. சபையை சேர்ந்து கொள்ள நீங்கள் கேட்டுக்கொள்ளப்படவில்லை, இங்கே எங்களுக்கு எந்த அங்கத்தினர்களும் இல்லை. நீங்கள் கிறிஸ்துவினிடம் வர நான் விரும்புகிறேன்.
இரத்தத்தோடு சொட்டிக்கொண்டிருக்கின்றது 
166. எங்கள் பரமபிதாவே, நீர் ஜனங்களுடைய கரங்களைப் பார்த்திருக்கிறீர். இந்த நாள் முதல், இனிமேல் அவர்கள் ஒரு புதிய ஜீவியத்தை ஜீவிக்கும்படி நான் அவர்களுக்காக விசுவாசத்தின் ஜெபத்தை ஜெபிக்கிறேன்; இப்பொழுது பிரசன்னராய் இருக்கிற நீர், அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிற நீர், அவர்களைப் போஷித்தும் இருக்கிறீர். அவர் அவர்களுக்காக செய்தது போன்றே காரியங்களை செய்திருக்கிறீர். இந்தக் காலையில் அவர்களை சபைக்குக் கொண்டு வந்துமிருக்கின்றீர்... இப்பொழுது அவர்கள் அவரைப் பெற்றுக் கொண்டு கிலேயோப்பாவும் மற்றவர்களும் போலவே திரும்ப சென்று கொண்டு இருக்கின்றனர். அது அவர்களுக்கு ஒரு ஓய்வுநாள் பிரயாணத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்ட பிறகு, ஒரு சில நிமிடங்களுக்குள் அப்படியே அவர்கள் திரும்பிச் சென்றனர். ஆனால் அவர் ஜீவிக்கிறார் என்று அறிந்தவர்களாய் இலேசான இருதயத்தோடு அவர்களுடைய மதத்தைக் குறித்து வாக்குவாதம் செய்யாமல் அவர்கள் மனமகிழ்ச்சியோடு திரும்பி வந்தனர். இன்றைக்கும் அவர் ஜீவிக்கிறார் என்று அவர்கள் அறிந்தவர்களாய் அவர்கள் மனமகிழ்ச்சி-யோடே தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்களாக. இவைகளுக்காக இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம், ஆமென்.
167. இப்பொழுது, செய்திக்குப் பிறகு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஜனங்களாகிய உங்களுக்கு இது ஒரு மகத்தான உயிர்த்தெழுந்த காலையாக இருக்கிறது. இப்பொழுது காலமானது சமீபமாய் இருக்கிறது. அதாவது கிறிஸ்துவுக்கு நான் ஒரு பொய் சாட்சியாகவோ அல்லது மெய் சாட்சியாகவோ இருக்க வேண்டும். நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்லியிருக்கக் கூடுமானால், நான் இந்த வேதாகமம் தான் சத்தியமாக இருக்கிறது என விசுவாசிக்கின்றேன், வேறு எந்த புத்தகமும், இதற்கு முரணாக இருக்கும் எதுவுமே சத்தியம் அல்ல; இந்த வேதாகமம் தான் தேவனுடைய சத்தியத்தை உள்ளடக்கியதாய் இருக்கிறது என்று மாத்திரம் நான் விசுவாசிக்கிறேன். 
168.  அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று இந்த வேதாகமம் கூறியிருக்குமானால், பிறகு உயிர்த்தெழுதலிலும் அவர் அதே விதமாகத்தான் இருந்தாக வேண்டும். வல்லமையிலும் அதே விதமாகத்தான் இருந்தாக வேண்டும். அடிப்படையான உண்மையிலும், அவர் அதே விதமாகத்தான் இருந்தாக வேண்டும். வானத்துக்குரிய சரீரத்தை தவிர ஒவ்வொரு வழியிலும் அவர் அவ்விதமாகத் தான் இருக்க வேண்டும். இந்த சரீரமானது, அவருடைய வானத்துக்குரிய சரீரமானது மகிமையில், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா-? அவர் மகிமையில் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலது பாரிசத்தில் பரிந்து பேசிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
169. நீங்கள் அதைப் பற்றி சிந்தித்திருக்கின்றீர்களா-? அதாவது, இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்தில் இருந்த போது, சில நாளில் அவர்கள் வீட்டிற்குப் போவார்கள் என்பதை அறிந்திருந்தனர். ஏன்-? காரணம் என்னவென்றால் அங்கிருக்கின்ற யோசேப்பின் சரீரத்தை அவர்கள் காண்கையில், யோசேப்பின் எலும்புகள் தான், சில நாளில் அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு ஒரு அடையாளமாக இருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர்.
170. அதன் பிறகு நாம் இந்த பூமியை விட்டு வெளியே செல்லும் போது, நாம் மரிக்கும் போது, நாம் வேறு மாதிரியான சரீரத்திற்குள் செல்வோம்... அது அந்த விதமான சரீரம் அல்ல. நாம் பரலோகத்திற்காக உருவாக்கப்படவில்லை, நாம் உலகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம்; நாம் பூமிக்குரிய ஜனங்கள். பலிபீடத்தின் கீழ் ஆத்துமாக்கள் எது வரைக்கும்-?" என்று சத்தமிடுவதையும், அவர்கள் - அவர்கள் அவர்கள் ஒரு சரீரத்திற்குத் திரும்பி வரவும், ஒருவரோடு ஒருவர் கரங்களைக் குலுக்கவும், புசிக்கவும், ஐக்கியம் கொள்ளவும் சப்தமிடுவதும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா-? அப்படித் தான் நாம் உருவாக்கப்பட்டு உள்ளோம். அவ்விதமாகத்தான், நாம் அப்படி உருவாக்கப்பட்டு உள்ளோம்.
171. அதன் பின்பு, அவர்கள் பின்பாகச் செல்லும் ஒரு அடையாளமாக அங்கே அவர்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கிறது-? தேவனுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வானத்துக்குரிய சரீரத்தை நாம் அந்த ஒன்றைக் கடந்து செல்லும் போது.. நாம் இன்றைக்குச் சென்று நூறுவருடங்களுக்கு அவர் வராமல் நான் உங்களை அங்கே சந்தித்தால், "சில நாளில் நாம் பின்பாகச் செல்வோம்" என்று நான் கூறுவேன். அங்கு பார்த்தீர்களா-? "அந்தச் சரீரமானது சிங்காசனத்திலிருந்து மறுபடியும் எழும்பும்" அது மறுபடியும் இந்த பூமிக்கு திரும்பவும் வரும். அவர் அதைச் செய்யும் போது மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆவியும் ஒரு வானத்துக்குரிய சரீரத்திற்குத் திரும்ப வரும். வாலிப மனிதனும் ஸ்திரீயும், தேவனுடைய சமூகத்தில் என்றென்றுமாய் ஜீவிப்பார்கள்.
172. என்னே ஒரு.... என்னே ... அப்பேர்ப்பட்டதை நாம் எப்படி புறக்கணிக்க முடியும், நண்பனே-? நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
173. இப்பொழுது இயேசு இவ்வுலகில் இருந்த போது அவர் போவதற்கு முன்பாக பரிசுத்த யோவான் 14:7-ல் "கொஞ்சக்காலம்” என்று அவர் கூறினார். அல்லது இங்கு அவர் கூறி இருக்கிறார் "நான் செய்யும் காரியங்கள், என்னுடைய அந்தக் கிரியைகள்... என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். நான் என் பிதாவின் இடத்திற்குப் போகிறபடியால், இதைக்காட்டிலும் அதிகமானவைகளையும் செய்வான். இப்பொழுது, இயேசு செய்த கிரியைகள் எவை-? அவர் தம்மை ஒருபோதும் சுகமளிப்பவராக உரிமை கோரவில்லை, "அது நானல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற என் பிதா அந்தக் கிரியைகளைச் செய்கிறார்” என்று அவர் கூறியிருக்கிறார்.
174. பிதாவானவர் செய்ய அவர் காண்கிறதெதுவோ அதையே அன்றி குமாரன் தாமாக எதையும் செய்யமாட்டார் என்று பரிசுத்த யோவான்.5:19-ல் அவர் கூறியுள்ளார்.
175. பிலிப்பு சென்று நாத்தான்வேலைக் கண்டு, அவனை அவரிடத்தில் கொண்டு வந்தான். “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று அவர் கூறினார்.
176. "ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்" என்று அவன் கேட்டான். "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னே, நீ மரத்தின் கீழ் இருக்கும்போது நான் உன்னை அறிவேன்" என்று கூறினார்.
177. அந்த நாளில் கிணற்றின் அருகே ஒரு ஸ்திரீயானவளிடம் அவளுடைய தொல்லை எங்கே இருந்தது என்று கண்டு பிடிக்கப்படும் வரை அவர் அவளோடு பேசினார். சில நாணயங் களைப் பெற்று சில கடன் அல்லது வரிப்பணத்தை செலுத்தும்படி அவருக்கும் ஒரு நாளில் தொல்லை இருந்தது. கீழே சென்று ஒரு மீனைப் பிடித்து அதின் வாயினுள் பார், நீ ஒரு நாணயத்தைக் காண்பாய்” என்று அவர் பேதுருவிடம் கூறினார். 
178. அனேகமாக பேதுரு, வேறுவிதத்தில், அவன் ஒரு மீனை பிடித்திருப்பானேயல்லாமல், அவன் ஒரு போதும் மீனின் வாயைத் திறந்திருக்கமாட்டான். ஆனால் நாணயமானது அதின் வாயில் இருந்ததை இயேசு அறிந்திருந்தார். அந்த பிதாவானவர் அவருக்குக் காண்பித்திருந்தார்.
179. அனேக மற்ற காரியங்களும் உள்ளன. அந்த அரங்கத்தினுள் ஜனங்கள் மத்தியில் அவர் நின்றார். அவர் திரும்பி "உன்னுடைய விசுவாசமே உன்னை சுகமாக்கிற்று, ஒரு குறிப்பிட்ட காரியம் உனக்கிருந்தது” என்றார்.
180. இப்பொழுது, அந்த இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருப்பாரானால், இது ஒரு அழகான உயிர்த்தெழுந்த காலையாய் இருக்கிறது. இங்கே இந்த மேடையின் மீது அவர் தரிசனமாவாரானால் நான் கூறுவதை உங்களால் - உங்களால் சரியாக மதிப்புணர்ந்து கொள்ள முடிகிறதா-? இயேசுவே, அந்த தேவனுடைய குமாரன் என்றால் இந்த 2000 வருடங்களாக திருச்சபைகள் மற்றும் வேறு எல்லாவற்றிலும் இருந்தும், எல்லா மனசாட்சியின் காரணமாக ஏற்படும் தயக்கமும், ஒரு சபை கூறிக் கொண்டிருக்கிறது, இது தான் அது, மேலும் இது தான் அது, இது தான் அது” என்று.
181. நாம் முகமுகமாய் சரியாகப் பார்ப்போம். அவர் இயேசுவாக இருப்பாரானால் அவர் ஜீவிக்கிறவராக இருக்கிறார். அவர் இல்லையென்றால், அவர் இல்லை தான். அவர் ஜீவிக்கிறவராக இருப்பாரேயானால் அவர் மாறாதவராயிருக்கிறார். அவர் மாறாதவராக இல்லை என்றால் பிறகு அது அந்த அதே இயேசு அல்ல. ஆனால் அதே இயேசுவாக இருப்பாரே ஆனால் அவருடைய வாக்குத்தத்தமானது, "இந்த உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்; உலகத்தின் முடிவு பரியந்தமும் நான் செய்கிற காரியங்களை நீங்களும் செய்வீர்கள்"
182. இப்பொழுது, இந்தக் காலையில் இங்கு அவர் எப்படி இருக்கிறார்-? பரிசுத்த ஆவியின் வடிவில். இறங்கி வந்த அவரேயன்றி வேறொருவரும் அல்ல... இறங்கிவந்த அவரைத் தவிர மேலே சென்றது வேறொருவரும் அல்ல. "கொஞ்ச காலத்திற்கு உலகம் என்னைக் காணாது, ஆனாலும் நீங்களோ என்னைக் காண்பீர்கள். இந்த உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடும் நான் உங்களுக்குள்ளும் இருப்பேன்” என்று அவர் கூறினார். இந்தக் காலையில் அவர் இங்கே இருக்கிறார்.
183. இப்பொழுது, ஜெபித்துக்கொள்ள வேண்டும் என்று உள்ளேயோ அல்லது வெளியிலோ எவ்வளவு ஜனங்கள் இருக்கின்றீர்கள்-? உங்களது கரங்களை உயர்த்துங்கள். நல்லது, அது 200 அல்லது அதற்கும் மேல் இருக்கிறது. இப்பொழுது, ஒரே நேரத்தில் இங்கே மேலே எல்லா மக்களையும் நாங்கள் கொண்டுவர இயலாது. நாங்கள் அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொண்டுவர வேண்டும். அதுதான் நாங்கள் செய்ய இயன்ற ஒரே வழி. நான் விசுவாசிக்கிறேன் அந்த சகோதரன்... அல்லது பில்லி பால், ஜெப அட்டைகளைக் கொடுத்துள்ளார். அவர் உங்களுக்கு கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். (நீ கொடுத்திருப்பது எத்தனை-? 100-?) எல்லாம் சரி.
184. இப்பொழுது, நாங்கள் அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டி உள்ளது. ஆகையால், ஜனங்கள் எண்ணப்படவும் முடியும். மேலே வந்து அவர்கள் முறையை எடுத்தும் கொள்ளலாம். நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால் அது குழப்பத்திற்குக் காரணமாகி விடும்.
185. எனக்குத் தெரியாது, ஆனால் என்ன கடந்த இரவு வெகு தொலைவிலிருந்து ஒரு மனிதன் என்னை அழைத்தார். நேற்று மதியம் மட்டுமே 30 அல்லது 40 அழைப்புகளாக அது இருந்தது. ஆனால் பாருங்கள், சிலவற்றை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அறியவேண்டிய முக்கிய காரியம்...
186. இப்பொழுது, அங்கே யாரையும் சுகமாக்கக் கூடிய ஒன்றுமே எனக்குள் இல்லை. வேறு எந்த மனிதனிடமும் அங்கே ஒன்றுமே இல்லை. அங்கே ஒரு மருத்துவருக்குள் உங்களை சுகமாக்கக் கூடிய ஒன்றுமேயில்லை. அவரும் அதே காரியத்தையே உங்களிடம் கூறுவார். அவர் உங்களை சுகமாக்குவதில்லை. இல்லை, இல்லை. உங்கள் கையை நீங்கள் உடைத்துக் கொண்டு மருத்துவரே என்னுடைய கையை சீக்கிரமாக சரியாக குணப்படுத்துங்கள். நான் என்னுடைய வாகனத்தை சுழற்சி உண்டாக்க உதவும் வளைந்த அச்சினால் இயக்கி முடிக்க வேண்டும் என்று கூறிப் பாருங்கள். எவ்வளவு அற்பமானது பாருங்கள்-?
187. ஏன்-? ஹேய், மருத்துவரே நான் என் காலை உடைத்துக் கொண்டேன், இன்று மதியம் ஒரு நீண்ட பயணம் நான் போக வேண்டும். இதை எனக்காக உடனே சீக்கிரமாக சுகமாக்குங்கள்.
188. நல்லது, நீ பயித்தியமாக இருக்கிறாய் என்று அவர் கூறுவார். உன்னுடைய காலை அவர் சரி செய்ய முடியும். ஆனால் உன்னை சுகப்படுத்த அது தேவனை எடுத்துக் கொள்கிறது. பார்த்தீர்களா-? அது சரியாய் இருக்கிறது. பார்த்தீர்களா-? அவர் அதை அவருடைய சொந்த வழியில் செய்கிறார். நீங்கள் பாருங்கள்-? எனவே அவர் ஒரு சுகமளிப்பவர் அல்ல. அவரால் சுகமளிக்க முடியாது.
189. உன்னுடைய கையை நீ வெட்டிக்கொண்டு, ஹேய், மருத்துவரே, நீர் என்னை ... நான் இதை உடனே சீக்கிரம் இணைக்க வேண்டும் என்பதற்காக இதை உடனே சீக்கிரம் சுகமாக்கும். ஏனென்றால் அந்தத் தழும்பு என் கையிலே எனக்கு வேண்டாம். பாருங்கள்-? "ஏன் அது இரணமாக இருக்கிறது. இந்த மதியம் நான் வேலை செய்ய வேண்டும்”. அவரால் அதைச் செய்ய முடியாது. நிச்சயமாக முடியாது. அவர் - அவர் அதை சில மருந்துகளைக் கொண்டு சுத்தமாக்க வேண்டும். அதிலிருந்து கிருமிகளை அவர் சுத்தம் செய்யவேண்டும். ஆனால், தேவன் மாத்திரமே ஜீவனை உண்டு பண்ணவும் திசுக்களைக் கட்டவும் முடியும். நீங்கள் பாருங்கள்-? தேவன் ஒருவர் மட்டுமே அதைச் செய்யமுடியும். அதை நாம் அறிவோம். அதை அறிந்து கொள்ள நீங்கள் ஒரு படித்தவராக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் அப்படியே தேவனுடைய வார்த்தையைப் பார்க்க வேண்டும்.
190. மேலும் சாத்தானுக்கு சுகமாக்கக்கூடிய வல்லமை இல்லை. சாத்தானால் சுகமாக்க முடியும் என்று கூறும் ஒரு வேதவசனத்தை நீங்கள் எனக்குக் காண்பிக்கக் கூடுமானால், எந்த ஒருவருக்கும் அவர்கள் விரும்புகிறதை என்னால் செய்ய முடிந்ததை நான் கொடுக்கிறேன். அது இல்லை, "உன்னுடைய சகல வியாதிகளையும் சுகமாக்குகிற கர்த்தர் நானே” என்று இயேசு கூறியிருக்கிறார். இப்பொழுது, இப்பொழுது அவர்களால் இயலாது... 
191. சாத்தானால் சுகமாக்க முடியாது. தேவனை அது எடுத்துக் கொள்கிறது. மேலும் தேவன் சுகமாக்குவது உங்களுடைய விசுவாசத்தின் அடிப்படையின் மேலேயே இருக்கிறது.
192. இப்பொழுது, நான் உங்களிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறேன். நான் நேற்று உங்களிடம் கூறினது போலவே ஒரு மனிதன் என்னை அழைத்தார். மேலும் சகோதரன் பிரன்ஹாம், நான் சிக்காகோ கூட்டத்திற்கு அங்கே நான் வர விரும்புகிறேன்..” என்று அவர் கூறினார். நாளை மறுநாள் ஆரம்பமாகிறது. "நான் வருவதற்கு விரும்புகிறேன்.... மேலும் நான் தொடர்பு உண்டு பண்ணிக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார்.
193. "நீங்கள் குறிப்பிடுவது என்ன தொடர்பு ஐயா” என்று நான் கேட்டேன். எனக்கு என் சகோதரன் சுகமடைய வேண்டும்” என்றார். அவருக்கு ஒரு கால் மோசமாக உள்ளது” என்றார். "நாம் தேசத்தில் வாழ்கின்றோம்" என்றார். "நமக்கு இரண்டு அல்லது மூன்று கூட்டங்கள் இருந்தது, நாங்கள் ஒருபோதும் உங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை” என்றார்.
194. இப்பொழுது தொடர்பு என்பதின் மூலம், சகோதரனே நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்-? என்றேன். "நல்லது, நான்-நான்நான் விரும்புவது நீங்கள் என் சகோதரனுக்காக சிலவற்றைச் செய்யவேண்டும், இதைத்தான் நான் குறிப்பிட்டேன்” என்று அவர் கூறினார்.
195. "நல்லது, இப்பொழுது. ஐயா, நீங்கள் தவறான நபரை தொடர்புகொள்ள முயற்சித்து இருக்கின்றீர்கள் என்று நான் கூறினேன். பாருங்கள், என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் மேலாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும், பாருங்கள். என்ன..." என்று நான் கூறினேன். ஆனால், அது உங்களுடைய சகோதரனை சுகமாக்குவது அல்ல” என்று நான் கூறினேன். அவர். அவருடைய சுகத்திற்கான ஒரு தொடர்பா நீங்கள் குறிப்பிட்டது-?” என்றேன் நான். “ஆம்” என்று அவர் கூறினார்.
196. "இப்பொழுது, இங்கே தான் நீங்கள் இவ்விதமாகச் செய்ய வேண்டும். நீங்கள் கூட்டத்திற்குச் சென்று பார்வையாளர் மத்தியில் அமருங்கள், நான் அவருடைய வேலைக்காரன் அவ்வளவு தான். நான் என்னை அப்படியே அதற்கு, பரிசுத்தாவியானவருக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அதன் பிறகு நீங்கள் பரிசுத்தாவியானவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர் என்னிடத்தில் பேசி உங்களிடம் என்ன கூறவேண்டும் என்று என்னிடம் கூறுவார். பாருங்கள்-? அது தான் உங்களுடைய தொடர்பு, நான் அல்ல, அவரே. நீங்கள் என்னைத் தொடர்பு கொள்கிற வரையிலும், நீங்கள் எல்லா நேரங்களிலும் அப்படியே தூரமாகி விடுகிறீர்கள். பாருங்கள்-? ஆனால் நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிற வரையிலும் நீங்கள் அவரையே தொடர்பு கொள்கிறீர்கள், அவர் உங்களிடம் கூறுவதற்கு அவர் அப்படியே என்னை ஒரு வாயாகப் பயன்படுத்துவார். பாருங்கள்-? அது தான் அது.
197. சகோதரன் ஹெட், நீங்கள் அங்கே பின்னால் எனது நண்பர் திரு.லீ அவர்களின் அருகில் அமர்ந்திருப்பதை நான் காண்கிறேன். திரு.ஹெட் அவர்கள் புற்று நோயோடு மரித்துக் கொண்டிருந்த மனிதனாக இருந்தார். அவர் லூயிவில்லிலுள்ள ரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர், மலக்குடலில் புற்று நோயுடன் மரித்துக் கொண்டிருந்தார் என நான் நம்புகிறேன். அது அல்லது ஏதோ ஒன்றாக இருந்தது. நான் தெருவைக் கடந்து வசித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் அவர் அங்கே என்னிடத்தில் வந்து தாம் சுகமாகுவதற்கு அங்கே இரக்கம் இருக்குமா என்று கேட்டார். ஒரு விசுவாசத்தின் ஜெபமானது அங்கே ஜெபிக்கப்பட்டது. தேவன் ஒரு தரிசனத்தைக் காண்பித்தார். திரு. ஹெட் அவர்களே-! அது குறைந்தது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு என நான் நினைக்கிறேன், அது அப்படி இல்லையா-? ஏறத்தாழ ஒன்பது வருடங்களுக்கு முன்பு, இப்போது இங்கே அவர் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். சுகமாகுதல் என்பது உண்மையானது அது அப்படியில்லையா, திரு.ஹெட் அவர்களே-? சுகமாகுபவர் யார் என்பதில் அவருக்கு அக்கறையில்லை அவர் மெத்தடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், கத்தோலிக்கர்களை சுகமாக்குகிறார். நீங்கள் யாராக இருந்தாலும் அது எந்த வித்தியாசமும் உண்டாக்காது. அவர் சுகமாக்குகிறார். பாருங்கள்-? இப்போது நீங்கள் அப்படியே விசுவாசியுங்கள். அவரைப் பார்ப்பதற்கு எனக்குத் தருணம் கிடைத்தது.
198. மார்க்கி மார்கன் இந்தக் காலையில் இக்கட்டிடத்தில் இருப்பீர்களேயானால் ஆச்சர்யம்-? அவள் இருப்பாளானால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள்-? மார்க்கி, நீங்கள் உள்ளே வந்து விட்டீர்களா-? சகோதரி. நீங்கள் இங்கு இங்கிருக்கிறீர்களா-? நல்லது, உள்ளே பின்புறம் வழியில் பின்பாக. ஆம். வேறு ஒரு பெண், இங்கு லூயிவில்லில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் புற்றுநோயோடு மரிப்பவர்கள் பட்டியலில் ஒரு மருத்துவப் பணிப்பெண். ஒரு கொத்து எலும்பைத் தவிர அப்படியே ஒன்றுமில்லாமல், சரியாக இங்கே அவள் சுகமானாள். உம்-ஹூம். அங்கே அவள் இருக்கிறாள். ஏழைப் பெண்ணிற்கு கீழே அமரக்கூட ஒரு இடம் கிடைக்கவில்லை. அவள் பின்னால் வழியில் மண்டபத்தில் அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கிறாள்.
199. எப்படி எப்படி எப்படி மருத்துவர் கூறினார் என்பதை நான் நினைவு கூருகிறேன். "ஓ, என்னே-! அங்கே அவளுக்கு உதவ ஒன்றுமேயில்லை”. எவ்வாறு அவளின் அன்புக் கணவனும், என்னுடைய ஆத்ம நண்பருமான அவர் சரியாக இங்கு வந்தார். ரோந்து பணியில் அந்தப் புதர்க் காடுகளினூடாக மிகவேகமாக வந்தேன். நான் கிழிக்கப்பட்ட துணிகளோடே இருந்தேன். என் மனைவிக்கு ஏதாவது உதவமுடியுமா-? என்றார். ஐயா, சந்திப்பதற்கு அது எனக்காக அல்ல, உங்களைக் குறித்து என்ன-? என்றேன் நான். நான் விசுவாசிக்கிறேன் என்று அவர் கூறினார்.
200. அவளை மேலே கொண்டுவாருங்கள் என்று நான் கூறினேன். அந்த இரவில் அவளுக்காக ஜெபிக்கப்பட்டது, சரியாக இங்கே தான், கர்த்தர் இறங்கி வந்து என்ன நடக்கப்போகிறது என்று அவளிடம் கூறினார். அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஒரு பலமுள்ள ஆரோக்கியமான பெண்ணாக இன்று அவள் இங்கிருக்கிறாள். 
201. மேலும் லூயிவில்லுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி செய்யுமிடத்தில் சென்று அப்படி ஒருக்கால் இருந்தாளா எனக் கண்டுபிடியுங்கள் ஏறத்தாழ பத்து அல்லது பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு வரை அவள் சாகவில்லை. பாருங்கள் அவள் இருப்ப ளேயானால்... அங்கே ஒரு மரித்த பெண் உயிர்த்தெழுந்தாள், பின்பு திரும்பவும் இங்கிருக்கிறாள். பார்த்தீர்களா-? நிச்சயமாக. ஓ இயேசு ஜீவிக்கிறார். இயேசு ஆளுகை செய்கிறார். இயேசுவே எல்லாமாக இருக்கிறார்.
202. இப்பொழுது (எங்கிருந்து ஆரம்பிக்கப்போகிறீர்கள்-? ஒன்றிலிருந்து ஒரு நூறுவரையிலுமா-? ஒன்றிலிருந்து நூறுவரையிலுமா-?) எல்லாம் சரி. இப்பொழுது, ஜெப அட்டை எண் ஒன்று யாரிடம் உள்ளது-? நீங்கள் எழுந்து இங்கே பக்கத்தில் நிற்க முடியுமா-? நாங்கள் ஒருவித இடது... நீங்கள், ஜெப அட்டைகள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் அனைவரையும் நாங்கள் வரிசைப்படுத்தவேண்டும், ஆனால் நாங்கள், நாங்கள் நாங்கள் இங்கே இந்தப் பக்கத்தில் வரிசைப்படுத்த வேண்டும்.
203. (ஒலிநாடாவில் வெற்றிடம் - ஆசி)...... ஸ்தீரியே, எனக்குத் தெரியாது. நான் அவளை ஒரு போதும் பார்த்தது இல்லை. அனேகமாக அவள் யாரோ ஒருவருடைய தாயாக இருக்கலாம். எனக்கு அவளைத் தெரியாது. இப்பொழுது, இது, அந்த நாளில் சீஷர்களை அப்புறமாக அனுப்பி விட்டு இயேசுவானவர் கிணற்றின் அருகே அமர்ந்த விதமாக, அப்படியே இருக்கிறது. இப்பொழுது இயேசு அவளிடம் பேசினார். அவர் அவளிடம் பேசிய போது குடிப்பதற்கு எனக்குத் தண்ணீர் கொண்டு வா என்று அவர் கேட்டார்.
204. அவள், "கிணறும் ஆழமாக இருக்கிறது, மொண்டு கொள்ள உம்மிடத்தில் ஒன்றுமே இல்லையே, யூதர்களும் சமாரியர்களுமாகிய நமக்கு ஒருவருக்கொருவர் எந்த வழக்கமும் இல்லையே” என்று கூறினாள்.
205. ஆனால் உன்னிடத்தில் பேசுகிறவர் இன்னார் என்று நீ அறிந்திருந்தாயானால் தாகத்துக்கு எனக்குத் தா என்று நீயே கேட்டிருப்பாய்” என்று அவர் கூறினார். இவ்வாறாக உரையாடல் சென்றது, ஆராதனை இன்னும் மற்றவைகளைப் பற்றியும் அவள் பேசினாள். அதன் பிறகும் அவர் அவளோடு கொஞ்ச நேரம் பேசி, அவளுக்குச் சிக்கல் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்தார். அதுசரி தானே-? எத்தனைப் பேர் அதை அறிவீர்கள்-? அந்த ஸ்தீரியினிடத்தில் இருந்த தவறை அவர் கண்டறிந்தார். ஒழுக்கம் கெட்ட ஜீவியம் தான் அவளுடைய-அவளுடைய தவறாய் இருந்தது. அது சரி தானே-? "போய், உன் புருஷனை அழைத்துவா” என்று அவர் கூறினார்.
206. "எனக்கு ஒருவருமில்லையே" என்று அவள் கூறினாள். "அது சரியே, உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள்" என்று அவர் கூறினார்.
207. இப்போது, அவர்... அவர் கூறியது என்னவென்று கவனியுங்கள். இப்போது அவள் என்ன கூறினாள் என்று கவனியுங்கள். "ஐயா" என நெருங்கி வந்து, "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்” என்று கூறினாள். (இப்போது கவனியுங்கள்), "ஆனால் மேசியா எப்பொழுது வருவார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்று அவள் கூறினாள். யார் மேசியா-? அந்த தேவனுடைய குமாரன். "மேசியா எப்போது வருவார் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம், இந்தக் காரியம் எல்லாவற்றையும் அவர் எங்களுக்குச் சொல்லுவார். ஆனால் நீர் யார்-?” என்று அவள் கேட்டாள். "உன்னிடத்தில் பேசுகிற நானே அவர்", என்று இயேசு கூறினார்.
208. அவள் பட்டணத்திற்குள் ஓடி "நான் செய்ததைச் சொன்ன ஒரு மனுஷனை வந்து பாருங்கள், இது அதே கிறிஸ்து அல்லவா-?” என்றாள். பாருங்கள்-? கிறிஸ்துவானவர் வரும் போது, அவர் இந்தக் காரியங்களைச் செய்வார்.
209. இப்போது, இந்தக் கடைசி மேற்கோளை - கவனியுங்கள். அப்படியானால் அந்தப் பெண் என்ன கூறினாள், "மேசியா வரும் போது, அவர் இந்தக் காரியங்களை செய்வார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்போது, அதுவே மேசியாவின் அடையாளமாக இருக்குமே ஆனால் பின்பு, அவர்... அவர் தான் மேசியா, அவர் மரித்தோரிலிருந்து எழுந்துமிருக்கிறார். அவர் மாறாதவராக இருப்பாரானால் அது இன்றும் அதே காரியம் தான், அல்லவா-?
210. இப்போது, இங்கு ஒரு பெண் இருக்கிறாள். எனக்கு அவளைத் தெரியாது. தேவன் அதை அறிவார். எனக்கு ஒரு காரியமும் தெரியாது. எனக்குத் தெரிந்த வரை அந்தப் பெண்ணை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. அவள் ஒரு அன்னியர் ஆனால் தேவன் அவளை அறிவார். இப்போது அந்தப் பெண் ஏதோ ஒன்றுக்காக இங்கே இருக்கிறாள். எனக்குத் தெரியாது. தன்னுடைய அன்பானவருக்காக அவள் இங்கு நின்று கொண்டிருக்கலாம். அவளுக்கு பணப்பிரச்சனைகள் இருக்கலாம். அவளுக்கு ஒரு வியாதி இருக்கலாம். அவள் ஒரு பாவியாய் இருந்து இரட்சிக்கப்படும்படி இங்கு வந்திருக்கலாம், எனக்குத் தெரியாது. ஆனால், உயிர்த்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து இங்கு இறங்கி வந்து, இந்தப் பெண்ணிடம், அவள் அறிந்துள்ள சில காரியங்களை அதாவது நான் அறிந்திராத ஒன்றைப் பற்றிக் கூறுவாரானால், கேட்கிற நீங்கள், அந்த நாளில் உயிர்த்தெழுந்த அதே இயேசு இங்கிருக்கிறார், அவர்- அவர்- அவர் எம்மாவில் அவர்களுக்கு செய்தது போலவே உங்களுக்கும் அப்பத்தை பிட்டுக் கொண்டிருக்கிறார், என்று விசுவாசிக்கிறீர்களா-?
211. இப்பொழுது, இப்பொழுது, சகோதரியே அப்படியே நான் ஒரு நிமிடம் உங்களைப் பார்க்க விரும்புகிறேன். என்னிடம் பேச விரும்புகிறீர்களா. இப்பொழுது கர்த்தர் அதைச் செய்வாராக. இப்பொழுது, நீங்கள் இப்போது இந்தத் தருணத்தில் மெய்யான பயபக்தியோடு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். முக்கியமாக, இந்த - இந்த வரிசையில். இப்போது நான் கூறவில்லை ... இது என்னுடைய சொந்த நகரம். நான் இந்த ஊழியத்திற்கு வந்தது முதல் இங்கே இந்தக் கூடாரத்தில் அது 2 முறை கிரியை செய்தது, ஏன்-? இயேசு கூறியிருக்கிறார் அதாவது ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த தேசத்திலும் தன் சொந்த மக்கள் மத்தியிலுமே, அந்த ஒரே இடத்தில் தான் அவன் கனமில்லாமல் இருப்பான், அது சரிதானா-?
212. அவன் தன் சொந்த தேசத்திற்குப் போகையில் எப்படியாயினும், இந்த நபர் யார்-? என்று அவர்கள் கூறுவர். எந்த பள்ளிக்கூடத்திலிருந்து இவன் வந்தான்-?" பாருங்கள்-? அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம் இயேசு வல்லமையான செயல்களைச் செய்ய இயலவில்லை.
213. “அவன் தச்சனுடைய குமாரனல்லவா-? அவனுடைய தாய் நம்மோடு இங்கே இருக்கிறாள் அல்லவா-? யோசேப்பு தச்சன் அல்லவா-? அவனது சகோதரர்களும், சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கவில்லையா-? அவன் இதை எங்கு-எங்கு பெற்றுக்கொண்டான்-? அவன் எந்த சபையைச் சேர்ந்தவன்-?" என்றனர். அவர் அவர்களில் ஒருவருரையும் சார்ந்தவர் அல்ல. நல்லது, எப்போது இந்த ஞானம் அவனுக்குக் கிடைத்தது-?” என்றனர்.
214. இயேசு அந்த வாக்குமூலத்தைக் கொடுத்தார். அது இன்றும் அதே காரியமாக இருக்கும். ஒரு தீர்க்கதரிசி அது முதல், தன் சொந்தமானவர்கள் மத்தியிலே கனமில்லாதிருப்பான் என்று அவர் கூறினார். இங்கிருக்கும் மக்களாகிய நீங்கள் அல்ல, ஆனால் நான் வளர்ந்த ஜெபர்சன்வில்லி-ன் சூழல் அப்படி உள்ளது. என்னுடைய எல்லா நல்ல மற்றும் கெட்ட தனிப்பட்ட விவரங்களை சுட்டிக்காட்டுபவைகளையும் ஒவ்வொரு காரியத்தையும் அனைவரும் அறிவீர்கள். அவைகளில் அதிகமானவைகள் மோசமானவைகளே. என்னை மன்னிக்கவும். ஆனால் இயேசு அறிவார். அது தெரியாது. தேவன் அதைப் பார்ப்பதில்லை. இயேசு அவை அனைத்தையும் தூரமாக எடுத்துச் சென்றார் ஆகையால் அதைக் குறித்து எதுவும் தேவனுக்குத் தெரியாது. நான் அதை 23 ஆண்டுகளுக்கு முன் அறிக்கை செய்த போது அவர் அவைகளை மறதியின் கடலுக்குள் போட்டு விட்டார். இப்பொழுது அதைப் பற்றி ஒன்றுமே அவருக்கு தெரியாது. அவருக்குத் தெரியாதல்லவா-? ஆகையால் அது-அது தேவனுடைய ஆசீர்வாதமாக இருக்கிறது.
215. இப்பொழுது, நம்முடைய சகோதரியுடன் நான் பேச விரும்புகிறேன். இப்பொழுது சீமாட்டியே இந்தப் பார்வையாளர்கள் ஒரு பெரிய காரியமாய் இருக்கிறார்கள். இங்கே 200 அல்லது 300 மக்கள், அல்லது அங்கே இருப்பது எதுவாகயிருந்தாலும், இந்தக் காலையில் இருக்கின்றனர். எனக்குத் தெரிந்தவரையிலும் நீங்களும் நானும் ஒருவரையொருவர் அறியாதவர்களாகவும், ஒருவரையொருவர், ஒரு போதும் பார்த்திராதவர்களாகவும், ஒருவருக்கு ஓருவர் அன்னியர்களாகவும் இருக்கிறோம். ஆனால், நீயோ...  நீயோ என்னை பார்த்து இருக்கிறாயா-? ஆமாம். ஒரு கூட்டத்தில், நீ எங்கிருந்தாய் கீழே கென்டக்கியில், நல்லது, நீ யார் என்று எனக்குத் தெரியாது என்று நான் குறிப்பிடுகிறேன். இல்லை.  அது சரியே. உம்-ஹூம். ஆமாம் இப்பொழுது இந்த சீமாட்டி சொல்லுவதை உங்களால் கேட்க முடிகிறதா, நீங்கள் அனைவருமே-? எனக்கு இவளுடைய விவகாரங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. கென்டக்கியில் என்னுடைய கூட்டம் ஒன்றில் அவள் இருந்தாள். அங்கே நாம் இருந்தோம், பின்பு, ஒருவருக்கொருவர் முழு அன்னியர்களாக இருக்கிறோம்.
216. இப்பொழுது, ஒருவேளை கர்த்தராகிய இயேசு... நான் என்னைப் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக்கொடுக்க முடியுமானால், இந்தப் பெண்ணைப் பற்றி சிலகாரியங்களையும் அல்லது எதற்காக அவள் இங்கே இருக்கிறாள், அது எதுவாக இருந்தாலும், கிணற்றின் அருகே இருந்த அந்த ஸ்தீரியைப் போன்று அல்லது அதைப் போன்ற ஒன்று, வாக்குரைப்பட்டுள்ள அனைத்தையும் நீங்கள் விசுவாசிக்கையில், அவர் என்னிடம் கூற முடியும்.
217. இப்பொழுது சீமாட்டியே, சக்கர நாற்காலியில் இருக்கும் நீ, அதை நீ விசுவாசிக்கின்றாயா-? சகோதரி ஈடித் உங்களால் கூடுமா-? உங்களால் கூடுமா, இங்கே எழுந்திருக்கவே முடியாமல் இருக்கும் சிறு சீமாட்டியே நீ விசுவாசிக்கின்றாயா, சகோதரியே, உங்கள் முழு இருதயத்தோடும்-? பாருங்கள். 
218. இப்பொழுது, எல்லாவிதமான வியாதியை உடையவர்களாக இங்கே இருக்கின்ற நீங்கள் அனைவருமே, நீங்கள் விசுவாசிப்பீர்களா-? இப்பொழுது நீங்கள் அதைச் செய்வீர்களானால் நீங்கள் அவரைத் தொடுங்கள், பாருங்கள். பின்பு நீங்கள் என்னை நாள் முழுவதும் தொட்டுக் கொண்டிருந்தாலும் அது ஒரு சிறு வித்தியாசத்தையும் உண்டாக்க முடியாது. பாருங்கள்-? நீங்கள் வந்து, என்னைத் தொடுங்கள் நான் அதை அறியாதிருப்பேன். ஆனால் நீங்கள் அவரை ஒரு விசை, தொடுங்கள். அவரைக் கவனியுங்கள். அவர் திரும்பிப் பார்த்து அதைக்குறித்து உங்களிடம் சொல்வார், பாருங்கள். ஒரு முறை விசுவாசத்தோடே அவரைத் தொட மாத்திரம் செய்யுங்கள். அதுவல்ல... நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவனல்ல, அவரே, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவர் (பாருங்கள்-?) நான் அவருடைய ஊழியக்காரன் மாத்திரமே.
219. இப்போது, மெய்யான பயபக்தியோடு இருங்கள். இந்த வழியாகப் பாருங்கள். ஒரு சில நிமிடங்கள் எந்தவொரு சந்தேகத்தின் நிழலுக்கும் அப்பாற்பட்டு இது நிரூபிக்கப்பட வேண்டும். இப்போது சகோதரி நாம் அந்நியராக இருந்து கொண்டு நான் சொல்கிறேன். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கிறோம்... ஆவியானவருக்கு என்னை அர்பணிப்பதால் நடைபெறுகின்ற ஒரு போராட்டம் எனக்குண்டு என்பதை நீங்களே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அது மிகச்சரியாக இருக்கிறது. ஏனென்றால் இது வீடாக இருக்கிறது. அது இங்கே இந்தக் கூடாரத்திற்குள் இருக்கிறது. அது அப்படி கிரியை செய்ய வேண்டிய விதத்தில் கிரியை செய்யவில்லை.. தேவனே எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியும். நீ இங்கு எதற்காக இருக்கிறாய் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அது எதுவாக இருந்தாலும் நீ உன்னுடையதை ஏற்றுக் கொள்கிறாயா, நீ உன்னுடைய வியாதிக்காக இங்கே இருப்பாயானால் உன்னுடைய சுகத்தை ஏற்றுக் கொள்வாயா-? உன்னுடைய பணப் பிரச்சனைகளுக்காக இங்கிருப்பாயானால், அது எதுவாக இருந்தாலும், அது இயற்கைக்கு மேம்பட்ட கிரியையாக இருக்கும், அது இருக்காதா-?
220. இப்பொழுது, இப்பொழுது தேவ குமாரனான இயேசுவின் நாமத்தில் ஒவ்வொரு ஆவியையும் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் நான் எடுத்துக்கொள்கிறேன்.
221. அந்த ஸ்தீரியானவள் என்னிடமிருந்து நகர்ந்து போகிறாள். ஆம், அவள் இங்கிருந்து வரவில்லை. வேறு எங்கோ இருந்து வருகிறாள், ஒரு தாழ்மையான குடும்பம். அவள் - அவள் வேதனைப்படுகிறாள். அவள் நிழலிடப்பட்டிருக்கிறாள். 
222. அவள் மரணத்தினால் நிழலிடப்பட்டிருக்கிறாள். அது ஒரு புற்றுநோய், அது சரியே. ஆனால் தேவன் ஒருவர் மட்டுமே உன்னை சுகமாக்க முடியும். அது உனக்குத் தெரியும். அது இருதயத்தின் ஆழத்தில் அல்லது மார்பகத்திலிருக்கிறது, மார்பகத்தின் மீது புற்றுநோய். அவள் அதை சோதனை செய்திருப்பதை நான் காண்கிறேன், சீமாட்டியே அது சரியா.
223. நீ, நான் இங்கு இருக்கும் இடத்திற்கு மேலே வருவதற்கு இயலுமாறு இருக்க, இங்கே வரும் வழியிலேயே ஜெபித்துக் கொண்டிருந்தாய். அந்த அளவிற்கு நீ ஜெபிக்கும் படியாக விடப்படுவதற்கு முன்பே இந்த மேடைக்கு வருவதற்கு உன்னால் முடிந்தது, அது சரியாய் இருக்கிறது. நான் உன்னுடைய சிந்தையைப் படிக்கவில்லை. அது உண்மையாய் இருக்கிறது. நீ அங்கே திரும்பிய போது, அந்த சூரியன் ஜன்னலின் உள்ளே உன்மேல் பிரகாசித்தது, நீ அதை அறிந்திருக்கிறாய். 
224.  தேவன் உன்னிடத்தில் பேசிக் கொண்டிருந்த போது, உன்னைப் போன்ற விசுவாசத்தை உடைய உனக்கு இந்த ஜெப வரிசை கிடைக்கும் என்று நீ அறிந்திருந்தாய். நீ இங்கே தான் இந்தக் காலையில் இங்கே அந்த மேடையின் மேல் இருக்கிறாய். அது சரியாய் இருக்கிறது. நான் உன் சிந்தையைப் படிக்கவில்லை. அது உண்மையாய் இருக்கிறது. இப்பொழுது அது உண்மையாக இருக்குமானால் உன்னுடைய கரத்தை உயர்த்து. இப்பொழுது நீ விசுவாசிக் கின்றாயா-? பார்வையாளர்களே, நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா-? (பார்வையாளர்கள் "ஆமென்” என்று கூறுகின்றனர்-ஆசி) சகோதரி விசுவாசமுடையவர்களாக இருங்கள், இங்கே வாருங்கள் சகோதரி.
225. இப்பொழுது பாருங்கள், நீங்கள் இங்கே இப்பொழுது பிரசன்னத்திற்குள் இருக்கையில் அது ஒரு மனிதனல்ல. இங்கே இருக்கும் ஏதோ ஒன்று என்று அறிந்து கொள்வீர்கள். அது உங்கள் சகோதரன் அல்ல. அங்கே ஏதோ ஒன்று இங்கிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சரியாக இருக்கவில்லையா-? உன்னைப் பற்றிய அனைத்தும் அவருக்குத் தெரியும். இப்பொழுது அது உங்களுடைய சுபாவத்தை நோக்கியதாக இருக்கிறது. அதைச் செய்வதற்கு இயேசுகிறிஸ்து என்னை அனுமதித்தார் என நீ விசுவாசிக்கிறாயா-? நீ - நீ செய், நீ விசுவாசி, பின்பு அந்த தேவன் உன்னை சுகப்படுத்துவார். உன் தலையைத் தாழ்த்து.
226. எங்கள் தயையுள்ள பரம தந்தையே, நீர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடைய தேவனாய் இருக்கிறீர். இங்கே இந்த கறுத்த மரண நிழலின் கீழ் இருக்கும் இந்த ஏழை ஸ்திரீயானவளை நீர் தொடவில்லை என்றால் அவள் சீக்கிரமாகப் போக வேண்டும் என்பதை அறிந்திருக்கிறாள். இங்கே இவள் இருக்கிறாள். இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவோடு இந்தக் காலையில் இங்கே மலர்கள் நிறைந்த இந்தக் கட்டிடத்தினுள் ஜனங்கள் மத்தியில் சுற்றி நடந்து கொண்டு இருக்கிறார். ஜீவிக்கின்ற வராகவும் அவர் அவளை நேசிப்பதை அறிய, அந்த ஸ்திரீயின் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு, அவருடைய ஊழியக்காரன் மூலமாகப் பேசிக் கொண்டும், வார்த்தையின் மூலமாகவும், பின்பு தீர்க்கதரிசனத்தின் மூலமாகவும் முயற்சித்துக் கொண்டும் இருக்கிறீர்.
227. பிதாவே, உம்முடைய ஊழியக்காரனாக நான் எனது கரங்களை அவள் மேல் வைத்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த பொல்லாப்பு அவளை விட்டு விலகும்படி கடிந்து கொள்கிறேன், ஆமென்.
228. இப்பொழுது, விசுவாசித்துக் கொண்டே போ, உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கக் கூடுமானால்... இப்பொழுது அது உன்னை விட்டுப் போய் விட்டது. பார்த்தாயா-? இப்போது, உன்னால் விசுவாசிக்க கூடுமானால். ஏனென்றால் எங்கே இருள் இருந்ததோ, உன்னைச் சுற்றிலும் இப்போது முழுவதுமே வெளிச்சமாக இருக்கிறது. இப்போது, இதை உன் இருதயத்தில் உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால் அது மறுபடியும் உன்னிடம் வராது. அவருக்கு துதி செலுத்திக் கொண்டே சென்று, புற்று நோயுடன் இருந்தவர்கள் மேலும் இப்பொழுது ஜீவனோடு இருக்கும் இந்த மக்கள் அங்கே பின்னால் அமர்ந்திருப்பதைப் போல அமர்ந்து கொள். நீயும் அவர்களுடனே ஜீவனோடு இருப்பாய், ஆமென்.
229. நீ விசுவாசிக்கிறாயா-? ஒவ்வொருவரும் அப்படியே உண்மையுள்ளவர்களாய் இருந்து விசுவாசியுங்கள். சந்தேகப்பட வேண்டாம். ஆனால், விசுவாசத்தோடு இருங்கள். தேவன் எல்லாவற்றையும் அறிவார், எல்லாவற்றையும் அவரால் செய்யமுடியும்.
230. இப்போது, நம்முடைய சகோதரி இங்கே இருக்கிறார்கள். உண்மையிலேயே அவள் எனக்கு ஒரு அந்நியள். அது சரிதானா சீமாட்டியே-? (அந்த சகோதரி, சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறார் - ஆசி) நாம் அந்நியர்கள், நான் இங்கே பிரசங்கித்துக் கொண்டிருக்கையில் எங்கள் கூடாரத்திற்கு இரண்டு முறை வந்திருக்கிறாய், எனக்குத் தெரியாமலிருக்கலாம், உனக்குத் தெரியும். எனக்குத் தெரியாது.. நீ எனக்கு சற்று அந்நியராகவே இருக்கிறாய். இப்போது, தேவனுடைய குமாரன், இயேசு கிறிஸ்து உனக்கு உதவ இங்கே இருக்கின்றதை நீ விசுவாசிக்கின்றாயா-? அவரைப் பற்றி வேதாகமத்திலிருந்து நான் பிரசங்கித்த செய்தியை நீ விசுவாசிக்கின்றாயா-? அவர் இப்பொழுது இங்கு இருப்பாரானால் அவர் எனக்குக் கொடுத்த சூட்டை அவர் அணிந்து கொண்டு இருப்பார் என நீ விசுவாசிக்கிறாயா-? அதை அவர் கூறலாம். (ஒலிநாடாவில் வெற்றிடம் -ஆசி)
231. தேவனிடத்தில் விசுவாசமாயிரு. இப்போது, உண்மையான பயபக்தியோடு இரு. அமைதியாக நில். பயபக்தியோடு இரு.
232. அவர் எனக்காக கொடுத்த இந்த சூட்டை அவர் அணிந்துகொண்டு இருந்தால் நீங்கள் வியாதியாக இருப்பதாக நீங்கள் வந்து கூறுவீர்கள், அவ்வாறு இருப்பதாக எனக்குத் தெரியாது. நீங்கள் வியாதியாய் இருப்பீர்களானால், அவர் கூறலாம்.... நீங்கள் கூறலாம், "கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை சுகமாக்குவீரா-?”.
233. அவர் உனக்கு என்ன கூறுவார் என்பதை நீ அறிந்திருக்கிறாயா-? "என் பிள்ளையே நான் உனக்காக மரித்து உன்னுடைய நீதிக்காக எழுந்த போதே நான் அதைச் செய்து விட்டேன்” என்று அவர் கூறலாம், அதை நீ விசுவாசிக்கிறாயா-? இனி மேல் அதை அவர் செய்யமுடியாது. ஒரு விசை அவர் அதை முன்பே செய்து விட்டார். நீ பார்க்கிறாயா-? அவர் மரிக்கும் போது உன்னை இரட்சித்தது போன்று, இப்போது அவர் எழுந்து பின்பு நீ... உன்னுடைய நீதிமானாகுதலுக்காக, உன்னுடைய வியாதிக்கும் அதே காரியம் தான்.
234. இப்போது, அவர் அந்த பெண்ணிற்கு செய்தவி தமாக அவர் உன்னைப்பற்றி உன்னிடமே சில காரியங்களை கூறுவதற்குப் போதுமானவராக இருக்கிறார். அவர் செய்வதற்கு விட்டுவிட்ட ஒரே காரியம் அதுதான், பாருங்கள்-? அவர் ஒரு போதும் ஒரு சாட்சி இல்லாமல் விட்டுவிட்டதில்லை. அவர் அந்த சாட்சியை இங்கே வைத்துள்ளார், அந்த பரிசுத்தாவியானவர் அவருக்குத் தொடர்ந்து சாட்சியாய் இருக்கிறார். அது சரி தானே-?
235. இப்போது, நீ-நீ இங்கிருந்து வரவில்லை, வேறு ஒரு இடத்திலிருந்து நீ வந்திருக்கிறாய். அது சரியாக இருக்கிறது. மலை சார்ந்த தேசம். அது சரியாக இருக்கிறது. நிறைய, மற்ற மரங்களின் ஒழுங்கிலிருந்து மாறுபட்ட அகன்ற இலையை உடைய மரம் மற்றும் காரியங்கள், அனேகமாக கென்டக்கி, அது சரியே. நீ ஒரு காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறாய், நான் உன்னை உன் வீட்டில் காண்கிறேன். நீ மிகவும் பயந்து, குழம்பியுமிருக்கிறாய். ஆம். அச்ச உணர்வடைந்து இருக்கிறாய், உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை . அது ஒரு பயங்கரமான காரியம். நீ முன்னும் பின்னும் நடந்து, ஏதோ ஒன்றைச் செய்து கொண்டு பார்ப்பதற்கு சமையல் அறையிலிருந்து மற்ற அறைக்கு எல்லா நேரத்திலும் பின்பாகவும் முன்பாகவும் போவது போன்று - போன்று நான் உன்னைக் காண்கிறேன். நீ உண்மையிலேயே அச்ச உணர்வடைந்திருக்கிறாய். அது குறிப்பாக மதிய வேளையில் நீ உண்மையில் பெலவீனம் அடைந்திருக்கிற போது தான். அது சரியாய் இருக்கிறது.
236. இங்கிருக்கும் ஏதோவொன்று உன்னை அறிந்திருக்கிறதை நீ அறிவாய், உனக்கு அப்படி இல்லையா-? அது தவறாததாய் இருக்கிறது. அது சரியாய் இருக்கிறது. அது உண்மை அப்படித் தானே ஹூம்ம். பார்-? இப்போது இங்கே என்ன-? அது நின்று கொண்டு, நீ வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிந்து கொள்ளச் செய்யுமா-? அங்கே யாரோ ஒருவர் மனிதனைக் காட்டிலும் மேலான ஒருவராக இருக்கிறார். அது இயேசுவாக இருக்கிறார். அது சரியே. உனக்கு உட்புறமாக ஏதோவொன்றைப் பெற்றிருக்கின்றாய் என்பதை நான் காண்கிறேன். அது உனக்கு உட்பகுதியில் உள்ள வளர்ச்சிகள். அது சரியே வெளிப்புறத்திலும் நீ ஒன்றைப் பெற்றிருக்கிறாய். அதுவும் சரியே. அது உனது முழங்கைக்குக் கீழ் இருக்கிறது. அது ஒரு முடிச்சி. அது உனது வலது முழங்கைக்குக் கீழ் இருக்கிறது. அது சரியாய் இருக்கிறது. அது சரியாக இருக்கவில்லையா-?
237. நீ விசுவாசிக்கின்றாயா-? அவர் மரித்தோரிலிருந்து எழுந்ததை நீ விசுவாசிக்கின்றாயா-? இங்கே வா.
238. அன்பின் தேவனே, இந்த எங்கள் பிரியமுள்ள சகோதரி மேல், அவளுடைய சரீரத்தின் வியாதிகளை நாங்கள் கடிந்து கொள்கிறோம். சுகமடைந்த நபராக அவள் வீட்டிற்குச் செல்வாளாக. இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் செய்கின்றோம். ஆமென்.
239. சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, இப்பொழுது களிகூர்ந்து சென்று மகிழ்ச்சியாய் இருங்கள். உன் முழு இருதயத்தோடே விசுவாசி, தேவன் உனக்கானதை அதிகமாகச் செய்வாராக.
240. இளம் சிவப்பு மேல் அங்கியையும் கண்ணாடிகளையும் அணிந்துள்ள சிறு பெண் கரியமுடியோடு, என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இந்த நேரத்தில் அவள் ஆவியோடு ஒரு அற்புதமான தொடர்பைப் பெற்றிருக்கிறாள். அவளை தொந்தரவு செய்யும் ஒன்றைத் தலைவலியின் தொல்லையால் அவள் வேதனைப்படுகிறாள். அது சரியே. இளம் சிவப்பு மேல் அங்கியுடன் அங்கிருக்கும் சீமாட்டியே நீ, அது சரியே. விசுவாசமுள்ளவளாயிரு, விசுவாசி. நான் என்ன குறிப்பிடுகிறேன் பார்த்தாயா-? நீ இங்கு இருக்க வேண்டியவள் அல்ல, நீ அங்கு இருக்க வேண்டியவள் விசுவாசம் உடையவளாயிரு.
241. சீமாட்டியே நீ எப்படி இருக்கிறாய்-? நீ உன் முழு இருதயத்தோடும், நீ உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு சிந்தையோடும் விசுவாசிக்கின்றாயா-? நீ மிகவும் அதிகமாக பதட்டம் அடைந்திருக்கின்றாய். ஆம் அம்மா உண்மையில் உன் வயதில் உள்ள ஒரு ஸ்திரீக்கு இருக்கும். தொல்லையானது உனக்கிருக்கிறது. அது உனக்கு பதட்ட உணர்வை உண்டாக்குகிறது. ஆனால் உனக்கும் கூட, உனக்குள் ஒரு வளர்ச்சி இருக்கிறது, வயிற்றில் அந்த வளர்ச்சி இருக்கிறது, உன் பக்கவாட்டில் உனக்கு ஒரு சிறிய தொல்லை இருக்கிறது. அது உன்னுடைய கல்லீரலாக இருக்கிறது. மறுபக்கத்தில் ஒரு சிறுநீரகத் தொல்லை உனக்கு இருக்கிறது. அது மிகச்சரியே. மருத்துவர் அவ்வாறே கூறியிருக்கிறார். ஆகையால் அது- அது சரியாய் இருக்கிறது. எனவே தான் அவர் உன்னிடம் கூறியிருக்கிறார், அது அப்படி இல்லையா, இப்போது நீ சுகமடையப் போகிறாய் நீ விசுவாசிக்கின்றாயா-? ஏதோவொன்று உன்னைத் தாக்குகிறது. அது அப்படி இல்லையா-? நீ அதை விசுவாசிக்கக் கூடுமானால், அது தான் அவருடைய சுகமாக்கும் வல்லமை ஆமென்.
242. எங்கள் பரம பிதாவே, அந்த ஸ்திரீயை சுகப்படுத்தி, அவளைக் குணமாக்கும் என்று உம்முடைய பிரியமுள்ள குமாரன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென். சீமாட்டியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக-! சந்தேகப்படாதே, விசுவாசம் உடையவளாக இருந்து விசுவாசி.
243. ஒவ்வொருவரும் அவரை விசுவாசிக்க வேண்டும். அது சரியே. சகோதரி உட். நான் சொல்லப் போவதில்லை , இருக்கலாம். எனக்குத் தெரியும் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள்-? விசுவாசமுடையவர்களாக இருங்கள். ஆனால் உங்களுக்கு இனி கட்டி இல்லை . அது சரி.
244 அங்கே அழுதுகொண்டிருக்கிற சகோதரியே நீ உன் கண்களுக்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறாய். 
245. அப்படி நீ செய்ய வில்லையா-? இங்கே சரியாக பழுப்பு நிற சூட்டுடன் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். ஆம். இப்போது விசுவாசித்துக் கொண்டிருக்கிறாய்” அது சரி தானே-? அது சரியாக இருக்குமானால் உன் கரத்தை உயர்த்து. இதை நான் உனக்குச் சொல்லலாமா-? உனது இருதயத்தின் இரகசியங்களை தேவன் எனக்கு வெளிப்படுத்திக் கொடுக்க முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா, அதை நீ விசுவாசிக்கின்றாயா-? உன்னுடைய கண்களுடைய சுகத்தைத் தவிர தேவனிடமிருந்து ஏதோ ஒன்றையும் கூட விரும்புகிறாய். ஊ-ஹூ பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை நீ விரும்புகிறாய், அது சரியே. அது சரியாய் இருக்கிறது. உனது கரத்தை உயர்த்து. எல்லாம் சரி. இப்பொழுது நீ அதைப் பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைத் தந்தருள்வாராக.
246. இல்லை, நான் அவளுடைய சிந்தையைப் படிக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லை, இல்லை. அது, அதுவல்ல அதைக் கூறாதீர்கள். ஹூ ஊ அது பரிசுத்தாவியாய் இருக்கிறது. அவள் இருக்கவில்லை ...அவள் தேவனுடைய ஆவியில் ஒருவிதமாக தன்னில் தானே அப்படியே நிறைந்து கொண்டிருக்கிறாள். உனக்கு விசுவாசமுள்ளது. நம்பு.
247. சீமாட்டியே நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்-? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கின்றோம். தேவன் இரகசியங்களை வைத்துக் கொள்வதில்லை. இரகசியங்களை அவரால் வெளிப்படுத்த முடியும். நாம் ஒருவருக்கொருவர் அந்நியராக இருக்கிறபடியால், ஒருவரையொருவர் அறியோம், ஒருவரையொருவர் வாழ்க்கையில் பார்த்ததேயில்லை என நான் ஊகிக்கிறேன், ஆனால் இருவரையும் தேவன் அறிவார். நம் இருவரையும் அவர் போஷித் திருக்கிறார். இங்கே இருக்கின்றீர்கள், ஒரு ஸ்திரீயாகவும் நான் ஒரு மனிதனாகவும் நின்று கொண்டிருக்கிறோம். இங்கே நாம் இருக்கின்றோம். நீங்கள் ஒரு கிறிஸ்தவ விசுவாசியாக இருக்கிறீர்கள். நீங்கள் -நீங்கள். ஏனென்றால் உங்களுடைய ஆவி வரவேற்பை உணருகிறது, நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்கிறீர்கள். மேலும் கண்ணாடிகளை அணிந்திருக்கிறீர்கள். நான் அதைக் காண்கிறேன். நீங்கள் கண்ணாடிகளை அணிந்து கொள்ளவில்லை என்றால் யாரேனும் அங்கே உங்கள் கண்களில் தவறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அனேகமாக தவறாய் இருக்கின்ற வேறு சிலவற்றை அவர் என்னிடம் காண்பிக்கலாம். அவருக்குச் சித்தமா என்று நான் அறியேன். நான் அவரிடம் கேட்கவேண்டும். ஆனால் அவருக்குச் சித்தமானால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா-? பார்வையாளர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா-?
248. ஆம், அம்மா உங்களுக்கும் கூட ஒரு வளர்ச்சி இருக்கின்றது. ஒரு அறுவை சிகிச்சையை எதிர்கொள்ள இருக்கின்றீர்கள். நீங்கள் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்று மருத்துவர் கூறுவதை நான் காண்கிறேன். அவர் உங்கள் நாவை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வளர்ச்சியானது உங்கள் நாவில் உள்ளது. அது சரியே. அது உங்கள் சரீரத்தில் உள்ளது, அது சரியே. அது உண்மையாய் இருக்கிறது. உம்...ஹூம் அவர் இங்கிருக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கின்றறீர்களா-? அதிலிருந்து ஜீவனை அவர் எடுத்துப்போட முடியுமென்பதையும் அது அகன்று போகும் என்பதையும் நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா, இங்கு வாருங்கள்.
249. ஓ, தேவனே ஜீவனின் அதிபதியே, நித்திய ஜீவனைத் தருபவரே இந்தப் பெண்ணிற்கு உம்முடைய ஆசீர்வாதங்களைத் தாரும், அவளை நான் உமது நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். இதைக் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். சீமாட்டியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக-! இப்பொழுது விசுவாசமுடையவர்களாக விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள்.
250. எனக்கு முன்பாக நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன். அது ஒரு பெண், அவளுடன் அவள் ஒரு சிறுமியை உடையவளாக இருக்கிறாள். 
251. அந்தப் பெண் சர்க்கரை வியாதியுடையவளாக இருக்கிறாள். அந்தச் சிறிய சிறுமி அவளுடைய முழங்கையைக் காயப்படுத்திக் கொண்டாள். அவள் ஒரு படுக்கையிலிருந்து விழுந்தோ அல்லது ஏதோவொன்று அவள் முழங்கையைக் காயப்படுத்தியுள்ளது. அந்த நபர் இங்குள்ளார். உம்-ஹூம், ஆமென் அங்கே நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் கரத்தை உயர்த்துங்கள், அன்பே. இது அங்கே இருக்கிறது. 
252. இப்பொழுது அது எல்லாம் முடிந்து விட்டது. உம்-ஹூம், உம்-ஹூம், உங்களுடைய விசுவாசம் அவரைத் தொட்டது, ஆமென். இந்த வழியாகப் பார்த்துக் கொண்டும், அவர்களோ பின்பாகவும் இருக்கையில் நான் எப்படி உங்கள் சிந்தையைப் படிக்க முடியும்-? இப்பொழுது உங்களுக்கு எல்லாமே சரியாகி விட்டது. இப்பொழுது அது உங்களுக்கு தீங்கிழைக்கவில்லை. அது அப்படியில்லையா அன்பே-? இப்பொழுது அது எல்லாமே சென்று விட்டது. சுகத்துடன் சென்று கொண்டிரு.
253. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று நாம் சொல்வோமாக. (சபையோர், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறுகின்றனர்-ஆசி) 
254. "நீ விசுவாசிக்கக் கூடுமானால், நீ விசுவாசிக்கக் கூடுமானால் யாவும் கைகூடிடும், 
255. "இப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, தேவனுடைய குமாரனே, மரித்தோரை உயிர்ப்பித்தவர், தமக்குச் சித்தமானவைகள் எவைகளோ அவைகளை அவர் செய்கிறார். அவர் சர்வ வல்லமையுள்ள ஒருவராய் இருக்கிறார்.
256. என்னே-! மேடையின் மீது என்னால் ஜனங்களைக் கொண்டுவர முடியவில்லை. அவர்கள் பார்வையாளர் மத்தியில் இருக்கின்றனர். இப்பொழுது, உங்களுடைய விசுவாசம் சரியாக அசைகின்றது.
257. சகோதரி உட், அது உங்களுக்கு என்று நான் நினைத்தேன். ஆனால் அதுவோ அங்கே உங்கள் அருகாமையில் அமர்ந்துள்ள மனிதனுக்காக நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்களா-? சுகமடையும்படியாக மிச்சிகானிலிருந்து வந்திருக்கின்றீர்கள், ஸ்டர்கிஸ், மிச்சிகானிலிருந்து அது சரியே. என் வாழ்க்கையில் உங்களைப் பார்த்ததே இல்லை. ஆனால் அது சரியாகத் தான் இருக்கிறது. வீட்டிற்குச் சென்று சுகமாயிருங்கள். இப்பொழுது உன் விசுவாசம் உன்னைச் சுகமாக்கிற்று.
258. ஓ, எவ்வளவு ஆச்சர்யமானது. நீ ஏன் அவரை விசுவாசிக்கக்கூடாது-? கூடாரத்தைச் சார்ந்த நீ இவைகளை கவனித்துக் கொண்டு வருடக்கணக்கில் வந்தும் சென்றும் கொண்டிருக்கிறாய், உனக்கு விசுவாசமில்லையா-?
259. ஸ்திரீயே உனக்காக ஜெபித்துக் கொண்டிருப்பது உன்னுடைய கணவர். அது சரியாய் இருக்கிறது. அவர் தேவனோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றார். நீயும் கூட. இங்கே இந்த வரிசையில் வருவதற்கு உனக்கு ஒரு ஜெப அட்டை கிடைத்திருக்கிறது. நான் உனக்குக் கூறுவதை விசுவாசிப்பாயானால்... நீங்களும் ஜெபிக்கின்றீர்கள் அப்படி இல்லையா, ஐயா-? நீங்களும் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் அப்படி இருக்க வேண்டியதில்லை. கோரமான ஒரு வடிவத்தில் உள்ள நரம்புகள் உங்களை விட்டு விட்டது, இரவில் தூங்க முடியவில்லை. நீங்கள் இங்கிருந்து, வரவில்லை நீங்கள் வடக்கிலிருந்து, தெற்குக்கு வந்திருக்கின்றீர்கள் நீங்கள் ஒரு பெரிய பட்டணத்திலிருந்து வந்திருக்கின்றீர்கள், அங்கே ஒரு நதி பட்டணத்தினூடாக ஓடுகிறது. அதுசரியே.
260. நீ நீண்டகாலமாகவே இவ்விதமாகத் தான் இருக்கிறாய். ஸ்திரீயே நீ அப்படி இருக்கவில்லையா-? மேலும் ஒரு புற்றுநோயோ அல்லது ஏதோவொன்றிலிருந்து நீ ஒரு முறை சுகம் அடைந்திருக்கிறாய். அது சரியே. உன்னோடு இருந்த சிலவிதமான நிலமையிலிருந்து, தேவன் உன்னை சுகமாக்கினார். இப்பொழுது உனக்கு ... இரவில் உனக்கு இளைப்பாறுதல் உண்டாயிருக்க, பிரசங்கிமார்கள் மற்றும் காரியங்களை உனக்காக ஜெபிக்கும்படி நீ அழைக்கின்றாய், அது போன்ற காரியங்கள். நீ வேயின் கோட்டையிலிருந்து வருகின்றாய். அது சரியாய் இருக்கிறது.
இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்க முடியும் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றாயா-? இப்போதும் அவருடைய வல்லமையானது உன்னை சுகமாக்கும் என்று விசுவாசிக்கின்றாயா-? நீ சீக்கிரமாக ஒரு பிடியை எடுத்துக் கொள்ள வேண்டும், சகோதரி. உன்னால் கூடுமானால் உன் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்து உன்னை சுகப்படுத்துவார்.
சகோதரன் உட், அங்கே அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் மேல் உங்கள் கரத்தை வையுங்கள்.  ஓ, தேவனே, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரே, இந்தப் பிசாசு, இந்த ஏழைப் பெண்ணையும் அவளுடைய ஏழைக் கணவரையும் தொல்லைகளின் மேல் தொல்லையால் கட்டி இருக்கிறான். ஓ, தகப்பனே, அவர்களுடைய விசுவாசமானது உம்மைத் தொடர்பு கொள்ளுமானால், நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன். தேவனே அவளுடைய சரீரத்திலிருந்து அந்த நிலைமையை நீர் இப்பொழுது அப்படியே அகற்றுமாறு நான் ஜெபிக்கின்றேன். இந்த மணிவேளையிலிருந்து அவள் சுகமடைவாளாக, ஆரோக்கியம் அடைவாளாக.
261. ஓ, தேவனே இயேசுவின் நாமத்தில் அந்தப் பிசாசை நான் கடிந்துகொள்கிறேன். இந்தக் காலையில் இரண்டு கரங்களையும் உயர்த்தினவளாக களிகூர்ந்து கொண்டும் தேவனை துதித்துக் கொண்டும் இக்கூடாரத்தை விட்டுப்போவதற்கு அந்தப் பெண்ணிற்குத் தேவனுடைய குமாரனில் விசுவாசிப்பதற்கு, விசுவாசத்தைத் தாரும். தேவனுடைய குமாரன் இயேசுகிறிஸ்துவின் மூலம் ஆமென்.
262. சகோதரியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக "முடிந்தது” என்று அதை அழை, சரியானதை "சரியானது” என்றும் தவறை “தவறு” என்றும் அழையுங்கள். அது சரியாய் இருக்கிறது, ஆமென். தேவனிடத்தில் விசுவாசமாயிரு. நீ விசுவாசிக்கக் கூடுமானால் இயேசு கூறியிருக்கிறார்.
263. எனக்கு இடது புறத்தில், அங்கே ஒரு இருளின் ஆவி அந்த மூலையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. அங்கே அந்த மூலையில் அங்கே பின்னால் அமர்ந்திருக்கும் அந்த நபர் வலிப்பு நோயினால் துன்புற்றுக் கொண்டிருக்கிறார். கறுத்த முடியை உடைய ஐயா, எழுந்து நில்லுங்கள். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கினார் என்று விசுவாசிக்கின்றாயா-? எல்லாமே சரி. பின்பு செல்லுங்கள். கிறிஸ்து உங்களை சுகமாக்குவாராக. நீங்கள் விசுவாசிப்பீர்களானால் உங்களுடைய விசுவாசம் அதைச் செய்யும். தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள்.
264. இங்கு கவனியுங்கள், நீங்கள் அவரை விசுவாசிப்பாயானால் தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள். உங்களால் விசுவாசிக்க முடியுமா-? மீதமிருக்கின்ற உங்களில் யாராவது இந்தவிதமாகப் பார்த்து விசுவாசியுங்கள். உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்க முடியுமானால், நீ எதைக் கேட்டாயோ அதை உன்னால் பெற்றுக் கொள்ள முடியும்.
265. இங்கு ஒரு மனிதன் அமர்ந்துள்ளார், இங்கே சரியாக வெளிப்புறத்தில் வரிசையில், வழியில் பின்னால் அந்தப் பின்புறம் நோக்கி அமர்ந்துள்ளார். அவர் தலைவலிகளினால் வேதனைப்படுகிறார். இந்த ஊரில் இருந்து அல்லாமல் அவர் - அவர் மோன்டானாவிலிருந்து வருகிறார். அவர் சிறிய தலையை உடைய ஒரு மனிதன். அவர் கண்ணாடியை அணிந்து கொண்டிருக்கிறார். அவர் தமது கரத்தை இப்போது உயர்த்தியிருக்கிறார், அது சரியே. ஐயா ஒற்றைத் தலைவலி, ஓர் அழகான தேசத்திலிருந்து நீங்கள் வருகின்றீர்கள். அந்த நாட்டில் நான் வேட்டையாடி இருக்கின்றேன். நீங்கள் வீட்டிற்குத் திரும்புவீர்களாக. அந்தத் தலைவலிகள் மறதியின் கடலில் இருக்கும், என் சகோதரனே ஒற்றைத் தலைவலி உங்களை விட்டு விலகுகிறது. போய் சுகமாக இருங்கள், இயேசுவின் நாமத்தின் மூலம் சுகமாயிருங்கள். 
266. ஜெபர்ஸன்வில் மக்களாகிய உங்களைக் குறித்து என்ன-? உங்களுக்கு விசுவாசமில்லையா-? நான் உங்கள் சகோதரன், தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், விசுவாசியுங்கள். ஸ்திரீயே நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா-? நான் உங்களுக்கு ஒரு அந்நியன். 
267. ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் இங்கிருந்து ஒன்றும் வரவில்லை. ஓகியோவிலிருந்து வருகின்றீர்கள். அவளும் கூட ஓகியோவிலிருந்து, வருகிறாள் அது சரியே. நீ ஹேமில்டனிலிருந்து, வருகிறாய் அது சரியே. திரு ஆலன் நீங்கள் வீட்டிற்குச் சென்று சுகமாக இருக்க முடியும். உங்களுடைய கேட்கும் திறனைப் பெற்றுக் கொண்டீர்கள், ஆமென். 
268. அவளுடைய பெயர் எனக்கு ஏன் தெரியும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். கர்த்தராகிய இயேசு அவனுடைய பெயர் இன்னதென்று பேதுருவிடம் சொல்லவில்லையா... அவன்... பெயர் கேபா என்றும் அவன் பேதுரு, "சிறிய கல்” என்றும் அழைக்கப்படுவான், நிச்சயமாக உன்னுடைய பெயரை அவர் அறிந்திருக்கிறார். நீ எங்கிருந்து வருகிறாய் என்றும் உன்னைப் பற்றி அனைத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். அல்லேலூயா. 
269. அந்த மார்ச்சளி நோய் உன்னிடத்தில் இருந்து தூரப்போகிறது. கர்த்தராகிய இயேசு உன்னைக் குணமாக்கி உன்னை ஆசீர்வதிப்பார், சுகமடைவாயாக. 
270. இப்பொழுது, இங்கே உங்கள் ஒவ்வொருவரையும் குணமாக்க அவர் இங்கிருக்கிறதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா-? (சபையோர் “ஆமென்” என்று கூறுகின்றனர்-ஆசி)
271. குழந்தைக்காக யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். நாபியின் மேல் வெடிப்பு, ஏற்பட்டுள்ள ஒரு சிறு பெண் அது சரியே. சகோதரி, ஆமென். 
272. உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்-? தேவனுடைய குமாரன் இயேசு இங்கிருக்கிறார், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்தார். 
273. ஐயா, அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கும் உங்களுக்கு இனப்பெருக்க உறுப்பில் சிக்கல் இருக்கிறது. உண்மையான பதட்ட உணர்வு. தேவன் உங்களைக் குணப்படுத்தவும், சுகப்படுத்தவும் முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா-? எல்லாம் சரியே. ஐயா, உங்கள் விசுவாசமே உங்களை சுகமாக்கியது. இப்போது நீங்கள் வீட்டிற்குச் சென்று நலமாக இருக்க முடியும். ஒரு ஜெப அட்டை இல்லையா உங்களுக்கு-? ஜெப அட்டை இல்லை. எல்லாம் சரி தான். உங்களுக்கு இருக்க வேண்டியதில்லை. 
274. எந்த ஜெப அட்டையும் உங்களுக்கு அவசியமில்லை. உங்களுக்கு தேவை விசுவசாமே. நீங்கள் அவரை விசுவாசிக்கின்றீர்களா-? ஆம், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் இங்கிருக்கிறார். இது ஈஸ்டர், அந்த உயிர்த்தெழுதலாய் இருக்கிறது. எத்தனை பேர் சுகமாக வேண்டும்-? நான் சொல்வதை நீங்கள் செய்வீர்களா-? உங்கள் வாழ்க்கையில் இருக்கும் காரியங்களை அல்லது நீங்கள் செய்திருக்கும் காரியங்கள், நீங்கள் யார், அல்லது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்களைப் பற்றிய அனைத்தையும், நான் அறியும்படி செய்ய தேவனால் கூடுமானால், அது இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே அன்றி அது வேறு என்னவாக இருக்கிறது. நிச்சயமாக அது அப்படியாக இருக்கிறது. 
275. நீரழிவு நோய் மூட்டுவலி, இயேசுகிறிஸ்து உன்னை சுகமாக்க முடியும் என்று நீ விசுவாசிக்கின்றாயா-? நீ விசுவாசிக்கக் கூடுமானால் நீ பெற்றுக் கொள்வாய். தேவனிடத்தில் விசுவாசமாயிரு. இப்பொழுது, பரிசுத்தாவியானாவர் என்னிடத்தில் கூறுகிறார். இங்கே, இந்த மேடையில் தரிசனமானவர் இங்கே ஜனங்களாகிய உங்கள் மத்தியில் ஆற்றின் மேல் இறங்கி முதலில் தரிசனமானவர், என்னிடம் கூறிக் கொண்டிருப்பவர், அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். மேலும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததை அவரே நிரூபிக்கிறார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கின்றார். உங்களுடைய சுகமாகுதல் தேவனுடைய கரங்களில் இருக்கிறது. அவர் முன்னமே அதைச் செய்துவிட்டார். 
276.  இயேசு உங்களை சுகமாக்கப்போகிறார் என்பதை உங்களில் எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள், அதற்கு உங்கள் விசுவாசமே போதுமானது. 
277. இப்போது, கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன், சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களானால், நான் இப்பொழுதே சுகமாவேன், என்று கூறுங்கள், நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களானால்-?" நீங்கள் இதைச் செய்வீர்களா-? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பின்பு நான் உங்களுக்கு கர்த்தருடைய மகிமையைக் காண்பிப்பேன், ஆமென். 
278. ஜனங்களே என்னை நம்புங்கள். நான் உங்களுடைய சகோதரன். நான் இங்கே உங்கள் மத்தியில் தான் வளர்ந்தேன். ஒருமுறைக் கூட அது தவறியதில்லை. மேலும் இனி ஒருபோதும் அது தவறாது. நான் உங்களுக்குக் கூறுகின்றேன், இப்பொழுது அந்த பரிசுத்த ஆவியானவர் மங்கலான அக்கினி போன்று இந்தக் கட்டிடத்தினூடாக அசைவாடிக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்களுக்கு மேலாகச் சுற்றிலும் அசைவாடிக் கொண்டிருக்கிறார். உங்களை சுகமாக்குவதற்கு அது இங்கே இருக்கிறது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களானால் உங்களுக்கு விசுவாசத்தைக் கொடுக்க அது இங்கிருக்கிறது. இப்பொழுது, உங்கள் கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். 
279. ஓ, தேவனே-! எங்கள் தயையுள்ள பரலோகப் பிதாவே, உமது பரிசுத்த ஆவியானவர் இந்த பார்வையாளர்கள் மேல் அசைவாடி, அப்படியே இப்பொழுது உம்முடைய திவ்ய பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் சுகமாக்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். இந்தப் பார்வையாளர்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்கும், ஜெபர்ஸன்வில்லின் கறுப்புத் தன்மை அனைத்தையும் பரிசுத்தாவியானவர் எடுத்துப் போடுவாராக. உமது மகிமையானது இந்தக் கட்டிடம் முழுவதுமாக அடித்துக் கொண்டு போய் இங்கிருக்கும் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 
280. இப்பொழுது, நீங்கள் வணங்கிய தலைகளுடன், நீங்கள் வணங்கிய தலைகளுடன் இதைத் தேவனிடம் கூறுங்கள். "தேவனே” என்று உரத்த சத்தமாய், "தேவனே, (பார்வையாளர்கள் சகோதரன் பிரன்ஹாமோடு அந்த ஜெபத்தைத் திரும்பக் கூறுகின்றனர்-ஆசி) நான் இப்பொழுது விசுவாசிக்கிறேன். கர்த்தாவே இதற்கு மேலும் நீர் ஒன்றும் செய்ய முடியாது. நீர் உம்முடைய அடையாளங்களைக் கொண்டு அதை நிரூபித்தீர், உம்முடைய வேதாகமத்தைக் கொண்டு நிரூபித்தீர், நீர் உம்முடைய ஊழியக்காரனைக் கொண்டு நிரூபித்தீர், நீர் உமது வார்த்தையைக் கொண்டு நிரூபித்தீர், நீர் இங்கிருக்கிறீர் இப்போது நான் விசுவாசிக்கிறேன், தேவன் என்னை சுகமாக்கினார், இந்த நேரம் முதல் இந்த கூடாரத்திலிருந்து களிகூர்ந்து கொண்டும் என்னுடைய சுகத்துக்காக உம்மைத் துதித்துக் கொண்டும் நான் செல்கிறேன், இயேசுவின் நாமத்தில்”. இப்போதும் நீங்கள் வணங்கிய தலைகளுடனும் மூடப்பட்ட கண்களுடனும் மூடியும், இப்பொழுது இதைச் சந்தியுங்கள். "ஓ, தேவனே-! இப்பொழுது நீர் எனக்குள்ளாக வந்து கொண்டிருக்கிறீர். நான் உமது பிரசன்னத்தை உணருகிறேன். என் ஆத்துமாவிற்குள்ளாக இப்பொழுதே நீர் அசைவாடிக் கொண்டிருக்கிறீர். கர்த்தராகிய இயேசுவே நீர் இங்கிருக்கின்றீர். நான் கிலேயோப்பாவைப் போல இருக்கிறேன். ஒரு நீண்ட நேரமாக உம்மோடு நடந்துள்ளேன். இந்தவிதமாக நான் அதை உணரவில்லை, கர்த்தாவே, ஆனால் இங்கு நீர் சிலவற்றை சரியாக இங்கே இந்தக் கட்டிடத்திற்குள்ளாக செய்து நீர் அதே இயேசுவாகவே இருக்கின்றீர் என்பதை எனக்கு நிரூபித்திருக்கின்றீர். நீரே மரித்தோரிலிருந்து எழுந்தும் இருக்கின்றீர் என்று நான் உம்மை விசுவாசிக்கின்றறேன். நான் உம்மை விசுவாசிக்கின்றேன், கர்த்தாவே இப்பொழுதும் நீர் இங்கேயே என்னுடனே இருக்கின்றீர், நானும் இப்பொழுதே சுகமடைந்து கொண்டிருக்கிறேன். பெலத்தை நான் உணருகிறேன். சிறப்பானதை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். என் பெலன் என்னிடத்தில் வந்து கொண்டிருக்கிறது. 
புற்றுநோய், வியாதிகள் என்னை விட்டு விலகுகிறது, நான் இப்பொழுதே கிறிஸ்துவினிடம் வந்து கொண்டிருக்கிறேன்”. நீங்கள் வணங்கிய தலைகளுடன் மேய்ப்பர் ஜெபத்தில் நடத்திக் கொண்டிருக்கிற வரையிலும் களிகூர்ந்து கொண்டிருங்கள், 
ஜெபித்துக் கொண்டே இருங்கள்…

*******